Wednesday, March 16, 2016

குடி காரணமென்றால் அதை முதலில் சொல்லுங்கள்.



கலாபவன் மணி இறப்புக்குக் குடி காரணமென்றால் அதை முதலில் சொல்லுங்கள்.

‘எவ்வளவு நல்ல கலைஞன்’ என்று அழுது புலம்புவதைவிட, ‘குடி எவ்வளவு கொடிது’ என்று அரற்றுங்கள்.

புளியங்கொட்டை அளவுக்குச் சிற்றுருண்டைபோல் இருக்கும் உறுப்புகள் ‘மொந்தை மொந்தையாய்’ உள்ளிறங்கும் நச்சு நீர்மங்களை எப்படி ஐயா, சுத்திகரிக்கும் ?

விரைவில் பழுதுறும்.. கோலாக்கள் முதற்கொண்டு எல்லாப் புட்டிப் பானங்களும் ஈரல்களை உருக்குபவைதாம்.

கடந்த பத்தாண்டுகளில் பெருகிப் பரவிய பெருங்குடிப் பழக்கம் இனிமேல்தான் தன் இரைகளை ஒவ்வொன்றாகச் சாய்க்கும்.

அந்தக் கேடுகெட்ட பழக்கத்தைத் தொடங்கியிருந்தாலும் சரி, முற்றிய விளிம்பில் இருந்தாலும் சரி,
விட்டுத் தொலையுங்கள். உங்களால் முடியும் !

- கவிஞர் மகுடேசுவரன்
By idealvision.in

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)