Sunday, August 30, 2020

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித்துக்கு நிகழ்ந்த கொடூரம்!

 யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித்துக்கு நிகழ்ந்த கொடூரம்!

எவ்வளவு பெரிய தவறுகளை இவர்கள் செய்திருந்தாலும் சட்டத்தை கையிலெடுக்க இவர்கள் யார்? காவல்துறையும், நீதி மன்றங்களும் என்ன செய்கிறன்றன? அவர்களின் கைகள் ஏற்கெனவே கட்டப்பட்டு விட்டது. எனவே தான் 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' ஆகிறான்.

இது போன்ற நிகழ்வுகள் வட மாநிலங்களில் தினமும் நடக்கும் நிகழ்வாகி விட்டது. தென் மாநிலங்களில் இது போன்ற குற்ற செயல்கள் வன் கொடுமைகளை செய்ய ஆதிக்க சாதியினருக்கு தைரியம் வருவதில்லை. அந்த அளவு பெரியார் இந்த மண்ணில் தனது கருத்துக்களை விதைத்து விட்டுச் சென்றுள்ளார்.

தாமரையை மலரச் செய்வோம் என்று பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சற்று வட மாநிலங்களின் பக்கம் உங்கள் பார்வையை செலுத்தி விட்டு வாருங்கள்.




1 comment:

  1. அகில உலகை படைத்த சர்வ சக்தி பெற்ற அனைத்தும் அறிந்த அல்லா வின் ஆட்சியில்தான் இந்த தவறு நடைபெறுகிறது.

    தவறாக நடப்பவர்களை சட்டப்படி நடத்தாமல் ஊா் பஞ்சாயத்து விசாரிக்கும் முறை சில இடங்களில் உள்ளது. இது தவறு.கல்வி அவர்களை எட்டவில்லை. முஸ்லீம்கள் மத்தியில் ஊா் வழக்குகளை ஜமாத் விசாரிக்கும் பழக்கம் இருக்கிறது. அதில் அநீதி என்று ஏகப்பட்ட புகாா் உள்ளது.வெட்டு பழி குத்து எல்லாம் நடந்த சம்பவங்கள் ஆயிரம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)