'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, May 15, 2016
மோடியை தொடர்ந்து அமீத்ஷா வாங்கிய அடுத்த பல்பு!
மோடியை தொடர்ந்து அமீத்ஷா வாங்கிய அடுத்த பல்பு!
ஏற்கெனவே கேரள மக்களிடம் மோடி அவமானப்பட்டது ஒருபுறமிக்க தற்போது சீனுக்கு அமீத்ஷா வந்துள்ளார். அதாவது மோடியை காப்பாற்றுகிறாராம். அவுட்லுக்கில் முழு பக்க புகைப்படத்தைக் காட்டி 'கேரள மலை வாழ குழந்தைகள் ஊட்டமின்றி பிறப்பதை மோடி மட்டும் சொல்லவில்லை. அதற்கு முன்பே அவுட் லுக் பத்திரிக்கை சொல்லியுள்ளது' என்று பெருமையாக பத்திரிக்கையாளர்களுக்கு காட்டினார்.
ஆனால் அந்த புகைப்படம் உண்மையில் எடுக்கப்பட்து மே ஆறாம் தேதி 2009 ஆம் ஆண்டு. இலங்கையில் நடந்த சண்டையில் தமிழர் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அமெரிக்க அரசானது இந்த புகைப்படத்தை அதன் விளக்கங்களோடு வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை காட்டி அது கேரளா என்கிறார் அமீத்ஷா. அவுட் லுக்கும், அமீத்ஷாவும் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் பொய்களை பரப்புவதுதான் வேலையா? எவ்வளவு அசிங்கப்பட்டாலும் இந்த இந்துத்வாவாதிகள் திருந்துவதாக இல்லை.
#pomonemodi
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)