Saturday, May 30, 2020

பேத்தியின் அன்பில் திளைத்திருக்கும் இளைய ராஜா!

பேத்தியின் அன்பில் திளைத்திருக்கும் இளைய ராஜா!
இனி இந்த குழந்தையை யாரும் 'என்ன சாதி' என்று கேட்க மாட்டார்கள். தனது தந்தையான யுவனின் இஸ்லாமிய பிரவேசத்தால் இந்த குழந்தைக்கு கிடைத்துள்ள வெகுமதி அது.
ஆயிரம் சட்டங்கள் போட்டும் ஆயிரம் சலுகைகள் கொடுத்தும் ஒழிக்க முடியாத சாதியை இஸ்லாம் வெகு இலகுவாக ஒரு நொடியில் ஒழித்து விடுகிறது.
யுவன் இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் அவரது தந்தையோடோ அல்லது அவரது அண்ணணோடோ எந்த முறுகலும் இல்லாமல் அவரவர் வழியில் வாழ்ந்து வருகின்றனர்.
அதே போல் ஏ ஆர் ரஹ்மானும் தனது அக்காவின் குடும்ப உறுப்பினர்களோடு இன்நு வரை சகோதர வாஞ்சையோடே வாழ்ந்து வருவதையும் பார்க்கிறோம்.
இஸ்லாம் வன்முறையால் பரவவில்லை: அதன் கொள்கைகளாலேயே பரவுகிறது என்பதற்கு இவை எல்லாம் நம் கண் முன் நிற்கும் சாட்சிகள்.


2 comments:


  1. இளையராஜா ஒரு நல்ல ஹிந்து. அவரிடம் உயா்ந்த பண்புகளை காணலாம். பிறரை காபீர் என்று வெறுக்கத் தெரியாத உத்தமன் அவர்.இவரது பேத்தி அப்படி வாழ்வாளா ?
    இந்த குழந்தையின் சிற்றப்பா திரு.கங்கை அமரன் எழுதிய ஒரு அருமையான பாடலை பதிவு செய்ய விரும்புகின்றேன்.


    மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
    பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
    வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே..

    ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
    நதி காய நேராமல் நீருற்று தாயே!
    நல் நிலம் பார்த்து தாயே!

    எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
    வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே!
    என் வளமான தாயே!

    பசி தாகம் காணாமல் பயிராக்கு தாயே!
    ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
    இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)

    புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
    புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள
    திரு குறையாமல் வாழ

    அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
    தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
    அது திரளாக வேண்டும்

    பல வீடு பல நாடு பல தேசம் என்று
    உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே!
    உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…)

    ஹிந்துக்கள் உயா்ந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரா்கள்.ஹிந்து பண்பாடு திரு.இளையராஜா மற்றும் சகோதரா் திரு.கங்கை அமரன் ஆகிய இருவரிடத்தில் மலா்ந்து மணம் வீசுகின்றது.

    ReplyDelete

  2. முகநூலில் ஒரு விமா்சனம்

    அப்துல் காலிக் என்று பெயரை போடாம யுவன் ஷங்கர் ராஜா
    என்று போட்டு கொள்வது ஏன்

    பணம் படுத்தும் பாடா இளையராஜா மகனே.

    யுவன் ஷங்கா் ராஜா என்ற பெயரை மறந்து விட்டு அப்துல் ...என்று போட்டுக் கொள்வாரா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)