அஸ்ஸாம் - கச்சார்
கச்சார் கல்லூரி வளாகத்தில் ஏபிவிபி தேச விரோத கும்பல் 'இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் ஜெய் ஸ்ரீராம் கூறியே ஆக வேண்டும்' என்று கூச்சலிட்டு செல்கிறது. இந்த தேச விரோத கும்பல் மீது அரசோ கல்லூரி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முஸ்லிம் ஆன நான் ஏன் ராமனை வணங்க வேண்டும்? இந்திய நாட்டுக்கு ஆரியர்கள் வருகைக்கு பிறகே ராமனை கடவுளாக வணங்கும் வழக்கம் ஒரு சிலரிடம் ஏற்பட்டது. இவ்வாறு கைபர் போலன் கணவாய் வழியாக உள்ளே வந்த ராமனை நான் ஏன் வணங்க வேண்டும்? இந்தியனாக இருப்பதற்கும் ராமனை கடவுளாக ஏற்பதற்கும் என்ன சம்பந்தம். ராமனை கடவுளாக வழிபடுவது ஒரு சில இந்துக்களின் வழக்கம். பெரும்பாலான இந்துக்கள் தங்கள் குல தெய்வங்களையே வணங்கி வருகின்றனர். கிராமம் தோறும் இந்துக்கள் தங்கள் முன்னோர்களையே சிலைகளாக வடித்து வணங்கி வருகின்றனர்.
கைபர் போலன் கணவாய் வழியாக எனது நாட்டுக்குள் புகுந்து தங்கள் கலாசாரத்தை எனது நாட்டு மக்களின் மேல் அடாவடியாக புகுத்தும் 2 சதவீதமே இருக்கும் ஆரிய கும்பலின் கடவுளை நான் ஏன் வணங்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளானாலும் ஆர்எஸ்எஸ் போன்ற தேச விரோத கும்பலின் பாய்ச்சல் முஸ்லிம்களிடம் எடுபடாது என்று மட்டும் சொல்லி வைக்கிறோம்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)