Saturday, August 03, 2019

// #எத்தி_வைப்போம்_எதிரிக்கும்#தூய_இஸ்லாத்தை//


// #எத்தி_வைப்போம்_எதிரிக்கும#தூய_இஸ்லாத்தை//

#SirajulHasan

தொலைக்காட்சி நெறியாளரின் பெயர்#காலித் என்பதால்

“முஸ்லிமைப் பார்க்க மாட்டேன்” என்று விவாதத்தில் கலந்துகொள்ள வந்த “ஹம் இந்து” எனும் இந்துத்துவ அமைப்பின் நிறுவனர் #அஜய்கவுதம் கண்ணைப் பொத்திக் கொண்டாராம்.

சரி, வரலாற்றில் ஓர் ஏட்டைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

#துஃபைல் என்று மிகப் பெரிய கவிஞர்.

ஓர் இனக்குழுவின் தலைவராகவும் இருந்தவர்.

இவர் ஒருமுறை மக்கா வந்திருந்தார்.

"இங்கே #முஹம்மத் என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஓதும் வேத வசனங்களைத் தப்பித் தவறிக்கூட கேட்டுவிடாதீர்கள்” என்று குறைஷித் தலைவர்கள் அநியாயத்துக்கு பயமுறுத்தி எச்சரித்தனர்.

துஃபைல் இறைவசனங்கள் தம் காதுகளில் விழுந்துவிடக் கூடாது என்று பஞ்சை எடுத்துக் காதுகளில் திணித்துக் கொண்டார்.

இன்று அஜய் கவுதம் கண்ணை மூடிக் கொண்டது போல் அன்று துஃபைல் காதை மூடிக் கொண்டார்.

என்ன மூடி என்ன பயன்?

தூய வேத வசனங்கள் அவர் காதில் விழுந்தன...

மனத்தை உருக்கின..

இறைநெறியை ஏற்றார்..

தம் குழுவினர் அனைவருக்கும் அருள்நெறியை எடுத்துரைத்தார்.

அவர்களுக்கும் நேர்வழி காட்டினார்.

ஆகவே நாம் கவலைப்படத் தேவையில்லை.

அஜய் கவுதம்களின் கண்களும் ஒரு நாள் திறக்கும்-

நாம் சரியாக அவர்களுக்குச் செய்தியைக் கொண்டு சேர்த்தால்.

-சிராஜுல்ஹஸன்


1 comment:



  1. அஜய் செய்தது தவறான செயல்.
    உலகம் அறியாத கிணற்றுத தவளை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)