Wednesday, October 07, 2020

இளையராஜாவின் மூத்த சகோதரியின் மகன் கண்மணி இன்று அப்துல் லத்தீஃபாக!

 இசைஞானி இளையராஜாவின் மூத்த சகோதரியின் மகன் கண்மணி இன்று அப்துல் லத்தீஃபாக!


இவரும் இவரது மனைவியும் இவரது பிள்ளைகளும் தற்போது தூய இஸ்லாமிய வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.


இதற்கு முன்பு இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்ற விபரம் நம் அனைவருக்கும் தெரியும். இன இழிவு நிரந்தரமாக நீங்க வர்ணாசிரம கொடுமையிலிருந்து விடுபட இஸ்லாம் ஒன்றுதான் சிறப்பான தேர்வு. இவரது அடுத்த தலைமுறை எந்த சாதி என்றே அறியாமல் வளர்க்கப்படுவார்கள். இன்று தமிழகத்தில் உள்ள 95 சதவீத இஸ்லாமியர்கள் முன்பு இந்து மதத்திலிருந்து மாறியவர்களே. இன்று அவர்கள் எந்த சாதியிலிருந்து மாறினோம் என்பதை மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். தமிழில் பெயர் வைக்க இஸ்லாம் தடுக்கவில்லை. என்றாலும் அரபியில் வலிந்து பெயர்களை வைத்துக் கொள்ள காரணம் பெயரை வைத்து யாரும் சாதியை தேடக் கூடாது என்பதற்காகத்தான். 


சகோ அப்துல் லத்தீஃபின் இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் இறைவன் சிறப்பாக்கி வைப்பானாக! 




1 comment:

  1. முறையான சமய கல்வி அளிக்காவிடில் இது போன்ற பிறழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.

    இந்து ஒருவன் மதம்மாறித் தொலைந்தால் இந்துக்களின் எண்ணிக்கை ஒன்று குறைகிறது. இந்து விரோதிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது- சுவாமி விவேகானந்தா்.

    ஆப்பானிஸ்தானத்தை இந்துக்கள் இழந்து விட்டோம்.

    பாக்கிஸ்தானை இழந்து விட்டோம்.

    பங்களாதேஷ்யையும் இழந்து விட்டோம்.

    இந்தியாவையும் இந்துக்கள் இழப்பார்களா ?

    அகதியாக எங்கே போவர்கள் ?

    இவரை்களைப் போன்ற ஒரு மடையரகளை எங்கேயாவது பார்க்க முடியுமா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)