Wednesday, February 21, 2018

தவ்ஹீத் ஜமாஅத் கிழித்தது என்ன..?


தவ்ஹீத் ஜமாஅத் கிழித்தது என்ன..?

புகைப்படம் 1:

சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை அருகே பண்ணவயல் என்ற ஊரைச்சார்ந்த இந்துத்துவா சிந்தனையுள்ள மாரிமுத்து என்ற நபர் இஸ்ஸாம் குறித்து காட்டமாக கேள்வி கேட்கிறார்..!

அவர் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் கொடுக்கப்படுகிறது. திருக் குர்ஆன் தமிழாக்கமும் சில ஏகத்துவ புத்தகங்களும் அவருக்கு பரிசாக கொடுக்கப்படுகிறது.

புகைப்படம் 2:

அன்று கேள்வி கேட்ட மாரிமுத்து எஹ்யாவாக மாறி அவரே அதிராம்பட்டினம் தவ்ஹீத் பள்ளியில் கடந்த ஆண்டு ஜும்ஆ உரை நிகழ்த்துகிறார்..!

புகைப்படம் 3:

சகோதரர்.எஹ்யா அவர்கள் சுபாஸ் சந்திரபோஸ் என்ற மாற்றுமத இளைஞருக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கிறார்.  பின்பு அவரும் இஸ்லாத்தை தழுவுகிறார். அப்போது எடுத்த படமே நீங்கள் பார்ப்பது.

தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் 30 ஆண்டுகாலமாக கிழித்தது என்ன என்று கேட்போருக்கு இச்செய்தி நல்ல பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சொல்லப் படாத செய்திகள் இது போன்று இன்னும் பல இருக்கிறது.

இறைத் தூதர் அவர்கள் கூறினார்கள் : 'மென்மை எதில் இருந்தாலும் அந்த காரியத்தை அந்த மென்மை அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்'

-
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா
ஆதாரம்: முஸ்லிம் 2594


ஒரு கருத்துக்கு எதிர்ப்பு, பதிவு எழுதுதல், அழைப்புப்பணி, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நேர்வழிப்படுத்துதல் என்று எந்த காரியத்திலும் மென்மையான முறையையே நாம் கடைபிடிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த நபி மொழி நமக்கு கற்றுத் தருகிறது. குறிப்பாக அழைப்புப் பணியில் உள்ளவர்களுக்கு மென்மையும் பொறுமையும் அவசியமாகும். சொல்லவரும் விஷயத்தை சற்று கடுமையாக சொன்னோம் என்றால் கேட்பவர் கூட அலட்சியம் செய்து சென்று விடுவர்.

புகழனைத்தும் இறைவனுக்கே....







1 comment:

  1. இந்து ஒருவன் மதம் மாறித் தொலைந்தால்

    உலகில் இந்துக்களின் ஒட்டு, ஜனத்தொகை

    ஒன்று குறைகின்றது.

    இந்துக்களை காபீர் என்று அழிக்க நினைப்பவன்

    எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது.

    இந்தியா பாக்கிஸ்தான் ஆக மாறும் பயணத்தில் ஒரு சிறிய முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இதுதான் உண்மை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)