Saturday, February 15, 2020

நான் ஒரு உண்மையான ஹிந்து,

நான் ஒரு உண்மையான ஹிந்து, அதனை நான் இங்கு பிரகடனப் படுத்த விரும்புகிறேன் - ரமானுன்னி
ஓடும் ரயிலில் மாட்டிறைச்சி உண்பவர் என்று கூறப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட ஹாஃபிழ் ஜுனைதின் குடும்பத்திற்கு தனது சாகித்திய அகாடமி விருது பரிசுத் தொகையில் 99,997 ரூபாய் பணத்தை மலையாள எழுத்தாளர் ரமானுன்னி வழங்கியுள்ளார்.
தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததும் ஜுனைத்தின் தாயார் சாய்ரா பேகத்தை சந்தித்த அவர் அந்த தொகையை அவரிடம் வழங்கியுள்ளார். பரிசுத் தொகையில் மீதமுள்ள மூன்று ரூபாயை தன்னுடன் வைத்துக்கொண்ட அவர், அது தனது படைப்பான தெய்வத்திண்டே புஸ்தகம் நூலுக்கு கிடைத்த விருது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம் என்ற காரணத்தால் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு உதவியதால் தான் ஒரு உண்மையான ஹிந்து என்று பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “நான் ஒரு உண்மையான ஹிந்து, அதனை நான் இங்கு பிரகடனப் படுத்த விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.


1 comment:

  1. கோவையில் அல்உம்மா இயக்கம் குண்டு வெடித்து செத்த இந்துக்களுக்கு இவன் என்ன செய்தான்

    மும்பையில் கெர்சாப் குழு நடத்திய பயங்கரவாத தாக்குதல் களில் இறந்தவர்ளுக்கு என்ன செய்தான்.

    காஷ்மீரை விிட்டு துரத்தப்பட்ட இந்துக்களுக்கு இவன் என்ன செய்தான்.

    ----------------------------------------------------------------------
    இந்துக்களின் அரேபிய அடிமைகள் , முட்டாள்கள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)