Tuesday, October 22, 2019

அமெரிக்காவில் பாதிரியாக பணி புரிந்து இஸ்லாத்தை ஏற்ற சகோ யூசுஃப்!

அமெரிக்காவில் பாதிரியாக பணி புரிந்து இஸ்லாத்தை ஏற்ற சகோ யூசுஃப்!
எந்த இயக்கமும், மார்க்கமும், மதமும் வன்முறையால் பரவாது. இன்று சங் பரிவாரத்தினர் பல முஸ்லிம்களை 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று அடிக்கினறனர். கொலையும் செய்கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் சங் பரிவாரத்தினர் இருந்தாலும் எவரும் இஸ்லாத்தை விட்டு இந்து மதத்தை ஏற்கவில்லை. அவர்களாக மனம் மாறி ஒரு மதத்தை பின்பற்றினால்தான் அது நீடிக்கும்.
இதைத்தான் சகோ யூசுஃப் இந்த வீடியோவில் அழகாக விவரிக்கிறார். அமைதி என்ற அரபி வார்த்தையிலிருந்து பிறந்ததே இஸ்லாம் என்ற சொல். எனவே இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் இவர் ரியாத் வந்திருந்தபோது கை குலுக்கி சில வார்த்தைகள் பேசியிருக்கிறேன். மிகவும் ஹாஸ்யமாக பேசக் கூடியவர். அமெரிக்காவில் பலர் இஸ்லாத்தை ஏற்க காரணமாக உள்ளவர். பல இறை இல்லங்கள் அமெரிக்காவில் அமைத்துக் கொண்டிருப்பவர். இறைவன் இவரது அழைப்புப் பணியை ஏற்றுக் கொண்டு நேரான வழியை அனைவருக்கும் காட்டுவானாக!


1 comment:

  1. பழைய செய்தி.பழைய செய்தி.பழைய செய்தி.
    பழைய செய்தி.பழைய செய்தி.பழைய செய்தி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)