Wednesday, May 24, 2017

மழை வேண்டி தொழுகை....

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக 21/5/2017 (ஞாயிறு) இன்று காலை 07:00 மணிக்கு மர்கஸ் வளாகத்தில் அல்லாஹ்வின் அருட்கொடையாம் அருள் மழை வேண்டி "நபி வழியில் மழை வேண்டி திடல் தொழுகை" நடைபெற்றது.

எல்லா புகழும் இறைவனுக்கே!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)