Sunday, April 15, 2018

இந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.


இந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.

( 10-4_2018 )

BJP ஆளும் உத்திரபிரதேசம், பாகல்பூர் மாவட்டத்தில்......

அஹமது பஷீர் (வயது 28) என்ற இஸ்லாமிய இளைஞரை மாட்டு தொழுவத்தில் வைத்து காதை அறுத்து, கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோவும் எடுக்கின்றனர் ஆர்எஸ்எஸ் நாய்கள். இவர்கள் மனித இனத்தில் சேர்க்கப்படக் கூடியவர்களா? அந்த இளைஞன் மாட்டுக் கறி வைத்திருந்ததாக கூறி இதனை அரங்கேற்றியுள்ளனர் மனித மிருகங்கள்.

வீடியோ எடுத்து உலகுக்கு தெரிவிப்பதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? பிரதமராக மோடி வீற்றிருக்கிறார். எங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

இறைவா! இந்த அநியாயக்காரர்களின் கொட்டத்தை சீக்கிரமே அடக்குவாயாக! எனது நாட்டை இந்த மனித மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!



3 comments:

  1. இறைவா! இந்த அநியாயக்காரர்களின் கொட்டத்தை சீக்கிரமே அடக்குவாயாக! எனது நாட்டை இந்த மனித மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!

    ReplyDelete
  2. மக்களுக்கு நல்லொழுக்க கல்வி அளிக்காததன் கடும் விளைவுகளை நமது சமூகம் அனுபவித்து வருகின்றது. மதசார்பு தத்துவம் இந்துக்களை மாக்கள் ஆக்கி விடடது.அதுதான் கசப்பான உண்மை.இந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளியுங்கள்.இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாது ஒழியும்.

    ReplyDelete
  3. கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்

    கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.

    ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.

    கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

    ——-என்றான் கம்பன்

    முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி

    இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா

    துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்

    கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?


    எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?

    கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.

    அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:

    “நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”

    இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.

    கனி மொழி பற்றி வள்ளுவன்

    இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று- குறள்

    பொருள்

    இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.

    சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.
    நன்றி தமிழ் வேதம்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)