Thursday, April 12, 2018

புர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்!


புர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்!

புர்ஹா அணிந்தால் முகத்தை மூடச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. ஆனால் பேணுதல் என்ற பெயரில் பலர் முகத்தை மூடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பழக்கமானது பல சமூக கேடுகளுக்கு வித்திடுகிறது.

ஓடும் பஸ்ஸில் பணம் திருடிய புர்ஹா அணிந்த பெண்களை சோதனை செய்தபோது அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டது.

போலீஸார் நடத்திய விசாரணையில் புர்ஹா அணிந்த அந்த திருடிகளின் விபரம் வருமாறு:

1.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தி தோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்த ஆனந்த் மனைவி பூங்கொடி வயது 38

2. மருது பாண்டி மனைவி மீனா வயது 26

3.மணி மனைவி நாகவள்ளி வயது 27

இவர்கள் மூவரும் கூட்டாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது போன்று பல இடங்களில் தேவையில்லாமல் இஸ்லாமிய பெண்கள் பழியை சுமக்கின்றனர். எனவே ஜமாத்துகள் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.



1 comment:

  1. முகத்தை மூடுவது முட்டாள்தனம்.முஸ்லீம் பெண்கள் தவிா்க்க வேண்டும்.அரசு தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)