Wednesday, February 17, 2021

யோகியின் ஆட்சியில் தலித்களுக்கு நீதி கிடைக்குமா?

 ராம ராஜ்ஜியம் நடத்துவதாக கூறிக்கொள்ளும் யோகி ஆளும் உபி உன்னாவ் கிராமத்தில் மூன்று தலித் சிறுமிகள் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க சென்றுள்ளனர். இரவு வெகு நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். 


காவல்துறை தேடும்போது மூன்று சிறுமிகளும் ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் இறந்து விட்டனர். ஒரு சிறுமி மருத்துவ மனையில் உள்ளார். போஸ்ட் மார்டத்துக்காக உடல்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமான மனித மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும். குழந்தையை இழந்த பெற்றோர்களின் துயரம் என்னவென்பது ஒரு குடும்பத்தை நடத்துபவனுக்குத்தான் தெரியும். யோகியின் ஆட்சியில் தலித்களுக்கு நீதி கிடைக்குமா?


deccanherald

18-02-2021


#Save_Unnao_Ki_Beti #DalitLivesMatter






1 comment:


  1. யோகியின்ஆட்சியில் கிடைக்காமல் ஔரங்கசீப் ஆட்சியிலா இந்துக்களுக்கு நீதி கிடைக்கும் ?

    யோகி அவர்கள் சமூக நீதிக் காவலா். முந்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமா நாடடை பாழாக்கியிருக்கின்றார்கள். குப்பைகள் கொஞ்சமா? அள்ளி அள்ளி தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

    நிச்சயம் நியாயம் கிடைக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)