Monday, February 04, 2019

ஒரு ஏழைத் தாயின் ஏக்கம் மோடிக்கு எப்படி விளங்கும்?

ஒரு ஏழைத் தாயின் ஏக்கம் மோடிக்கு எப்படி விளங்கும்?
'பேட்டா.... என் கணக்கில் பண்ம் ஏதும் வந்துள்ளதா,'
'இல்லம்மா... உங்கள் கணக்கில் பணம் ஏதும் ஏறவில்லை'
மற்றொரு நாள் அடுத்த கவுண்டருக்கு செல்கிறார் அந்த வயதான பெண்மணி....
'மகனே.... என் கணக்கில் பணம் ஏதும் ஏறியுள்ளதா?'
'தினமும் நீங்கள் அலைவதை பார்க்கிறேன். என்ன விஷயம்?'
'ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொன்னார். எனது கணக்கிலும் பணம் வந்திருக்க வேண்டும். அதற்காககத்தான் தினமும் அலைகிறேன்'
'ஓ... அந்த 15 லட்சமா.... கொஞ்சம் இருங்கள்.... மோடி கொடுத்தது இந்த குச்சி மிட்டாய்தான்... வாங்கிக் கொள்ளுங்கள்'
வயதான பாட்டி மிகுந்த கோபத்துடன்.....
'அப்படி என்றால் கடந்த ஐந்து வருடமாக மோடி எங்களிடம் பொய் கூறியா வந்துள்ளார். வாக்கு கேட்டு வரட்டும்... பேசிக் கொள்கிறேன்.'


2 comments:

  1. நற்பண்புகளின் நாயகன் திரு.மோதி அவர்களை கிண்டல்அடித்து நயவஞ்சகமாக தயாரிதத குறும் படம் இது. அரேபிய அடிமைகளுக்கு இனிக்கும்தான்.

    ReplyDelete
  2. 1.அயல்நாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை மீட்டால் ஒரு நபருக்கு ரூ 15 லட்சம் வழங்க முடியும் அந்த அளவிற்கு பெரும் தொகை வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்கில் உள்ளது என்று ஒரு உதாரணத்திற்காக புரிதலுக்காக திரு.மோடி அவர்கள் பேசினார்கள்.

    2.கருப்புப்பணத்தை கொண்டு வருவேன். உடனே சமபந்தி விருந்து போல் அனைவருக்கும் ரூ15 லட்சம் வங்கிக் கணக்கில் வரவு வைப்பேன் என்று திரு.மோடி சொல்லவில்லை.
    3. சொன்னதை நிரூபிக்க ஏதேனும் வீடியோ ஆதாரம் இருந்தால் வெளியிடலாம்.

    நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)