Sunday, February 07, 2021

அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம்.

 “(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்”.


“அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்”. (திருக்குர்ஆன் 17:23,24)



1 comment:

  1. சிரவணன் கதை குரானுக்கு முந்தியது.

    இந்தியாவில் பெற்றோர்களை பேணுதல் முறை சிறப்பாக உள்ளது.

    அரேபியாவில் இருந்து எந்த கருத்தும் இறக்குமதி செய்ய வேண்டியதில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)