'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, June 11, 2016
ஆடுகளை விற்று கழிவறை கட்டியுள்ளார்!
ஆடுகளை விற்று கழிவறை கட்டியுள்ளார்!
பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் உள்ள கிராமம் துங்காபூர். இங்கு வசிக்கும் காந்திலால் ஒரு மில்லில் வேலை செய்து தினக் கூலியாக 250 சம்பாதிக்கிறார். வீட்டில் கழிவறை இல்லை. வீட்டு பெண்கள் இதற்காக வெகு தூரம் மறைவிடம் தேடி அலைய வேண்டியதாக இருந்தது. இதற்கு முடிவு கட்ட நினைத்தார் காந்திலால். கழிவறை கட்ட அரசு 4000 ரூபாய் தந்தது. அது போதவில்லை. தனது ஆடுகளை விற்றார். அதுவும் போதவில்லை. தனது மனைவியின் நகைகளை விற்றார். தற்போது சொந்தமாக கழிவறை தயாராகி விட்டது. குடும்ப பெண்களும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கழிவறையின் அவசியத்தை உணர்ந்த காந்திலாலுக்கு நமது பாராட்டுக்கள்.
https://www.facebook.com/ndtv/videos/10154288176465798/
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)