Wednesday, October 02, 2019

இந்து, சீக்கிய, ஜைன, கிருத்தவ அகதிகள் பயப்பட தேவையில்லை

இந்து, சீக்கிய, ஜைன, கிருத்தவ அகதிகள் பயப்பட தேவையில்லை: இஸ்லாமிய அகதிகள் இந்நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்' என்று வெளிப்படையாக அமித்ஷா கூறுகிறார். இன அழிப்புக்கான விதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் தற்போது விதைக்கப்படுகிறது'
-நடிகர் சித்தார்த்
ஆக... இந்துத்வாவுக்கு எதிரி யார் என்பதை அமீத்ஷா நன்றாகவே விளங்கி வைத்துள்ளார். மனு தர்மம் இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால் இஸ்லாமியர் அனைவரும் துடைத்தெறியப்பட வேண்டும் என்பது அவரது ஆசை. ஒருவரை வெளியாக்கினால் 10 பேர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். எந்த காலத்தில் இஸ்லாமியர் இல்லாத இந்தியாவை அமீத்ஷா உருவாக்கப் போகிறார்?
அமீத்ஷா எடுக்கும் இந்த பைத்தியக்காரத்தனமான முடிவால் நாடெங்கும் கலவரம் வெடிக்கும். உலக நாடுகள் தங்கள் முதலீடுகளை வாபஸ் பெறும். இந்தியா என்ற நாடு மொழி வாரியாக தனி நாடுகளாக மாறவும் வாய்ப்புண்டு. பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் வீழ்த்திய பெருமையை மோடியும் அமீத்ஷாவும் பெறுவார்கள். இத்தனையும் நடந்தாலும் உலக முடிவு நாள் வரை இஸ்லாமியர் இல்லாத இந்தியா என்ற கனவு நிறைவேறப் போவதில்லை.
மோடி, அமீத்ஷாவை விட கொடுங்கோலர்களான பிர்அவுன், ஹாமான், நம்ரூத் போன்ற மன்னர்களை எதிர்த்து வளர்ந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். எங்கு எதிர்ப்பு இருக்கிறதோ அங்குதான் இஸ்லாம் வீரியம் பெரும். இது உலக வரலாறு. அதனை இந்தியாவிலும் பார்க்கத்தான் போகிறோம்.
இது போன்ற மூடத்தனமான கருத்துக்கள் பரப்பப்டும் போது இந்து பெருங்குடி மக்களும் இந்துத்வாவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம்களை அழிக்க அமீத்ஷா பார்பனர்களை களம் இறக்கப் போவதில்லை. மாறாக... ஆர்எஸ்எஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட இந்து இளைஞர்களுக்கு தவறான வரலாறுகள் புகட்டப்பட்டு இஸ்லாமியருக்கு எதிராக கொம்பு சீவி விடுவார்கள். கோர்ட், வழக்கு, சிறைவாசம் என்று இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் அலைக்கழிக்கப்படுவார்கள். எனவே வாய் மூடி மவுனமாக உள்ள இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். மனு தர்மத்தால் பாதிக்கப்பட போவது இஸ்லாமியர் அல்ல. தலித் மற்றும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையை தட்டிக் கேட்கும் ஒரு சில இந்துக்களை சிந்திக்க விடாமல் பாகிஸ்தானைக் காட்டி பயமுறுத்தி ஒடுக்கி விடுகிறார்கள்.
நம்மோடு ஒப்பிடும் போது பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய். ஆனால் அதனை ஊதி பெரிதாக்கி நமக்கு சரி சமமான பலமுள்ளதைப் போல் காட்டி இந்துக்களை பயமுறுத்தி அதில் வெற்றியும் கண்டு விடுகின்றனர் மோடியும் அமீத்ஷாக்களும். மோடியும், அமீத்ஷாவும் அவிழ்த்து விடுவது வெறும் புளுகு முட்டைகள் தான் என்பதை என்று இந்திய மக்கள் உணருகிறார்களோ அன்றுதான் இந்தியாவுக்கு விடிவு காலம். அது சமீபமாக நெருங்கி விட்டதாகவே உணருகிறேன்.


5 comments:

  1. Who told you we want India without Muslim. We want only India patriotic Muslim. Unfortunately they are the majority. Except SAUDI-WAHABI slaves who are inturnAMERICAN SLAVES such as ?. You know whom am mentioning.

    ReplyDelete
  2. ஒண்ட வந்த பிடாரி: ஊர் பிடாரியை விரட்டியதாம்.

    அது போல் இந்தியாவின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம் இஸ்லாமியர்களை வெளியேற்றுவதா? அது கனவிலும் நடக்கப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் வரை எதையாவது அமீத்ஷா உளறிக் கொண்டிருக்கட்டும்.

    ReplyDelete
  3. சுவனப்பிரியன் அமித்ஷா சொல்வது சரியானது.
    கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் இந்துஸ்தானத்தோடு பாகப்பிரிவினை செய்து தனி நாடு பெற்றுக் கொண்டு- பிரிந்து போய்விட்டார்கள்.
    கிழக்கு பாக்கிஸ்தானில் இருந்த இந்துக்கள் இருபத்து ஆறு சதம்.
    அங்குள்ள சிறுபான்மை இந்துக்களை வாழவிடவில்லை.
    காபீர்கள் என்று இழிவு படுத்தி பொருளாதாரத்தை பாழாக்கி இந்துக்களை நெருக்கி தள்ளி இனப்படுகொலை நடத்தி அகதியாக்கி விரட்டி விட்டார்கள்.
    கிழக்கு பாக்கிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ள இந்துக்களுக்கு ஆதரவு கொடுப்பது எங்கள்-இந்திய அரசின் கடமை.
    இந்துக்களாகிய நாங்கள் மனிதநேயம் மிக்கவர்கள்.பிறமதத்தவர்களை அழியுங்கள் என்று எந்த புனிதரும் ரிஷியும் கட்டளையிடவில்லை. நதிகள் கடலில் சங்கமம்.அதுபோல் மனிதன் பின்பற்றும் பலவழிகளும் இறைவன்தாளில் சங்கமம் என்பது இந்து பண்பாட்டின் அடிப்படையாகும்.
    பாகப்பிரிவினை பெற்று தங்கள் பங்கை பெற்றவர்கள் -தனிநாடு வேண்டும் என்று கேட்டவர்கள் பிரித்து எடுத்துக் கொண்ட பங்கையும் தக்க வைத்துக்கொண்டு இந்துக்கள் வசம் உள்ள பங்கிலும் பங்கு கேட்பது போல் இந்தியாவிற்குள் கள்ளத்தனமாக ஊடுறுவி இந்துஸ்தானத்து நிலத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பது படுகாலித்தனம்.

    இந்திய முஸ்லீம்கள் ஒரு போதும் கிழக்கு பாக்கிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது.
    ப்ங்களா தேஷ்- கிழக்கு பாக்கிஸ்தான் மூன்று மாவட்டம் அளவிற்கு நிலத்தை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டு பிரச்சனையை பேசலாம்.
    இந்துக்கள் நிலத்தை கிழக்கு பாக்கிஸ்தான் கடையர்கள் திருட இந்திய முஸ்லீம்கள் ஆதரவு அளிப்பது பச்சை மதவெறி. இந்து சகோரர்களுக்கு துரோகம். தேசத்துரோகம்.

    ReplyDelete
  4. ஒண்ட வந்த பிடாரி: ஊர் பிடாரியை விரட்டியதாம்.

    தாங்கள் சரியாகத்தான் பதிவு செய்துள்ளீர்கள். ஒண்ட வந்த பிடாரி கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம்கள்

    ஊா்பிடாரி இந்தியாவில் வாழும இந்துக்கள்.

    கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம்கள்
    தங்கள் பங்கு நிலத்தில் வாழ்வது
    நியாயம்.நோ்மை.சத்தியம்.ஈமான். ஹலால்.

    ReplyDelete
  5. வினவ் என்ற இணையத்தில் கிடைத்தது. வெளியிடுவீர்கள் என் நம்புகின்றேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)