Monday, July 02, 2018

ஏழை சீக்கிய குடும்பத்தை காப்பாற்றும் அஸ்லம் கான்!

ஏழை சீக்கிய குடும்பத்தை காப்பாற்றும் அஸ்லம் கான்!

சர்தார் மான் சிங் ட்ரக் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சென்ற ஜனவரி 9ந்தேதி திருடர்களால் டெல்லியில் வைத்து கொல்லப்படுகிறார். இவரது குடும்பம் ஜம்முவில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகன் என்ற இவர்களின் குடும்பம் மிக வறிய நிலையில் உள்ளது.

இவர்களின் குடும்ப சூழ்நிலையை அறிந்த டெல்லி டிசிபி அஸ்லாம் கான் உதவ முன் வந்தார். தனது சம்பளத்தில் பாதியை அந்த குடும்பத்திற்கு கடந்த பிப்ரவரியிலிருந்து அளித்து வருகிறார். தினமும் போன் செய்து அவர்களின் குடும்பத்துக்கு என்ன தேவைகள் என்பதை  அறிந்து அவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளார். மற்றவர்களையும் இது போல் உதவிக் கரம் நீட்டுமாறு அறிவுறுத்துகிறார்.

மாமூல் வாங்கியே பழக்கப்பட்ட காவல் துறையில் அஸ்லம் கான் போன்ற நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தகவல் உதவி
என்டிடிவி
29-06-2018



1 comment:

  1. நல்ல தகவல்.வாழ்க.

    சீக்கிய குருமார்களுக்கு முஸ்லீம் ஆட்சியாளர்கள் செய்த கொடூரமான கொடூரமான கொடுமைகளுக்கு இதெல்லாம் பரிகாரம் ஆகாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)