இந்துத்வாவுக்காக தினம் தினம் பதிவுகள் எழுதி விவாதித்துக் கொண்டிருக்கும் ராம் நிவாஸ் கல்யாண ராமன் கைதையொட்டி நேற்று ஒரு பதிவு இட்டார். அதை அப்படியே தருகிறேன்.....
//வழமையா... ஃபத்வா போட்டு... தக்பீர் சொல்ல பிளான் பண்றவய்ங்க... புதுசா... போலீசு... கோர்ட்டுன்னு... போயிருக்காங்கே...
ஒருவேளை அறிவு வளர்ந்திடுச்சோ....
அய்யய்யோ... இவிங்களுக்கு அறிவுலாம் வளர்ந்திச்சுன்னா...
1400 வருசத்துக்கு முந்தின அரேபிய கலாச்சாரத்தை இங்கே எப்படி நிலைநாட்ட முடியும்..?...
போச்சா.. போச்சா... பி.ஜேவோட இம்புட்டு வருச உழைப்பு மண்ணோட மண்ணாப்போச்சா.....
பார்த்துக்கிட்டே இருங்க..... குரான்ல, ஹதீஸ்ல...... போலீஸ், கோர்ட்டுங்கிற வார்த்தைலாம் இல்லை...
அதனால ஏக இறை கொள்கையை ஏத்துக்கிட்ட ஈமாந்தாரிகள்..... போலீஸ், கோர்ட்டுன்னு போகக்கூடாதுன்னு... புதுசா ஒரு.....ஃபத்வா போடப் போறாய்ங்க.....//
நாம் நேரான வழியில் சென்றால் அவர்களுக்கு எரிகிறது பார்த்தீர்களா? நாமும் நரகல் நடையில் எழுத வேண்டும்: அவர்களின் கடவுள்களை திட்டி பதிவு எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் பிஜேபிக்கு ஆள் பிடிக்க முடியும்.
------------------------------------------------------------
இனி இந்து பிற்படுத்தப்பட்ட சகோதரர் ஒருவரின் பதிவையும் அவரின் உண்மையான அன்பையும் இனி பார்போம்.
//இந்துத்துவா சித்தாந்தம் பேசுபவர்களின் வெற்றி இசுலாமியர்களின் உணச்சிவசப்படுதலில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டால் இந்துத்துவா கொள்கை பேசுபவர்களை தோல்வியடைச் செய்யலாம்.
இசுலாமியர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக எந்த ஒரு இந்துவும் செயல்படுவதில்லை இந்துத்துவா சிந்தணையுடையவர்கள் அதை சரியாக செய்கின்றார்கள்.
இசுலாமியர்கள் அறிவுவசப்பட வேண்டும் உங்களுக்கு எதிரான தாக்குதல்களை அறிவுவசப்பட்டு எதிர்த்து வெற்றி காண வேண்டுமே தவிற உணர்ச்சிவசப்படுதலின் மூலம் அல்ல.
அறிவுவசப்பட்டு எடுக்கும் முடிவும் சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் ஃபேஸ்புக்கில் மத நல்லிணக்கத்தை சீர் குழைக்கும் வகையில் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாண் ராமன் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி எப்படி சிறையில் அடைத்தீர்களோ அப்படி தான் இருக்க வேண்டும்.
உங்களை அசிங்கப்படுத்துபவர்களை சட்டபடி எதிர் கொள்ளுங்கள் அறவழியில் போராட்டம் செய்யுங்கள் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள் உங்கள் மீது தவறு இல்லையென்றாலும் அதையே காரணம் காட்டி உண்மையின் பக்கம் இருக்கும் இந்துக்களை உங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள் இந்துத்துவா சக்திகள்.
உங்களின் நல்ல மனதை நான் அறிவேன் நான் புரிந்துக் கொண்டது போல் உண்மையின் பக்கம் நின்று பேச கூடிய இந்துக்களின் மனங்களை கவரும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.
அனைவரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து விட முடியாது ஆனால் சிறுக சிறுக முடியும்.
பெரியார் மண்ணில் மதவெறி அரசியல் செய்ய முடியாது பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடம் இல்லை.
இசுலாமியர்கள் தடித்த வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள் மென்மையாகவே பேசுங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எல்லோருக்கும் அழகான முறையில் எடுத்து கூறுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என் மனதில் அவ்வளவு வலிகள் இருக்கிறது ஒவ்வொன்றாக பின் வரும் நாட்களில் கூறுகிறேன்.
என்னை இசுலாமியர் என்று கூறி திட்டும் என் சொந்த மதத்தவர்களை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் அவர்கள் காழ்புணர்ச்சியில் பேசுகிறார்கள் இந்துத்துவா கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் புரிதல் இல்லாமல் திட்டி தீர்த்து கொண்டு இருக்கிறார்கள் மென்மையான விளக்களின் மூலம் நான் பதில் கூறி கொள்கிறேன்.
இந்துக்களும் இசுலாமியர்களும் ஒற்றுமையாக என்றென்றும் இருக்க வேண்டும் என்பதே இந்த சாமாணியனின் விருப்பம். நன்றி
Senthil Prakash Selvaraj
செந்தில் பிரகாஷ் //
இந்து சகோதரர்களையும் இந்துத்வா வெறியர்களையும் பிரித்துப் பார்க்க நாம் பழகிக் கொண்டு விட்டால் நம் நாட்டில் 90 சதமான மத மோதல்களை தடுத்து விடலாம். எனது நாட்டை காவி வெறியர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவானாக!
Sir, kindly write about tajmahal. How is it contradict Islamic law and prophet saying,why Aurangzeb was not able to Implement Islamic law in tajmahal
ReplyDeleteஅண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த செய்திகளை வெளியிடவில்லையே ஏன் ? முகம்மது நபி என்ற அரேபிய சமய தலைவரை -தலையை சீவுவதில் வல்லவரை - விமா்சனம் செய்ததற்காக ஆரெபிய மதவாதிகள் பெரும் காடைத்தனம் செய்து அட்டூழியம் செய்திருக்கின்றாா்கள்.
ReplyDeleteஒரு நிகழ்ச்சி. சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ நாராயணகுரு அவர்களை சந்திக்க சென்றிருந்தார். குரு சுவாமியிடம் என்ன தமிழ் நூல்கள் பிடிக்கும் என கேட்டார். சுவாமி குருதேவரிடம் ’தாயுமான சுவாமிகள் பாடல்கள்’ என கூறினார்.குருதேவர் சொன்னார் – ‘ஆத்ம சாதனத்துக்கு தாயுமானவர் பாடல்கள் பெரிது. பொருள் விளக்கத்துக்கு திருவாசகம். ஒரு முனிவரே வந்து பிரம்ம தத்துவத்தை தமிழில் சொன்னது திருவாசகம். ’ ஸ்ரீ நாராயண குருதேவர் இதை சொன்னது சுவாமி சித்பவானந்தர் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1928-29 இல் இந்த மகான்களின் சந்திப்பு நிகழ்ந்தது. 1960 இல் சுவாமி சித்பவானந்தரின் ‘திருவாசகம்’ விளக்க உரை நூல் வெளியானது.
ReplyDeleteதமிழ் மொழி வேதாந்த நூல் மரபில் சுவாமிகளின் இந்நூலுக்கு தனி இடம் உண்டு. கேரளத்தின் மகான் ஒருவர் அருளாலும் சுவாமி சித்பவனாந்தரின் கருணையாலும் தமிழன்னைக்கு மேலும் ஒரு ஆபரணம் கிடைத்தது. சுவாமி விவேகானந்தர் சொல்வார் ‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்.’
மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் காலம் மொழி எல்லைகளை கடந்து அந்த ஆன்மநேய ஒற்றுமையை நம் தேசத்திலே வெளிக்காட்டியது.
ஆனி மாதம் மக நட்சத்திரத்தில் மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை. மாணிக்கவாசக சுவாமிகளின் பாதங்களையும் ஸ்ரீ நாராயண குரு சுவாமி சித்பவானந்தர் ஆகிய ஆன்மிக மகான்களின் பாதங்கள் பணிந்து தேசத்தில் ஆன்மநேய ஒருமைப்பாடு ஓங்க உழைத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
spiritual_unity