Wednesday, February 12, 2020

430 பேர் இஸ்லாமிய மதத்தில் கூட்டாக இணைந்துள்ளனர்.

கோயம்பத்தூர் மேட்டுப் பாளையத்தில் 430 பேர் இஸ்லாமிய மதத்தில் கூட்டாக இணைந்துள்ளனர். 3000 தலித்கள் இனிமேலும் மாறப் போவதாக அறிவித்துள்ளனர்.
தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு நீதி கிடைக்காததாலும், காலம் பூராவும் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தப்படுவதாலும் விடிவு தேடி இஸ்லாத்தை ஏற்றதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.
மார்க்ஸ் என்ற சகோதரர் தற்போது தனது பெயரை அபுபக்கர் என்று மாற்றிக் கொண்டுள்ளார். 'இன்று வரை மாரியம்மன் கோவிலில் தலித்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஹோட்டல்களில் இன்றும் தனி குவளைகள் வழங்கப்படுகின்றன. இனியும் பொறுக்கக் கூடாது என்றுதான் இந்து மதத்தை துறக்க முடிவெடுத்துள்ளோம்.' என்கிறார்.
சரத் குமார் தற்போது அப்துல்லாவாக பெயர் மாற்றியுள்ளார். '17 பேர் அநியாயமாக இறந்தபோது எந்த இந்து எங்களுக்காக குரல் கொடுத்தனர். இந்துக்களுக்காக கட்சி நடத்தும் அர்ஜூன் சம்பத் எங்கே போனார்? இன்று வரை கோவில்களில் எங்களை அனுமதிப்பதில்லை. நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஐந்து பள்ளிகளுக்கு சென்று தொழுதுள்ளேன். அனைத்து முஸ்லிம்களும் எங்களிடம் சகோதரர்களாக பழகுகின்றனர். இந்த சமத்துவத்தை இந்து மதத்தில் உங்களால் வழங்க முடியுமா?' என்கிறார்.
அரசு கெஜட்டிலும் இந்த மன மாற்ற நிகழ்வு பதியப்பட்டுள்ளது.
தகவல் உதவி
இந்தியா டுடே
12-02-2020
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
வழக்கமாக அரபு நாட்டு பணம் என்று பிரச்னையை திசை திருப்பாமல் இந்து மதத்தில் நுழைந்து விட்ட பார்பனிய வழக்கங்களை தூரமாக்க இந்து நண்பர்கள் முயற்சியுங்கள். சுய மரியாதை கிடைக்காத ஒரு இடத்தில் ஒரு மனிதன் எப்படி வாழ முடியும்?
இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரர்களின் வாழ்வில் இனி தீண்டாமை ஒழிந்து சமத்துவ வாழ்வு கிடைக்கும் சூழலை இறைவன் ஏற்படுத்துவானாக!


3 comments:

  1. அரசு கெஜட்டிலும் இந்த மன மாற்ற நிகழ்வு பதியப்பட்டுள்ளது.
    தகவல் உதவி
    இந்தியா டுடே

    12-02-2012
    வருடத்தை பாரு 2012
    இன்று நாள். 12.02.2020

    ReplyDelete
  2. டைப் செய்யும் போது தவறு வந்து விட்டது. தற்போது திருத்தியுள்ளேன்.

    இதில் தவறு கண்டுபிடித்த உனக்கு இந்து மதத்தில் உள்ள வர்ணாசிர கொடுமைகளை பற்றி ஒரு வார்த்தை இல்லையே....

    பாவம் நீயும் கறி வேப்பிலை போல் பார்பனர்களுக்கு உதவி கொண்டிரு. அவர்கள் வேலை முடிந்தவுடன் உன்னை தூர எறிந்து விடுவார்கள் கறி வேப்பிலையை போல... :-)

    ReplyDelete

  3. வர்ணாச்சிரம பிழைகள் பாதிப்புகள் அதற்கான தீர்வுகள்
    குறித்து பல பதிவுகளைச் செய்துள்ளேன்.

    இந்துக்கள் அனைவரும் காபீர்கள்என்கிறீர்கள்.குரான் சொல்கிறது எரியும் நெருப்பு காபீர்களுக்காக நரகத்தில் காத்துக் கொண்டிருக்கிறது.எரியாத நெருப்பு உள்ளதா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)