தலித் இளைஞரை மனித மலத்தை திங்க வைத்த சாதி திமிர்!
புனேயில் உள்ள முல்சி தாலுகாவில் உள்ளது ஜம்பே கிராமம். இங்குள்ள செங்கல் சூளையில் சுனில் அனில் பாவ்லே (வயது 22) வேலை செய்து வந்துள்ளார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது முதலாளி சந்திப் பவார் (வயது 42). மராட்டா சாதியை சேர்ந்தவர். சென்ற மார்ச் 13 அன்று சந்தீப் பவாரும், அவரது மனைவியும், அவரது மைத்துனரும் சேர்ந்து சுனில் என்ற தலித் இளைஞனை மனித மலத்தை சாப்பிட வைத்துள்ளனர். முடியாது என்று மறுத்தவரை வலுக்கட்டாயமாக சாப்பிட சொல்லிதுன்புறுத்தியுள்ளனர். இந்த வன் கொடுமை சம்பந்தமாக மூன்று பேர் மீதும் வழக்கு தொடர்ந்தார் அந்த தலித் இளைஞர். இதனால் காவல் துறை அந்த மூவரையும் கைது செய்தது. மறுநாளே மூவருக்கும் ஜாமீன் வழங்கி வெளியில் விட்டுள்ளது காவல் துறை.
சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ் 'மோடி வர்தா கூட்டத்தில் 'இந்து தீவிரவாதம்' என்பதே இல்லை என்றார். நான் அவரிடம் கேட்கிறேன் இது இந்து தீவிரவாதம் இல்லையா? இதற்கு என்ன பெயர் என்று மோடி சொல்வாரா?' என்று கேட்கிறார்.
மோடியிடம் பதில் இருக்கிறதா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
14-04-2019
இந்தியன் எக்ஸ்பிரஸ்
14-04-2019
நமது தமிழ்நாட்டிலும் திண்ணியத்தில் தலித்களை மலம் தின்ன வைத்து அழகு பார்த்தது மேல் சாதி திமிர். மாநிலங்களும் மொழிகளும் மாறினாலும் தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒன்றாகவே உள்ளன.

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)