Saturday, October 13, 2018

பாகிஸ்தான் ராணுவத்தால் சுடப்பட்டதாக பொய் கூறிய பாஜக அரசு!

வீர மரணம் என்று பொய் சொல்லிய காவி பாஜக!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள பருத்திக் காட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். இவர் பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் எதிரிகளால் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டது. ஆனால் ஊருக்கு உடலை கொண்டு வந்த சக வீரர்களோ 'இவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சுடப்படவில்லை. நம் நாட்டு சக ராணுவ வீரரோடு ஏற்பட்ட வாய்த் தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். சுட்ட இந்திய ராணுவ வீரரை கைது செய்துள்ளோம்' என்று உண்மையை போட்டு உடைத்துள்ளனர்.
ஏற்கெனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேசக் கரம் நீட்டியயோது எல்லையில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக காரணம் காட்டி அமைதிப் பேச்சுக்கு முட்டுக் கடடை போட்டது மோடி அரசு என்பதையும் நாம் மறந்து விடவில்லை.
நாட்டில் நடக்கும் பெட்ரோல் விலை ஏற்றம், மதக் கலவரம், சாதி கலவரம், பண மதிப்பிழப்பு போன்ற பிரச்னைகளை திசை திருப்ப மோடி அரசு எடுக்கும் பல வழிகளில் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு என்ற அஸ்திரம். இதனால் மக்கள் அனைத்தையும் மறந்து விட்டு பாகிஸ்தான் பக்கம் கவனம் செலுத்துவர். சிலரை சில காலம் ஏமாற்றலாம்: எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதனை மோடி எப்போது உணருவார்?

இறந்த அந்த ராணுவ வீரருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!


2 comments:

  1. ஏற்கெனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேசக் கரம் நீட்டியயோது
    --------------------
    தாங்கள் ஒரு பாக்கிஸ்தான் ஏஜென்ட்.இதுதான் இப்படியெல்லாம் பதிவு போடுகின்றீா்.தேசத்துரோகி.

    ReplyDelete
  2. ஏற்கெனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேசக் கரம் நீட்டியயோது ?


    இந்தியா ஏற்கவில்லை

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)