இந்து மத சாமியார்
உண்மையை உரத்துக் கூறுகிறார்!
'வந்தே மாதரம் சொல்ல
வேண்டும்: இல்லை என்றால் முஸ்லிம்கள் தேச துரோகிகள்' என்ற தவறான வாதத்தை இந்துத்வாக்கள் வைக்கின்றனர். இவர்களுக்கு
ஒன்று புரிவதில்லை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ன? 'அஸ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்: வஅஸ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'
என்பதே அதாவது இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்க
மாட்டோம்: முகமது நபி இறைவனின் தூதராக இருக்கிறார்' என்பது இதன் பொருள்.
ஒரு பொருளையோ மனிதனையோ
மதிப்பது என்பது வேறு: அதனையே வணங்குதல் என்பதும் வேறு:
முஸ்லிம்கள் இந்திய
தேசத்தை மதிப்பார்கள்: அதன் முன்னேற்றத்துக்கு உழைப்பார்கள்: ஆனால் வணங்க மாட்டார்கள்.
முகமது நபியை இறைவனின்
தூதராக மதிப்பார்கள். அவருக்காக பாசத்தால் உயிரையும் கொடுப்பார்கள்: ஆனால் அவரைக் கூட
வணங்க மாட்டார்கள்.
தாயின் காலடியில்
சொர்க்கம் உள்ளது என்று தாயை மதிப்பார்கள்: அவருக்காக இரவு பகல் பாராது உழைப்பார்கள்.
ஆனால் அந்த தாயையும் வணங்க மாட்டார்கள்.
இது தான் உலக முஸ்லிம்களின்
நிலைபாடு. இவ்வளவு தெளிவாக இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்க 'வந்தே மாதரம்' பாடித்தான் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என்று சொல்வது அறிவீனம் அல்லவா?'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)