#பாலாஜி_பாலா என்ற சகோதரரின் பதிவு இது
. நேற்று முன்தினம் இரவு திடிரென என்மகளுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு இரவு11.00 மணிக்கு அனுமதித்தோம். சிகிச்சைக்கு தேவையான ஒரு மருந்து வெளிபோய் வாங்கவேண்டிய சூழ்நிலை. இரவு 12க்கு மேல்சென்றதால் எல்லா மருந்துகடைகளும் மூடி இருந்தது.
ஒருவர் சொல்ல கேட்டு சுந்தரம் டாக்கிஸ் "பாவா மெடிக்கல்" அவர்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி ஏழுப்பினோம். உடனே திரு.சதாம் மற்றும் அவர் குடும்பத்தினர் அவர்கள் கடையை திறந்து வேண்டிய மருந்துகளை தந்து ஒரு ருபாய் கூட வாங்காமல் . " முதலில் குழந்தையை பாருங்கள் ஜி போங்க பணம் எதுவும் வேண்டாம்" என்று சொல்லி மருந்துகளை தந்து உதவினார்கள். இப்போது குழந்தை நலமுடன் இருக்கிறாள். தேவையில்லாத பல விஷயங்களை பதிவு போடுகிறோம். என்னதான் நேரில் சென்று நன்றி கூறினாலும் மனம் நிறைவு பெறவில்லை
அதான் இந்த நன்றி பதிவு. வாழ்க அவர் தொண்டு வாழ்க அவர்தம் குடும்பம்...

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)