சாதி வெறியர்களுக்கு சரியான
தீர்ப்பு!
உடுமலை:
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட
6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து ஜாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டார்.பின்னர் கடந்த 2016 மார்ச் 13ல் உடுமலையில், கவுசல்யாவின் உறவினர்கள், சங்கரை சராமரியாக வெட்டி கொன்றனர். கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார்.
நீதிபதி அலமேலு
நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி,
ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலைத்தமிழ்ச்செல்வன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கினார்.மேலும் ஸ்டீபன்
தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும்,
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த
மணிகண்டன் என்பவருக்கு 5 வருட சிறை தண்டனையும் வழங்கி
உத்தரவிட்டார்.
தூக்கு தண்டனை பெற்ற
இந்த இளைஞர்களின் கோர முடிவுக்கு யார் பொறுப்பு?
ராமதாஸ், அன்பு மணி ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் இனியாவது வெறித்தனமாக சாதி வெறியை
தூண்டுவதை விட வேண்டும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)