Sunday, September 30, 2018

இலங்கையை சேர்ந்த ப்ரியா என்கிற தமிழ் ஈழ சகோதரி

குவைத்தில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த ப்ரியா என்கிற தமிழ் ஈழ சகோதரி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.
பொருளாதாரத்தில் பெரிதும் பின் தங்கிய அந்த சகோதரிக்கு அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமும் எந்த உதவியும் செய்யாமல் கைவிட்ட நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக அந்த சகோதரிக்கு தாயகம் செல்ல விமான டிக்கெட் கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையில் அவருக்கு தேவையான மருத்துவத்திற்கான பொருளாதார உதவிகளையும் நமது sltj தலைமை மூலமாக செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நோய் குறித்த விழிப்புணர்வும் அதற்கான மருத்துவ முறை குறித்தும் விளக்கி அந்த சகோதரிக்கு ஆறுதல் கூறப்பட்டது.
நன்றி:
Mohamed Ali Jinna



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)