30 ஆண்டுகள் சபரிமலை சென்றவர்களை குருசாமி என்பார்கள், இன்று எல்லா சாதியினரும் சபரி மலைக்கு செல்கின்றனர். ஆனால் நம் பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்களால் சபரிமலைக்கு செல்ல முடியாது. ஏன் என்றால் கேரளாவில் கோயில்களை சுற்றியுள்ள சாலையில் ஆடு,மாடு,பன்றி கூட நடக்கலாம். மனிதர்கள் நடக்க கூடாது என்ற நிலை இருந்தது.
பெரியாரின் வைக்கம் போராட்டத்தால் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என திருவிதாங்கூருக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதற்கும் சட்டம் இயற்றப்பட்டது.இன்று அனைத்து தரப்பினரும் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான உரிமையை வாங்கி கொடுத்தது பெரியார்!
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)