Thursday, March 18, 2021

சீன அரசுக்கு எதிராக கஜகஸ்தான் இஸ்லாமிய பெண்கள்!

 


சீன அரசுக்கு எதிராக கஜகஸ்தான் இஸ்லாமிய பெண்கள்!

 

சீன அரசு ஜிங்ஜியாங் மாகாணத்தை அநியாயமாக தனது எல்லையாக தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டது. அந்த மக்கள் சீன மக்களோடு கலாசாரம் மதம் மொழி போன்றவற்றில் முற்றிலும் வேறுபட்டவர்கள். ஆனால் இயற்கை எழில் கொஞ்சும் பல கனிம வளங்களை கொண்ட ஜிங்ஜியாங் மாகாணத்தை எப்படியாவது முற்றிலும் தனது கட்டுப் பாட்டில் கொண்டு வர பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது சீனா .

 

ஜிங்ஜியாங் மக்கள் கஜகஸ்தான் மக்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். சீனா பல இளைஞர்களை சிறை பிடித்து இஸ்லாத்தை விடுமாறு கட்டாயப்படுத்துகிறது. அவர்களின் தாய் மொழியை கைவிட்டு மேண்ட்ரின் மொழியை படிக்க கட்டாயப்படுத்துகிறது. கம்யூனிஸத்தை பின் பற்றுமாறு கட்டாயப்படுத்துகிறது.

 

எந்த ஒரு மொழியும் சித்தாந்தமும் கட்டாயப்படுத்தி வந்து விடாது. அந்த மக்கள் மனதளவில் ஏற்காத வரை என்ன சட்டம் போட்டாலும் அது ஏட்டுச் சுரைக்காய் தான். இந்துத்வாவையும் சமஸ்கிரத மொழியையும் திணிக்க முயலும் நம் நாட்டு அரசும் சீன அரசும் இதில் ஒத்து போகிறார்கள்.

 

கஜகஸ்தான் இஸ்லாமிய பெண்கள் சீன அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். தொலைந்து போன அல்லது சிறையில் வாடும் தம் உறவினர்களை சீன அரசு திருப்பித் தர வேண்டும் என்று போராடுகின்றனர்.

 

சீன கம்யூனிஷ அரசு கட்டாயப்படுத்தி இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறது. ஆனால் சவுதி அரேபியாவுக்கு வேலை நிமித்தமாக வரும் பல சீனர்கள் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்பதை பார்க்கிறோம். அடக்கு முறை எந்த நிலையில் வந்தாலும் இஸ்லாம் தனது செய்தியை அந்த மக்களுக்கு எந்த வகையிலாவது கொண்டு சென்று விடுகின்றது.

 

எல்லா புகழும் இறைவனுக்கே!

 

ஆக்கம்

சுவனப்பிரியன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 comment:

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)