'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, June 03, 2016
குத்துச் சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார்!
குத்துச் சண்டை வீரர் முகமது அலி இன்று காலமானார்!
மூன்று முறை குத்துச் சண்டை போட்டியில் உலக சாம்பியனாக வலம் வந்த முகமது அலி இன்று தனது மறு உலக பயணத்தை தொடர்ந்தார்.
அமெரிக்காவில் நிலவும் நிற வெறிக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். நிறவெறியை ஒழிக்க இஸ்லாத்தினால் மட்டுமே முடியும் என்று பிரகடப்படுத்தி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது நாட்டுக்கும் விசுவாசமாக நடந்து கொண்டார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இன்னாலில்லாஹி வஈன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே நாம் திரும்பிச் செல்லக் கூடியவர்கள்)
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)