Friday, April 22, 2016

பிஜேபி எம்எல்ஏ ஊனமாக்கிய குதிரை இறந்து விட்டது!





பிஜேபி எம்எல்ஏ ஊனமாக்கிய குதிரை இறந்து விட்டது!

உத்திரக்காண்டில் முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளின் குதிரைகளின் கால்களை உடைத்து கோரத் தாண்டம் ஆடியுள்ளனர். பிஜேபி எம்எல்ஏ கணேஷ் ஜோஷி காவல் துறைக்கு சொந்தமான குதிரையின் கால்களை லத்தியால் அடிக்கிறார். அந்த குதிரை சுருண்டு கீழே விழுகிறது. பசு மட்டும் தான் மிருகமா? குதிரை மிருகம் இல்லையா? அந்த குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டு நம் முன் பரிதாபமாக நிற்கிறது.

உயர்தர மருத்துவர்கள் வந்து மருத்துவம் பார்த்தாலும் பலனில்லாமல் சில நாட்கள் முன்பு அந்த குதிரை இறந்து விட்டது. இறந்த அந்த குதிரை அரசு மரியாதையோடு :-) அடக்கம் செய்யப்பட்டது.



எனது தாய் நாட்டை மத வெறியால் ஊனமாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று இந்த குதிரையையும் ஊனமாக்கி இறப்பு வரை கொண்டு சென்றுள்ளனர். கண்டிப்பாக இந்த பாவங்களுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக இந்துத்வாவினர் பலனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)