Monday, December 11, 2017

சூரிய ஒளியில் மின்சாரத்தை இயக்கும் மும்பை பள்ளிவாசல்!

சூரிய ஒளியில் மின்சாரத்தை இயக்கும் மும்பை பள்ளிவாசல்!

மும்பை கல்பாதேவி பகுதியில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளி முற்றிலும் மின்சாரத்தை சூரிய ஒளியில் பயன் படுத்தத் தக்கவாறு தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 70 சதவீதம் மின்சாரத்துக்காக செலவிடும் தொகை குறைந்துள்ளதாக இதன் நிர்வாகிகள் கூறுகின்றனர். மும்பையில் இதே போன்று மேலும் மூன்று பள்ளிவாசல்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


சூரிய ஒளியை அதிகமாக பெற்று வரும் நாம் நமது பள்ளிகளுக்கும் இதே வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பள்ளியின் பராமரிப்பு செலவுகளை குறைக்க முயற்சிக்கலாம். மிச்சமாகும் தொகையினை பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வரும் இமாம்களுக்கும் மோதின்களுக்கும் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம். இமாம்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் 50க்கும் 100க்கும் மார்க்கம் தடுத்த ஃபாத்திஹாக்களை ஓதி வரும் பல இமாம்கள் அதிலிருந்து விலகி தைரியமாக சத்தியத்தை சொல்ல முன் வருவார்கள்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)