விரைவில் வெளிவரவிருக்கும் 'பத்தான்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பேஷரம்' பாடலில் தீபிகா படுகோன் காவி கலர் பிகினி அணிந்திருந்தது எதிர்ப்பலையை உருவாக்கி இருக்கிறது.
அப்படி அவர் காவி அணிந்து கொண்டதை நானும் எதிர்க்கிறேன்.
- சுதந்திர இந்தியாவில் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் அப்பாவிகள் சாகக் காரணமான தீவிரவாதிகள் அணிந்த நிறம் அது.
- அக்கலவரங்களில் நினைக்கவே நடுநடுங்கும் வன்புணர்வுகளை அரங்கேற்றிய காமக்கொடூரர்கள் அணிந்த நிறம் அது.
- மாடு கடத்துகிறார்கள் என்ற போர்வையில் அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொலை செய்த சைக்கோக்கள் அணிந்த நிறம் அது.
- சாமியார்கள் போர்வையில் மாநாடு நடத்தி இன ஒழிப்புக்கு திட்டங்கள் வகுத்த கொலைகாரக் கூட்டம் அணிந்த நிறம் அது.
- கலாச்சாரத்தைக் காக்கிறோம் என பப், நைட் கிளப்களில் புகுந்து பெண்களை அடித்துத் துரத்திய முட்டாப்பீசுகள் அணிந்த நிறம் அது. –
ஆன்மீகப் பம்மாத்துப் பண்ணி சாமியார் வேடமிட்டு ஆயிரம் கோடிகளில் புழங்கி, அதுவும் போதாதென ஆசிரமம் வரும் பெண்களை பாலியல் தொல்லை செய்த கேடிகளின் நிறம் அது.
- மானுட வரலாற்றின் மாபெரும் கருணையாளனை, ஒரு மகாத்மாவை சுட்டுக் கொலை செய்யக் காரணமாக இருந்த நிறம் அது.
அந்த நிறத்தைப் போய் அன்பும், அழகும், பரிவும், கருணையும் நிறைந்த எங்கள் தீபிகாவுக்கு அணிவித்ததற்காக படத்தின் இயக்குனருக்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறேன்.
Sridhar Subramaniam
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)