முறுக்கு மீசை வைத்ததால் தாக்கப்பட்ட தலித் இளைஞன்!
குஜராத் அஹமதாபாத்துக்கு அருகில் கரக்தல் கிராமம். இங்கு குடும்பத்துடன் வசித்து வரும் சுரேஷ் வகேலா 22 வயது தலித் இளைஞன். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இளைஞர் அல்லவா? எனவே அழகுக்காக முறுக்கு மீசை வைத்துள்ளார். (விருமாண்டி போல) இது மேல் சாதியினருக்கு கோபத்தை வரவழைத்தது. தாமா பாய் தாக்கூர் என்பவன் தலைமையில் ஒரு கும்பல் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷை எழுப்பி 'முறுக்கு மீசையெல்லாம் நீ வைக்கலாமா?' என்று கேட்டு அடித்துள்ளனர். தடுக்க வந்த அவரது சகோதரியையும் தாக்கியுள்ளனர். சுரேஷூம் அவரது சகோதரியும் தற்போது மருத்துவ மனையில்.
மீசையை தனக்கு பிடித்த அளவில் வைப்பதற்குக் கூட இந்திய நாட்டில் அனுமதியில்லை. இப்படி ஒரு நிலை உலகில் எந்த நாட்டிலாவது இந்த அறிவியல் உலகில் கேள்விப்பட்டுள்ளோமா?
தகவல் உதவி
அஹமதாபாத் மிர்ரர்
25-05-2021

ReplyDeleteவிநோதங்களுக்கு பஞ்சமில்லை. சுவனப்பிரியனை நம்ப முடியாது.
இந்து அட்டவணை சாதி மக்களுக்கு இன்னும் பல சமூக பிரச்சனைகள் உள்ளது என்பதை
ஒப்புக் கொண்டுதான் வேண்டும்.
இந்து மதரசாக்கள் கிராமம்தோறும் உருவாக்கப்பட வேண்டும்.