Tuesday, July 14, 2020

இஸ்லாமிய அறிவியல் பொற்காலம்...

இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் என இன்றைய அறிவியல் துறையினரால் வர்ணிக்கப்படும், 7-ஆம் நூற்றாண்டிலிருந்து 16-ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், வேதியியல் (Chemistry) எப்படி உருப்பெற்றது என்பதை, பிரபல வரலாற்றாசிரியரான வில் துரான்ந் தன்னுடைய 'நாகரிகத்தின் கதை' எனும் நூலில் கூறும் போது, 'வேதியியலை ஒரு அறிவியலாக பெரும்பாலும் உருவாக்கியது முஸ்லிம்கள்தான்' என்கிறார்.

ஏன் இப்படி சொன்னார் என்பதை ஒரு எளிய உதாரணம் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலாம். முஸ்லிம்கள் கண்டுபிடித்த, இன்று அதி முக்கியமானதாக கருதப்படும் வேதியியல் யுக்திகளில் ஒன்று சுத்திகரிப்பு யுக்தியாகும். ஆங்கிலத்தில் Pure Distillation என்பார்கள். சுத்திகரிப்பு என்றால் நீராவியாக்கி பின்னர் குளிர்விப்பது என்று அர்த்தம்.

இந்த யுக்தியை கொண்டு வாசனை திரவியங்களை உருவாக்கினார்கள். எப்படி செய்தார்களென்றால், ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொண்டு, அதன் மேல்பக்கத்தை ஒரு வளைந்த கண்ணாடி குழாயில் சொருகிவிட்டனர். குழாயின் மற்றொரு முனையை மற்றுமொரு குடுவையின் உள்ளே விட்டுவிட்டனர் (பார்க்க படம் 1).

இப்போது ரோஜா இதழ்களை அந்த குடுவையில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அதன் மேல்பக்கத்தை வளைந்த குழாய் மூலம் மூடிவிட்டனர். பின்னர் குடுவையை சூடுபடுத்த துவங்கினர். அப்போது உருவாகும் நீராவி, மேல்பக்கத்தில் உள்ள வளைந்த குழாயின் மூலம் கீழே உள்ள குடுவையை வந்து அடையும். இப்போது அந்த நீராவி குளிர்ந்து தண்ணீரானவுடன் நுகர்ந்து பார்த்தோமானால் அதில் ரோஜா மணம் கமழும். கிட்டத்தட்ட ஒரு ரோஜா வாசனை (Rose Cent) திரவியம் ரெடி. இந்த கருவிக்கு பெயர் "அளம்பிக்" என்பதாகும் (Alembic, படம் 2). இந்த அலம்பிக்கை பல்வேறு பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களின் ஆய்வு முறைகள், கிரேக்க முறைகள் போல அல்லாமல், நன்கு செய்முறைகள் செய்யப்பட்டு ஆய்வு செய்த பிறகே வெளிவந்தன. இதனாலேயே அவர்கள் கண்டுபிடித்த பல யுக்திகளை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். தாங்கள் பயன்படுத்திய கருவிகளை எப்படி உருவாக்குவது என எதிர்கால சந்ததிகளுக்காக நூல்கள் எழுதியிருக்கிறார்கள் என்றால் அவர்களின் பரந்து விரிந்த பார்வையை நாம் புரிந்துக்கொள்ளலாம். மேலும், முஸ்லிம்களின் கண்டுபிடிப்புகள் இறைநம்பிக்கையை சார்ந்தே வலுப்பெற்று வந்துள்ளன. மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்தாலும், ஒரு சிறிய பள்ளியை பக்கத்தில் ஏற்படுத்திக்கொள்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி இன்றைய நிலை? நவீன உலக முஸ்லிம் ஆய்வாளர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் காண்போம்..

சகோ @aashiq Ahamed ன் பதிவிலிருந்து....





3 comments:

  1. Pack all nobel prizes for Muslim scientist suvanapriyan

    ReplyDelete
  2. //Pack all nobel prizes for Muslim scientist suvanapriyan//

    பல அறிவியல் கண்டு பிடிப்புகளின் மூலகர்த்தா யார் என்று பார்த்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருப்பர். எனவே கொடுப்பதில் தவறில்லை.

    ReplyDelete
  3. முஸ்லீம்கள் என்றால் மூர்க்கர்கள் என்பதே பொது கருத்து.
    எகிப்தியர்கள் முஹம்மது பிறப்பதற்கு முன்பாகவே பிரமீடு என்ற பிரமாண்டமான கட்டடங்களை கட்டியவர்கள். பிணங்களை பாதுகாக்கும் அறிவியல் கற்றவர்கள். எகிப்தியர்களுக்கும் இந்தியர்களுக்கும் நெருக்கமான உறவு வணிக தொடா்பு இருந்தது. எகிப்தியர்கள் பெரும்பாலும் யுதர்கள்தாம். அவர்கள் விவசாயம் செய்தார்கள். பண்பாடு மிக்க வாழ்க்கையை வாழ்ந்தார்க்ள. போா் பெண்களை சிறை எடுப்பது அடிமையாக பிடிப்பது யுத்த வெறி இல்லா கூட்டம் எகிப்தில் நிறைய இருந்தது. அவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்க்ள. சில உண்மைகளை க்ணடுபிடித்திருப்ார்கள். பிரமீடு போன்ற பிரமாண்டமான கட்டங்களை கட்டும் திறமை அவர்களிடம் இருந்தது அவர்கள் விஞ்ஞான பொறியில் அறிவில் மே்ம்பட்டு இருந்தார்கள் என்பதற்கு நிரூபணம் ஆகும்.
    என்று உமா் என்ற- இரண்டாம் கலிபா - முஹம்மதின சீடன் காலைஎகிப்தில் வைதது போரை துவக்கினானோ அன்றே எகிப்து வீழ்ந்து போனது. கடுமையான கொடூரமான போா் செய்து எகிப்தை கைபற்றிய உமா் அந்த நாட்டின் கலாச்சாரம் பண்பாடு கட்டடக் கலை அறிவியல் சாதனைகள் அனைத்தையும் அழித்து பாழாக்கினான். உமரால் நாசமானது எகிப்து.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)