Wednesday, February 12, 2020

கீழே கிடந்த ரூ 25000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன்!

கீழே கிடந்த ரூ 25000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன்!
07/ 02/ 2020 மாலை புதுவை வில்லியனூர், மூலக்கடையில் பர்சில் ரூ 25,000/- பணம் கீழே கிடந்துள்ளது. பணத்தை கண்டெடுத்துள்ளார் சுல்தான் பேட்டை கன்னி அமுது காயிதேமில்லத் அரசு மேல் நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் முகமது சாதிக் அலி.
பணத்தை கண்டெடுத்து அதை வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அதை வில்லியனூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஆறுமுகம் நடவடிக்கை எடுத்து பணத்திற்கு உரிமையாளரான தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், ஆழியூர், பரமேஸ்வரி க/பெயர் நாராயணன் என்வபரை கண்டுபிடித்து மறுதினம் 08/ 02/ 2020 பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவர் முகமது சாதிக் அலியை ஆய்வாளரும், பணத்தை திரும்ப பெற்ற பரமேஸ்வரி மற்றும் உறவினர்களும், ஆசிரியர்களும் அவரது நேர்மையை பாராட்டினர்.
குறிப்பு:
மறுநாள் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரன்பேடி அச்சிறுவன் முகமது சாதிக் அலி ஐ அழைத்து கவுரவித்ததும் பரிசு வழங்கியதும் பத்திரிகை ஊடகங்கள் மறைத்துவிட்டன. காரணம் சிறுவன் இஸ்லாமியன் என்பதாலா ??இல்லை இஸ்லாமிய சிறுவனுக்கு பாஜக ஆளுனரின் பாராட்டு பெற்றதாலா ??
ஊடகங்கள் உண்மையை மறைத்தால் என்ன?
சமூக வலைதளம் வழியாக உண்மையை. கொண்டு சேர்ப்பதே நமது கடமை. உங்களது பார்வைக்கு முதல்நாள் புதுவை காவல்துறை அதிகாரிகளின் பாராட்டும் இரண்டாம் நாள் புதுவையின் துணை நிலை ஆளுனர் அவர்கள் பாராட்டிய காணொளியும்


2 comments:

  1. சுல்தான் பேட்டை கன்னி அமுது காயிதேமில்லத் அரசு மேல் நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் முகமது சாதிக் அலி.

    நாமும் வாழ்த்துவோம். வாழக வளத்துடன்.

    ReplyDelete
  2. தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு பாக்கிஸ்தான் உருவாக முழு ஆதரவையும் அளித்து விட்டு பாக்கிஸ்தான் சுதந்திரதினத்தன்று பாக்கிஸ்தான் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா் முஹம்மது இசுமாயில். ஆனால் தமிழ்நாட்டை ஆக்கிரமிகக வேண்டும் என்ற திட்டப்படி ஒரு முஸ்லீம் கூட பாக்கிஸ்தான் செல்லவில்லை.

    இவருக்குகாயிதே மில்லத் என் ற பட்டம் தகுதிதானா ? சீமையில்லாத ...இவரை முஹம்மது இசுமாயில் என்று அழைப்பதுதானே நியாயம். காந்தியை காந்தி என்று அழைக்கின்றோம்.அந்த கோணத்தில் அவரை காயிதேமில்லத் என்று அழைப்பது முட்டாள்தனம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)