Friday, August 23, 2019

நேற்று சத்தியம் டிவி கலந்துரையாடலில்...

நேற்று சத்தியம் டிவி கலந்துரையாடலில் சிபிஐயிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சொல்லும் போது "நாடு சிக்கலை எதிர்கொள்ளும்போது இது போன்று தீவிரவாத அச்சுறுத்தலை நாங்களாகவே கற்பனையாக அவிழ்த்து விட்டு பிரச்னைகளை உருவாக்குவோம். அடுத்து நேற்று ஸ்டாலின் காஷ்மீர் 370 பிரிவை நீக்கிய முறை சரியில்லை என்று போராட்டம் நடத்துகிறார். இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்தி உளவுத் துறையால் வெளியிடப்படுகிறது. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார். உளவுத் துறை அதிகாரியின் இந்த கூற்றை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மேலும் தீவிரவாதி இந்துக்களை போன்று வேடமிட்டு வருவானாம். இந்த தகவல் யாரிடமிருந்து பெறப்பட்டது? அவர்களை ஏன் கைது செய்யவில்லை? புகைப்படங்களை தந்தவர்கள் யார்? இதை எல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் தேச துரோகி.... 
இந்தியாவின் வட மாநிலங்களை காவி சிந்தனையில் தள்ளி அவர்களை படுகுழியில் தள்ளியாகி விட்டது. மீதமிருப்பது தென் மாநிலங்கள். அதிலும் தமிழ்நாடு காவிகளை எதிர்ப்பதில் மும்முரமாக உள்ளது. இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக இங்கு பழகி வருகின்றனர். முதலில் இருவரையும் பிரித்து விட்டால் இந்துக்களின் ஓட்டுக்களை கொத்தாக அள்ளலாம் என்பது அமீத்ஷாவின் கணக்கு. தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை இம்முறையும் நமது ஒற்றுமையால் நிரூபிப்போம். சந்தேகப்படும்படி யாரும் நமது ஊர்களில் சுற்றித் தரிந்தால் உடன் காவல் துறை வசம் ஒப்படைப்போம். அந்நபர் கலவரம் ஏற்படுத்த உளவுத் துறை அனுப்பிய நபராகவும் இருக்கலாம்.



3 comments:

  1. Suvi we cant be borthers because you never ever consider me as a human being, how can you have a brotherly relationship with a kaffir. Either you are lying or you had became murdhath.

    ReplyDelete
  2. //Suvi we cant be borthers because you never ever consider me as a human being//

    இறைவன் குர்ஆனில் உலக மக்கள் யாவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பல்கி பெருகியவர்களே என்கிறான். அப்படியாயின் நீங்களும் எனது சகோதரரே. பெற்றோர்களின் வழக்கத்தால் பல மார்க்கங்கங்களாக பிரிந்து கிடக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. So suvi had become kaffir. He told because of parents we are following separate religion but according to quran it is Allah who does everything.

      Delete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)