Monday, June 24, 2019

மதரஸா ஆசிரியரை 'ஜெய் ஸ்ரீராம் சொல்' என்று தாக்கிய இந்துத்வாக்கள்!

மதரஸா ஆசிரியரை 'ஜெய் ஸ்ரீராம் சொல்' என்று தாக்கிய இந்துத்வாக்கள்!
கல்கத்தாவில் உள்ள பர்கனாஸ் என்ற ஊரில் வசித்து வருபவர் முஹம்மது ஷாரூக் ஹல்தார். இவர் ஹூக்ளியில் உள்ள மதரஸாவில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். சென்ற வியாழக்கிழமை வழக்கம் போல் லோக்கல் ட்ரெயினில் ஹூக்ளி பயணித்துள்ளார்.
'தாகுரியா என்ற இடம் வந்தபோது மந்திரங்களை உரக்க சொல்லிக் கொண்டு ஒரு கும்பல் ட்ரெயினில் ஏறியது. அங்குள்ள பலரையும் இந்த கும்பல் மிரட்டிக் கொண்டே எனது இருக்கைக்கு வந்து எனது தொப்பியை தட்டி விட்டு எனது தாடியையும் பிடித்து இழுத்தது. பிறகு என்னிடம் 'ஜெய் ஸ்ரீராம் சொல்' என்று மிரட்டியது. நான் சொல்ல மறுத்தேன். உடன் மூர்க்கத்தனமாக என்னை தாக்க ஆரம்பித்தனர். உள்ளூர் வாசிகள் எனக்கு உதவிக்கு வர என்னை ரயிலில் இருந்து தள்ளி விட்டு சென்றது அந்த கும்பல். காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம்' என்கிறார் முஹம்மது ஷாரூக்.
தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
24-06-2019
மொழி பெயர்ப்பு : சுவனப்பிரியன்
அழகிய இந்தியாவை சோமாலியாவாக மாற்றியே தீருவோம் என்று இந்துத்வாக்கள் முடிவு கட்டி விட்டதாகவே தோன்றுகிறது. எந்த மதத்தினருமே நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு இந்துத்வாக்கள் இந்நாட்டை கொண்டு செல்கின்றனர். வழக்கம் போல் பெரும்பான்மை இந்துக்களும் வாய் மூடி வேடிக்கை பார்க்கிறார்கள்.


1 comment:

  1. முகலாய காடையர்களின் ஆட்சி இந்தியாவில் ஏற்படவில்லையெனில் இந்த நபர் இந்துவாகத்தான் இருந்திருப்பாா்.ஜெய்ஸ்ரீராம் என்று சொல்வதில் அவருக்கு பக்தி இருக்கும். இவரது பாட்டன் சொன்னதை சொன்னால் மங்களம்தான். வாழ்க.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)