Saturday, July 15, 2006

குண்டு வெடிப்பு ! போலீசாரின் எதிர்பார்த்த தீர்ப்பு!

குண்டு வெடிப்பு ! போலீசாரின் எதிர்பார்த்த தீர்ப்பு!

பம்பாய் குண்டு வெடிப்பை ஒட்டி நாம் என்ன அனைவரும் எதிர் பார்த்தோமோ அது போன்றதொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் போலீசார்.வழக்கப்படி இருநூறு சிம் மாணவர்களை விசாரணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளது காவல்துறை. மும்பை காவல் துறையின் லடசணத்தைப் பற்றி நான் ஏற்கெனவே எழுதியும் இருக்கிறேன். என்கவுண்டருக்கு ஆட்கள் தேவைப் பட்டால் என்னிடம் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தயாநாயக் என்ற போலீஸ் அதிகாரி சர்வ சாதாரணமாக குஜராத் போலீசாரிடம் கேட்கும் நிலையில்தான் மும்பை காவல்துறையின் லட்சணம் இருக்கிறது.அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்வாவாதிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விசாரணைக் கைதியாக்கி உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மூன்று நாளில் நூறு பேருக்கு மேல் வழக்கம் போல் வெளியாகி விடுவார்கள். பாக்கி உள்ளவர்களில் பத்து பேரை அவர்களாகவே தேர்வு செய்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து அவர்களிடமிருந்து 'நான்தான் குண்டு வைத்தேன்' என்ற வாக்கு மூலத்தையும் வாங்கி விடுவார்கள். ஜெய் ஹிந்த்!

ஒனறை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது குண்டு வைத்து இந்தியாவை பிரச்னைக்குள்ளாக்க முஸ்லிம்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? அவர்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கும் காங்கிரஸ் ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது. சமீபகாலமாக எந்த கலவரங்களும் நடைபெறவில்லை. முஸ்லிம்களுக்கு தனி இட ஓதுக்கீடு அவசியம் என்று அரசும் சிந்திக்க தொடங்கி விட்டது. இந்த நிலையில் எந்த முஸ்லிமாவது இது போன்று அதுவும் அப்பாவிகளை இலக்காக்கி குண்டு வைப்பதற்கு அவர்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? இதை எல்லாம் விரும்பாத இந்துத்வவாதிகளின் காரியமாகக் கூட இருக்கலாமே என்ற ரீதியில் ஏன் போலீஸ் சிந்திக்க மறுக்கிறது?

ஒரு விஷயம் பாருங்கள். குண்டு வைத்த நபர்கள் ரெயில்வே ஸ்டேஷனில் நின்று மற்றவர்கள் கேட்கும் விதமாக 'பையை வைத்தாகி விட்டது' என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்களாம். அந்த நபர் தநதத தகவலின் அடிப்படையில் கம்ப்யூட்டர் உதவி கொண்டு போட்டோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். என்ன கூத்து சார்?குண்டு வைப்பவன் யாராவது பொது இடத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நின்று இப்படி பேசியிருப்பானா?இதைக் கூட சிந்திக்க வேண்டாமா நம் காவல் துறை.

பிறகு யார்தான் குண்டு வைத்திருப்பார்கள்? நான் சந்தேகப்படும் நான்கு குழுக்களை கீழே பட்டியலிடுகிறேன். இவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக குண்டு வைத்திருக்க முடியும். ஒழுங்கான விசாரணை நடைபெற்றால் குற்றவாளிகள் பிடிபட சாத்தியம் உண்டு.

1) பாகிஸ்தான்

இது ஒரு நாடு மற்றொரு நாட்டை முன்னேற விடாமல் தடுக்க நினைக்கும் அரசியல் சதுரங்கம். நம் நாடு எல்லாத் துறையிலும் அதி வேக முன்னேற்றம் அடைவதைக் காண சகிக்காமல் பாகிஸ்தான் இந்த பாதக செயலை செய்திருக்கலாம். அப்படி நிரூபணம் ஆனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியைக் நம் இந்திய ராணுவம் கொடுத்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

2) தீவிரவாதிகள்!

தனி நாடு கோரி போராடி வரும் காஷ்மீர் தீவிரவாதிகள், உல்பா, நக்ஸலைட்டுகள் என்று நாட்டில் இருக்கும் அனைத்து தீவிரவாத கும்பலின் மீதும் ஒரு கண் வைத்து, இவர்களில் யார் உண்மையிலேயே இந்த மாபாதக செயலை செய்தது என்று விசாரணையை முடுக்கி விட வேண்டும்.உண்மை குற்றவாளிகள் பிடிபடும் பட்சத்தில் அவர்களை தூக்கில் ஏற்றி இது போல் அப்பாவிகளை இலக்காக்குபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

3) சிவசேனா!

பால்தாக்கரேயின் மனைவி நாட்டுக்காக என்ன செய்து விட்டார்? அவருக்கு எதற்கு சிலை? அந்த சிலையில் யாரோ தார் பூசி விட்டார்களாம். அம்பேத்கார் இயக்கத்துக்கும் சிவசேனாவுக்கும் ஜென்ம பகை. அவர்களில் கூட யாராவது ஒருவர் செய்திருக்கலாம். அல்லது சிவசேனாவின் கோஷ்டிப் பூசல் நமக்கு தெரியும். அவர்களிலேயே கூட ஒருவர் இச் செயலை செய்திருக்கலாம். இதைக் காரணமாக வைத்து பம்பாயை ஸ்தம்பிக்கச் செய்தது சிவசேனா. இரண்டு பேர் உயிரையும் இழந்தனர். தற்போது ஆட்சியிலும் இல்லை. பழையபடி இந்துக்களின் ஓட்டையும் சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும். இதற்கெல்லாம் ஒரே வழி குண்டு வைத்து பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு பிறகு கலவரத்தை உண்டு பண்ணி முஸ்லிம்களின் சொத்தையும், உயிரையும் எடுப்பது. எனவே இந்த வகையிலும் போலீசார் சிந்திக்க வேண்டும்.

4) பி.ஜே.பி

தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த நாசகார கும்பல். இரண்டு எம. பி யாயிருந்தவர்கள் பிறகு எப்படி ஆட்சியைப் பிடித்தார்கள்? பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று அண்ட புளுகை அவிழ்த்து விட்டு நாடு முழுக்க ர(த்)த யாத்திரையை நடத்தி இந்துக்களின் உணர்ச்சியை தூண்டி விட்டு அதன் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்கள் தானே இந்த பி.ஜே.யினர்.பிறகு நாட்டுப்பற்றுக் கொண்ட ஒரே இயக்கம் நாங்கள் தான் என்று கொஞ்கம் கூட வெட்கமில்லாமல் பேசவும் செய்வார்கள்.

இதற்கு முன் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பானர்ஜியின் அறிக்கை கூறுவதென்ன? போலீசாரின் அறிக்கை பெட்ரோல் கேண்களில் கொண்டு வரப் பட்டு பெட்டியின் மீது முஸ்லிம்கள் எறிந்து தீ வைத்தனர் என்று. ஆனால் பானர்ஜி அறிக்கையோ 'கர சேவகர்கள் ரயிலின் உள்ளே ஸ்டவ் போன்ற சாதனங்களால் சமையல் செய்து வந்தனர்.அவற்றிலிருந்து பரவிய தீயே அந்த பெட்டி எறிய காரணமானது. வெளியிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை. இது ஒரு விபத்து'. என்று அறிக்கை அளித்திருக்கிறாரே! இதைக் காரணமாக வைத்து முஸ்லிம்களை கருவறுத்த நரேந்திர மோடி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் நினைத்தபடியே ஹிந்துக்களின் ஓட்டைப் பெற்று மறுபடியும் ஆடசியைப் பிடித்து விட்டார்.

அதே போன்ற சூழ்நிலைதான் தற்போதும். காங்கிரஸ் மேலும் மேலும் நல்ல பெயர் எடுத்து வருகிறது.அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி பி.ஜே.பி யின் கையை விட்டுப் போய் விட்டது. முஸ்லிம்களுக்கு வேறு இட ஒதுக்கீடு பற்றி பேச்சு அடிபடுகிறது. இதை எல்லாம் முறியடிக்க ஒரே வழி குண்டு வைத்து பழியை முஸ்லிம்கள் மேல் போட்டால், பிறகென்ன இந்துக்கள் ஓட்டைப் பெறலாம். ஆட்சியிலும் அமரலாம். இந்த ரிதியிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட வேண்டும்.

இந்த விசாரணை ஐந்து பேர் கொண்ட குழுவாக இருந்து இதில் அனைத்து மதத்தவரும் இடம் பெற்று பாரமட்சமற்ற அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.ஐ யின் விசாரணைக்கும் உட்படுத்த வேண்டும். இதன்படி அறிக்கை வெளியாகுமானால் தற்போது கைதாகி இருக்கும் கல்லூரி மாணவர்கள் விடுதலை செய்யப் படுவர்.உண்மை குற்றவாளிகள் கூண்டிலேற்றப் படுவர். இப்படி செய்யாமல் காவல் துறையின் அறிக்கையை இந்த அரசு நம்புமானால் அப்பாவிகள் சிறைவாசம் அனுபவிக்கவும், குற்றவாளிகள் வெளியில் உலா வரவும் அரசே வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகி விடும்.

நல்லவேளை! நரேந்திர மோடி, சிவசேனா,பி.ஜே.பி போன்ற ஒரு பாசிச அரசு தற்போது மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இல்லை. இதனால் குண்டு வெடிப்புக்குப் பிறகு வழக்கமாக முஸ்லிம்களை கொல்வது தடுக்கப் பட்டுள்து. இந்துத்வா வாதிகளின் ஆசையிலும் மண் விழுந்து விட்டது. அந்த வகையில் பொறுமை காத்த மஹாராஷ்டிர மக்களை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

எது எப்படியோ! உண்மைக் குற்றவாளிகள் சமூகத்தின் முன் நிறுத்தப் பட்டு தூக்கில் இடப் பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தித்தவனாக!

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்

51 comments:

  1. ஏன் ஜார்ஜ் புஷ்ஷை விட்டு விட்டீர்கள். ஒருவேளை அவர் குண்டு வைத்திருப்பாரோ?

    இல்லை இல்லை. நிச்சயமாக எனக்கு தோன்றுகிறது, இப்படித்தான்..

    தன் மேலே இருக்கிற கேசை மூட வைப்பதற்காக ஜெயலலிதாவோ, சங்கராச்சாரியரோ தான் இப்படி செய்திருக்கிறார்கள்.

    இதற்கு போய் அப்பாவி சிமி மேல் பழி போட்டு ..... என்ன துரோகம்...

    ஐயா, உங்களைப் பார்த்தால் பரிதாபமாய் இருக்கிறது.

    சிரிப்பு வர வேண்டும் என்று கஷ்டப்பட்டு நீங்கள் எழுதியும் சரியாக நகைச்சுவை தங்களுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.

    மேலும் முயற்சியுங்கள்....

    நன்றி

    ReplyDelete
  2. என்ன சுவனப்பிரியன், இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? மாயவரத்தான், ஜெயராமன் இவங்க கிட்ட எல்லாம் காட்டி முன்கூட்டியே ஒப்புதல் வாங்காம நீங்க எப்படி இதெல்லாம் எழுதலாம்?

    நீங்க பாட்டுக்கு 'உண்மை குற்றவாளிகள் பிடிபடும் பட்சத்தில் அவர்களை தூக்கில் ஏற்றி இது போல் அப்பாவிகளை இலக்காக்குபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்' அப்படின்னு எழுதுனா, 'உண்மை குற்றவாளிகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எப்படியாவது இஸ்லாம் மேல பழி போட்டா சரி'ன்னு நினைக்கிற மாயவரம், ஜெயம் போல ஆட்களுக்கு கோபம் வருமா..வராதா?

    இவ்வளவு நாளா வலைப்பதிவு எழுதிக்கிட்டுருக்கீங்க. இதுகூட உங்களுக்கு தெரியலையே!

    ReplyDelete
  3. //ஹிஹி//
    என்ன மாயவரத்தாரே! கிண்டலா!

    விசாரணைக் கமிஷன் மட்டும் தன் வேலையை ஒழுங்காக செய்யட்டும். இதன் சூத்ரதாரி யார் என்பது வெட்ட வெளிச்சமாகும். பிறகு உங்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.

    ReplyDelete
  4. திரு ஜெயராமன்!

    //ஏன் ஜார்ஜ் புஷ்ஷை விட்டு விட்டீர்கள். ஒருவேளை அவர் குண்டு வைத்திருப்பாரோ?//

    நான் மறந்து விட்டேன். ஞாபகமூட்டியமைக்கு நன்றி! :-)

    //சிரிப்பு வர வேண்டும் என்று கஷ்டப்பட்டு நீங்கள் எழுதியும் சரியாக நகைச்சுவை தங்களுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.//

    சில நேரங்களில் உண்மைகள் நகைச்சுவையாகத் தான் இருக்கும். செய்தி ஊடகங்கள் அனைத்தும் உங்கள் கைகளில் இருப்பதால் இன்று உண்மை உறங்குகிறது. ஆனால் இதுவே தொடர்கதையாக இருக்கும் என்று எண்ண வேண்டாம்.

    பானர்ஜியின் இறுதி அறிக்கை வெளி வந்தால் இந்துத்வாவாதிகளின் கோர முகம் வெளியாகும் என்பதால் கோவிலில் குண்டு வைத்து பிரச்னையை திசை திருப்பினர் இந்துத்வாவாதிகள். அவர்கள் நினைத்தவாறே நானாவதி கமிஷனின் இறுதி அறிக்கை வரவில்லை. அது போல் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. பொறுத்திருங்கள் உண்மை வெளி வரும்.

    ReplyDelete
  5. //ஏன் ஜார்ஜ் புஷ்ஷை விட்டு விட்டீர்கள். ஒருவேளை அவர் குண்டு வைத்திருப்பாரோ?//

    ஜயராமன், உங்கள் பின்னூட்டத்தில் உள்ள நக்கலை நீக்கிவிட்டு பார்த்தால், சுவனப்பிரியன் எழுதியதை நீங்கள் முற்றிலும் மறுப்பதாக தெரிகிறது. அப்படியென்றால், அவர் சுட்டிக்காட்டும் நான்கு குழுக்களும் இந்தச் செயலை செய்திருக்க மாட்டார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? 'சிமி'தான் செய்திருப்பார்கள் என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?

    மாயவரத்தான் என்பவர் 'ஹிஹி' என்றொரு பின்னூட்டம் இட்டிருக்கிறார். காரணமில்லாமல் இப்படி குதூகலம் அடைபவர்களைப் பார்த்தால் எனக்கு அனுதாபம் ஏற்படும். பாவம்.. அவர்களுக்கு மனநல மருத்துவ உதவி தேவைப்படலாம்.

    ReplyDelete
  6. பரவாயில்லையே மரைக்காயர். இவ்வளவு நாளா பதிவு எழுதிக்கிட்டு இருக்கிற கவனப்பிரியனுக்கு தெரியாத மேட்டரை வலைப்பதிவு ஆரம்பிச்ச (?!) முதல் நாளிலேயே நீங்க தெரிஞ்சுகிட்டீங்களே.

    கவனப்பிரியன்... விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தா மட்டும் என்ன சொல்லப் போறீங்க? "விசாரணைக் கமிஷனின் எதிர்பார்த்த தீர்ப்பு!" அப்படீன்னு ஒரு பதிவு. இல்லைன்னா அதைப் பத்தி எழுதாம சும்மா இருந்திடப் போறீங்க. போங்க சார். குண்டு வெடிப்புல கைதாகிறவங்க எல்லாருமே அப்பாவிங்க அப்படீன்னு தானே சொல்றீங்க?! எப்படீங்க உங்களால மட்டும் இப்படி?!

    ReplyDelete
  7. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் தாவூத் இப்ராகிமை முதல் குற்றவாளியாக அறிவித்த பின்பு, அவனுடைய ஐம்பது கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது மகாராஷ்டிரா அரசு. இதில் ஒன்று மும்பையின் தென்பகுதியில் கிராஸ் ஃபோர்டு அல்லது மணிஷ் மார்க்கெட் எனும் பரபரப்பான இடத்தில் உள்ள பெரிய ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் ஏழு கட்டடங்களாகக் கட்டப்பட்ட இந்த அடுக்கு மாடி காம்ப்ளெக்ஸின் நிலம், மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது. 90ஆம் ஆண்டுகளில், லஞ்சம் வாங்கிக்கொண்டு தாவூத்துக்கு இதை அளித்த இரு அரசு அதிகாரிகளும் சஸ்பென்ட் செய்யப்பட்டு தீவிரவாதிகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

    இந்தக் கட்டடங்களை மூன்று முறை ஏலம்விட அறிவிப்பு கொடுத்தும், யாரும் வாங்க முன்வரவில்லை. இதற்கு தாவூத் மீதுள்ள பயம்தான் காரணம். இந்நிலையில், அதை இடித்துவிட்டு, அந்த நிலத்தை வேறு காரணங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டது. சரியாக 12ஆம் தேதி இடிப்பதற்காக நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன்தினம்தான் ரயில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

    http://www.vikatan.com/jv/2006/jul/19072006/jv0601.asp (காசு கொடுத்தால்தான் படிக்க முடியும்!!!)

    1993 குண்டு வெடிப்புக்குப் பிறகும் தாவுத் இப்ராஹீமின் பல ரியல் எஸ்டேட்களில் வாடகை வசூலிப்பது பால்தாக்கரே (ஆட்கள்)தான் என்றும் முன்பு என்னுடன் பணிபுரிந்த மும்பை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    இப்பொழுதெல்லாம் புலண் விசாரனை, அது-இதுவென்று ரிஸ்க் எடுத்து விசாரிக்க எந்த மாநில போலீசுக்கும் ஆர்வமில்லை. மேலும் குண்டு வெடிப்பில் சந்தேகப்பட்டு கைது செய்திருப்பவர்களளில் பலர் பங்காளிகள்.இவர்களையும் நாடு கடத்த வேண்டும் என்பது பா.ஜ.க கும்பலின் வெளிப்படையான திட்டம்.

    இப்படி பல கோணங்களிலும் ஆராயாமல் அவசரப்பட்டு முடிவுக்கு வந்திருப்பதன் மூலம், காந்தியடிகள் சொன்னது மாதிரி நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதெல்லாம் முஸ்லிம்கள் விசயத்தில் காலாவதியாகி விட்டது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  8. திரு மரைக்காயர்!

    //இவ்வளவு நாளா வலைப்பதிவு எழுதிக்கிட்டுருக்கீங்க. இதுகூட உங்களுக்கு தெரியலையே!//

    தகவலுக்கும் வருகைக்கும் நன்றி மரைக்காயர்! இனிமேல் எது எழுதினாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு எழுதுகிறேன்! திருப்திதானே! :-)

    ReplyDelete
  9. திரு ஷாஹுல்!

    //ஆனால் நேசகுமார் வகையறாக்கள் இந்த ஈனச்செயலிலும் அரசியல் செய்வதை நிறுத்தவில்லை//

    அரசியல்தானே! ஆரம்பமாகி விட்டதே! ஒவ்வொரு மாநிலமாக பேனர் பிடித்துக் கொண்டு பி.ஜே.பி யினர் கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனரே! இழந்த செல்வாக்கை இப்பொழுதாவது மீட்கலாம் என்ற நப்பாசைதான் காரணம். பாவம் பி.ஜே.பி யினர். இப்பொழுது எல்லாம் இந்துப் பெருங்குடி மக்கள் மிகவும் விழிப்புடனேயே இருக்கிறார்கள்.நேச குமாரிடம் விளக்கிச் சொல்லுங்கள். பிறகும் விளங்கவில்லை என்றால் அர்ஜீன் சிங்கிடம் கேட்டு தெளிவு பெறச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  10. //பரவாயில்லையே மரைக்காயர். இவ்வளவு நாளா பதிவு எழுதிக்கிட்டு இருக்கிற கவனப்பிரியனுக்கு தெரியாத மேட்டரை வலைப்பதிவு ஆரம்பிச்ச (?!) முதல் நாளிலேயே நீங்க தெரிஞ்சுகிட்டீங்களே.//

    பரவாயில்லையே மாயவரத்தான். நான் இப்பத்தான் வலைப்பதிவு ஆரம்பிச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சுட்டீங்களே! ஆனா, நான் தமிழ்மணம் ஆரம்பிச்ச காலத்துலேருந்து மத்தவங்க வலைப்பதிவுகளை படிச்சுட்டு இருக்கேன்!

    //குண்டு வெடிப்புல கைதாகிறவங்க எல்லாருமே அப்பாவிங்க அப்படீன்னு தானே சொல்றீங்க?! எப்படீங்க உங்களால மட்டும் இப்படி?! //

    சுவனப்பிரியன் சொல்றதை கொஞ்சம் நல்லா படியுங்க மாயவரத்தான்.

    ..ஒழுங்கான விசாரணை நடைபெற்றால் குற்றவாளிகள் பிடிபட சாத்தியம் உண்டு..

    ..அனைத்து மதத்தவரும் இடம் பெற்று பாரமட்சமற்ற அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்..

    ..உண்மை குற்றவாளிகள் கூண்டிலேற்றப் படுவர்..

    ..எது எப்படியோ! உண்மைக் குற்றவாளிகள் சமூகத்தின் முன் நிறுத்தப் பட்டு தூக்கில் இடப் பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தித்தவனாக!..


    உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப் படுவதில் உங்களுக்கு ஒப்புதல் இல்லையா?

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி நல்லடியார்!

    //சரியாக 12ஆம் தேதி இடிப்பதற்காக நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன்தினம்தான் ரயில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.//

    விசாரணையில் தாவூத் இப்றாகீம் ஆட்கள் சம்பந்தப் பட்டுள்ளது நிரூபணம் ஆனால் அவனை நம்மிடம் ஒப்படைக்க அவன் தங்கியிருக்கும் நாட்டிடம் கோரிக்கை வைக்க வேண்டும். கோரிக்கை பலன் தராத பட்சத்தில் அந்நாட்டுடன் போர் தொடுத்து அவனை இந்தியா கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலும் இட வேண்டும். அப்பொழுதுதான் ஒரு உயிரின் மதிப்பு என்னவென்பது அவர்களுக்கும் புரியும்.

    //மேலும் குண்டு வெடிப்பில் சந்தேகப்பட்டு கைது செய்திருப்பவர்களளில் பலர் பங்காளிகள்.//

    கள்ளத் தனமாக நம் நாட்டில் குடியேறிய பெங்காளிகளை நாடு கடத்த வேண்டும். இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. கள்ளத் தனமாக வந்தவர்களை இது போன்ற அழிவு வேலைகளில் பயன் படுத்திக் கொள்வது நம் நாட்டில் தற்போது அதிகரித்திருக்கிறது.

    ReplyDelete
  12. திரு மாயவரத்தான்!
    .
    //போங்க சார். குண்டு வெடிப்புல கைதாகிறவங்க எல்லாருமே அப்பாவிங்க அப்படீன்னு தானே சொல்றீங்க?! எப்படீங்க உங்களால மட்டும் இப்படி?!

    நேர்மையான விசாரணை நடைபெற்று அதன் அறிக்கை வந்தால் உண்மை குற்றவாளிகளின் முகம் வெளிச்சத்துக்கு வரும் என்று தான் சொன்னேன்.வர விடுவீர்களா என்பதுதான் கேள்வி!

    கோவி கண்ணன், குமரன், முத்து தமிழினி போன்றவர்களெல்லாம் யாரோ செய்த தவறுக்கு இங்குள்ள இஸ்லாமியர்களை புழுதி வாரி தூற்ற வேண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் நீங்களும், ஜெயராமன்,வஜ்ரா சங்கர், நேச குமார்,கால்கரி சிவா போன்றவர்களும் இஸ்லாமிய குழுக்கள்தான் செய்துள்ளன என்று முடிவே எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டீர்களே! அது எப்படி எல்லோரும் ஒரே மாதிரியா சிந்திக்கிறீங்க!

    எப்படீங்க உங்களால மட்டும் இப்படி?!

    ReplyDelete
  13. இபனு பஷீர்!

    வருகைக்கு நன்றி இப்னு பஷீர்!

    //'சிமி'தான் செய்திருப்பார்கள் என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?//

    முஸ்லிம்கள் எந்த வகையிலும் முன்னுக்கு வந்து விடக் கூடாது என்பதுநம் நாட்டில் பலரின் எண்ணம். முஸ்லிம்களை கல்வியில் முன்னேற்றுவதற்காக பல ஆக்கப் பணிகளை தன்னலமற்று சிமி செய்து வருகிறது. இது போதாதா! இனி சிமியை பிரச்சினைக்குள்ளாக்கி ஏதாவது ஒரு வகையில் முடக்க முயற்ச்சிப்பார்கள். அதற்கான பிரச்சாரம் தான் தற்போது நடந்து வருகிறது.

    ReplyDelete
  14. நபி வழியன்

    வருகைக்கு நன்றி நபி வழியன்!

    //. மன்மோகன் சிங்கை டிஸ்மிஸ் செய்து, ஏ ஆர் அந்துலேயை பிரதமராகவும், அர்ஜுன் சிங்கை உள்துறை அமைச்சராகவும் நியமித்தால்தான் ஒரு நேர்மையான விசாரணை நடக்க இயலும். //

    நீங்க என்ன சொல்றீங்கற சார்! அப்படியே பிரதமராகவும் உள்துறை மந்திரியாகவும் வந்து நியாயமாகவும் விசாரணையை நடத்தினால் ஆர்.எஸ,எஸ் விடுவார்களா? இதற்கு முன் நியாயமாக நடக்க முனைந்த மகாத்மா காந்தியை உயிரோடு விட்டார்களா? காந்தியைக் கொன்ற கோட்சே தியாகி என்று சிறப்பித்து இரண்டு மூத்த வலைப் பதிவாளர்கள் சமீபத்தில் பதிவு வேறு போடுகிறார்கள். நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  15. // //மேலும் குண்டு வெடிப்பில் சந்தேகப்பட்டு கைது செய்திருப்பவர்களளில் பலர் பங்காளிகள்.//

    //கள்ளத் தனமாக நம் நாட்டில் குடியேறிய பெங்காளிகளை நாடு கடத்த வேண்டும்.// //

    தாவூத் தாக்கரேயும் பம்பாயினர்; பங்காளிகள். பெங்காலியர் அல்லர்.

    ReplyDelete
  16. நேற்று டிவியில் ஒரு செய்தியைப் பார்த்திருப்பீர்கள். முகத்தை துணியால் மறைத்துக் கொண்ட ஒரு கிறுக்கன் 'குண்டு வைத்தது தாங்கள் தான் என்றும் இன்னும் பல இடங்களைத் தகர்க்கப் போவதாகவும் சில நாட்களுக்கு பொது இடங்களுக்கு முஸ்லிம்கள் செல்ல வேண்டாம் 'என்றும் கேட்டுக் கொள்வதைப் போல் உண்டாக்கப் பட்டிருக்கிறது அந்த செய்தி.

    இதில் நாம் கவனிக்க வேண்டியது அவன் சொன்ன தகவலால் முஸ்லிம்கள் மேல் இந்துக்கள் வெறுப்படைய வேண்டும் என்ற செய்தியும் அடங்கியிருப்பதைப் பாருங்கள். மும்பையில் பாம் வெடித்த உடனே குஜராத்தைப் போல் முஸ்லிம்களின் உயிரை எடுக்க ஆரம்பித்து இருக்க வேண்டும். அது நடை பெறாமல் போய் விட்டது. அடுத்த முயற்ச்சியாக இப்படி ஒரு தகவலைச் சொல்லியாவது இந்துக்களை ஆத்திரப் பட வைப்போம் என்று நினைக்கிறார்கள்.அடுத்து விசாரணையின் கோணமும் முஸ்லிம்களை மையமாக வைத்தே நகர வேண்டும் என்று விரும்புவதும் இந்த செய்தியில் அடங்கியிருக்கிறது. டிவிக்கு இந்த செய்தியை கொடுத்த அந்த கிறுக்கன் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  17. //டிவிக்கு இந்த செய்தியை கொடுத்த அந்த கிறுக்கன் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?//

    என்னங்க அண்ணாச்சி..இதுகூட எங்களுக்குத் தெரியாதா? மற்றபடி இந்த வியாதியின் பெயர்..(கொஞ்சம் பெரிய பேர்..சேர்த்துப்படிக்கவும்..)

    நோமுஸ்லிமோஆர்.டி.எக்ஸ்
    சென்ட்ரிக்பிஜேபியோ
    பஜ்ரங்தள்ளோமேடிக்
    ஆர்.எஸ்.எஸ்ஸோ
    சிவசேனாமேனியா

    (NoMuslimoRDXcentricBJPyo
    BajrangthallomaticRSSo
    SivasenaMania)

    ReplyDelete
  18. ஸுவனப்ரியன்,

    எனக்கென்னம்மோ புலனாய்வுத்துறை தொடர்ந்து விசாரணை செய்துவருகிறதென்றும், அது நியாயமாக நடக்கிறது என்றும் ஒரு எண்ணம்.

    ஆனால், நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் இந்திய அரசாங்கம் முஸ்லீம்கள் மீது வேண்டுமென்றே பழியை ஜோடிக்கிறது என்ற தோற்றம் ஏற்படுகிறது.

    மேலும் தாங்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால் இதுவரை இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே ஒரு சாரார்மீது பழியைச் சுமத்தவேண்டும் என்றே செயல்பட்டு வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக, கோத்ராவில் ரயிலுக்குள்ளிருந்து சமையல் செய்ததால் எரிந்த பெட்டியைக்கூட இஸ்லாமியர்தான் எரித்தனர் என்றும் ஒரு அறிக்கை கூறியது. (அப்படியானால் அதை சுற்றி நின்ற இஸ்லாமியர்கள் உண்மையில் அதை அணைக்கவே முயற்சி செய்திருக்கிறார்கள்.) முதலில் வந்த அறிக்கை பாஜாகாவின் ஆட்ஷிக்காலத்தில் வந்தது.

    ஆனால் இப்போது நடந்த குண்டு வெடிப்போ காங்கிரஸ் ஆட்ஷிக்காலத்தில் நடந்தது. உடனேயே கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் இஸ்லாமியராக உள்ளனர். அப்படியானால், எந்த கட்ஷி ஆட்ஷிக்கு வந்தாலும் இஸ்லாமியர்களின் மேல் பழி போடுவது நிற்காது. அதாவது இந்திய அரஸாங்கம் எப்போதும் இஸ்லாமியருக்கு எதிரானது.

    இந்த லாஜிக்கின்படி பார்த்தால் எப்போதுதான் இஸ்லாமியர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்கிற கேள்வி ஏற்படுகிறது. தங்களின் மேலான பதிலைக் கோருகிறேன்.

    ReplyDelete
  19. //கள்ளத் தனமாக நம் நாட்டில் குடியேறிய பெங்காளிகளை நாடு கடத்த வேண்டும். இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.//

    எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களில் பெங்காலிகளை மட்டும் அப்புறப்படுத்தக் கூடாது. நேபாளிகளும் இருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்தேககப்படுவதில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    //ஜெயராமன்,வஜ்ரா சங்கர், நேச குமார்,கால்கரி சிவா போன்றவர்களும் இஸ்லாமிய குழுக்கள்தான் செய்துள்ளன என்று முடிவே எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டீர்களே! அது எப்படி எல்லோரும் ஒரே மாதிரியா சிந்திக்கிறீங்க!//

    அதான் ஏற்கனவே நண்பர் ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறாரே! :-)
    நாட்டில் நடக்கும் அக்கிரமங்களில் இந்துக்கள் பாதிக்கப்பட்டால், அதனை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்றும் முஸ்லிம்களோ அல்லது மற்ற சிறுபான்மையினரோ பாதிக்கப்பட்டால் 'உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தர்களின் செயல்! என்றும் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அயல்நாடுகளுக்க்ச் செல்வேன்?" என்றும் நீலிக்கண்ணீர் வடித்து இரட்டை வேடம் போட நமக்கு வாஜ்பாய் போன்ற பிரதமர்கள் இல்லையே! கோயபல்ஸ் பற்றி அதிகம் படித்தில்லை; ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்டவர்களின் பதிவுகளைப் படித்திருக்கிறேன்.

    //விசாரணையின் கோணமும் முஸ்லிம்களை மையமாக வைத்தே நகர வேண்டும் என்று விரும்புவதும் இந்த செய்தியில் அடங்கியிருக்கிறது. டிவிக்கு இந்த செய்தியை கொடுத்த அந்த கிறுக்கன் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? //

    ஈராக்கில் பிணையக் கைதிகளை துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு இன்னொரு கையில் குர்ஆனையும் வைத்துக் கொண்டு அப்பாவிகளையும் பிணைக்கைதிகளையும் கொல்லக் கூடாது என்று சொன்ன குர்ஆனிய சட்டத்தை பின்பற்றாதவர்கள் எப்படி முஸ்லிம்கள் இல்லையோ, அதேபோல்தான் நீங்கள் குறிப்பிட்ட செய்தியில் தோன்றியவரும் இருக்க வேண்டும். டைனோசாரையே நம் கண்முன் தோன்றச் செய்தவர்களுக்கு ஒரு தீவிரவாதியைக் காட்டுவதா கடினம்?

    //தாவூத் தாக்கரேயும் பம்பாயினர்; பங்காளிகள். பெங்காலியர் அல்லர்//

    பிலை திருத்தத்தையும் னஹைச் ஸுவையாகச் சொள்ளும் உங்கல் அலகே தணிதான். :-)

    ReplyDelete
  20. Suvana Priyan Avargalei, This is that Azami's Name.

    மும்பை குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்று இ-மெயிலில் மிரட்டல் விடுத்தவர் மும்பை குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்று இ-மெயிலில் மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்

    மும்பை, ஜுலை. 19-

    மும்பை ரெயில்களில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 200 பேர் பலியானார்கள்.

    இந்த நாசவேலைக்கு லஷ்கர்-இ-ககர் எனும் புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

    மும்பை குண்டு வெடிப்பை வெற்றிகரமாக நடத்தி விட்டதாக அந்த அமைப்பு தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பிய இ-மெயிலில் கூறி இருந்தது.

    இ-மெயில் தகவல் முழு விவரம் வருமாறு:-

    மும்பை ரெயில் குண்டு வெடிப்பை எங்கள் இயக்கம் தான் நடத்தியது. 16 பேர் குழு இதை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதில் 15 பேர் தப்பி விட்டனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.

    குண்டு வெடிப்பை நாங்கள்தான் நடத்தினோம் என்பதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களாக அவை வெளியிடப்படும்.

    ரெயில்களில் குண்டு வைத்து விட்டு தப்பிய 15 தற்கொலை படையினரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். வெற்றியை அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

    15 பேரையும் மீண்டும் ஒருங்கிணைப்போம். அதன் பிறகு டெல்லி, மும்பை நகரங்களில் மீண்டும் வெடி குண்டு தாக்குதல்கள் நடத் தப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங் களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம்.

    இந்த சமயத்தில் முஸ்லிம் சகோதர-சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். டெல்லி, மும்பையில் உள்ள முக்கிய வரலாற்று சின்னங்கள், அரசு கட்டிடங்களுக்கு செல்லாதீர்கள். எந்த நேரத் திலும் குண்டுகள் வெடிக்கலாம்.

    அவை உங்களை பாதித்து விடக்கூடும். எனவே ஒதுங்கியே இருங்கள்.

    அடுத்த தாக்குதலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

    இவ்வாறு அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து சிமி ஆதரவாளர்களை சல்லடை போட்டு தேடி விசாரித்து வந்த மும்பை போலீசாரின் கவனம், இந்த புதிய அமைப்பு மீது திரும்பியது.

    அந்த அமைப்பு விடுத்த இ-மெயில் எங்கு இருந்து வந்தது என்று விசாரித்தனர். தீவிர ஆய்வுக்குப் பிறகு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து இ-மெயில் தகவல் அனுப்பப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    அதை அனுப்பியது யார்? என்று கண்டு பிடிக்கும் முயற்சி களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு போபாலை சேர்ந்த சுமித் என்ற வாலிபர் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் "சும்மா ஜாலிக்காக இ-மெயில் அனுப்பினேன்'' என்றார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    ReplyDelete
  21. அழகு! வருகைக்கு நன்றி!

    //தாவூத் தாக்கரேயும் பம்பாயினர்; பங்காளிகள். பெங்காலியர் அல்லர்.//
    தாவூதும் தாக்கரேயும் பம்பாயினர் என்பது உண்மையே! ஆனால் பல சமூக விரோத செயல்களுக்கு பங்காளிகளை பலரும் பயன் படுத்தி வருகின்றனர்.பங்காளிகளில் இந்துக்களை மட்டும் தங்க வைத்துக் கொண்டு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று இதிலும் அரசியல் பண்ணுகிறது பி.ஜே.பி.

    பங்காளி, பெங்காளி இரண்டுமே ஒன்றுதான். தமிழில் பங்காளி என்கிறோம். மற்ற மொழிகளில் பெங்காளீஸ் என்று தான் அழைக்கின்றனர்.

    ReplyDelete
  22. நேற்று சகாரா செய்தி பார்த்தவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்திருக்கும். மத்திய பிரதேசத்தில் கண்டுவா என்ற இடத்திலிருந்து சுனில் என்ற இந்துத்வாவாதி பம்பாய் குண்டு வெடிப்புக்கு காரணம் லஸ்கர்-இ-தொய்பா தான் காரணம். இதற்கான ஆதாரம் இருக்கிறது. என்று பத்திரிக்கைகளுக்கும், போலீசுக்கும் எஸ்.எம் எஸ் கொடுத்துள்ளான். செல் நம்பரை வைத்து ஆளை மடக்கி விட்டது போலீஸ். போலீசிடம் தான் விளையாட்டுக்காக செய்தேன். எனக்கு எதுவும் தெரியாது என்று புலம்பியிருக்கிறான். போலீஸ் இரண்டு தட்டு தட்டி உள்ளே தள்ளி இருக்கிறது. இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எப்படி எல்லாம் காய் நகர்த்துகிறார்கள் என்பது ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வருகிறது. அவனையே இன்னும் நன்றாக போலிஸ் கவனித்தால் பல உண்மைகள் வெளி வர வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  23. //கோத்ராவில் ரயிலுக்குள்ளிருந்து சமையல் செய்ததால் எரிந்த பெட்டியைக்கூட இஸ்லாமியர்தான் எரித்தனர் என்றும் ஒரு அறிக்கை கூறியது. (அப்படியானால் அதை சுற்றி நின்ற இஸ்லாமியர்கள் உண்மையில் அதை அணைக்கவே முயற்சி செய்திருக்கிறார்கள்.) முதலில் வந்த அறிக்கை பாஜாகாவின் ஆட்ஷிக்காலத்தில் வந்தது.//

    திரு. Muse,

    கோத்ராவில் ரயிலை முஸ்லிம்கள் எரித்தார்கள் என்றும் அதற்கு 'natural reaction'ஆகத்தான் குஜராத் கலவரங்கள் நடைபெற்றது எனவும் மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட பிஜேபியினர் சப்பைக்கட்டு கட்டினர். ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் கோத்ரா விவகாரத்தை மறுவிசாரணை செய்யப்போவதாக பாராளுமன்றத்தில் அறிவித்தபோது பிஜேபியும் சிவசேனாவும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கலாட்டா செய்தார்கள்.

    http://www.tribuneindia.com/2004/20040716/main1.htm

    இவர்கள் மேல் தவறு இல்லையென்றால், நியாயமாக மறுவிசாரணையை இவர்கள் வரவேற்க அல்லவா செய்திருக்க வேண்டும்? மறுவிசாரணை மறைக்கப்பட்ட ஏதேதோ உண்மைகளை வெளிக்கொண்டு வந்துவிடும் என்று பயந்ததால்தானே அதை தீவிரமாக எதிர்த்திருக்கிறார்கள்?

    ReplyDelete
  24. திரு ம்யூஸ்!

    //எனக்கென்னம்மோ புலனாய்வுத்துறை தொடர்ந்து விசாரணை செய்துவருகிறதென்றும், அது நியாயமாக நடக்கிறது என்றும் ஒரு எண்ணம்.//

    முந்தைய பாசிச ஆட்சிபோல் இல்லாமல் நல்ல முறையில் விசாரணை நடக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

    //இதுவரை இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே ஒரு சாரார்மீது பழியைச் சுமத்தவேண்டும் என்றே செயல்பட்டு வந்திருக்கிறது என்று தோன்றுகிறது..//

    உண்மைதான் பிஜேபி ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் பல வழிகளிலும் பழி வாங்கப் பட்டது எல்லொருக்கும் தெரிந்த ஒன்றே! மோடியின் ஆட்சியும், குஜராத் இனப் படுகொலையும் உலகப் பிரசித்திப் பெற்றதல்லவா! கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எறிநத வெறி பிடித்த மிருகங்கள் அல்லவா பிஜேபி யினர்? தற்போது நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. அது தொடர வேண்டும் என்பதே நல்லோர்களின் விருப்பம்.

    // எரிந்த பெட்டியைக்கூட இஸ்லாமியர்தான் எரித்தனர் என்றும் ஒரு அறிக்கை கூறியது. (அப்படியானால் அதை சுற்றி நின்ற இஸ்லாமியர்கள் உண்மையில் அதை அணைக்கவே முயற்சி செய்திருக்கிறார்கள்.) முதலில் வந்த அறிக்கை பாஜாகாவின் ஆட்ஷிக்காலத்தில் வந்தது.//

    பாஜாக ஆட்சிக்கு பின் ல்ல்லுவால் நியமிக்கப் பட்ட பானர்ஜி அறிக்கை
    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பானர்ஜியின் அறிக்கை கூறுவதென்ன? போலீசாரின் அறிக்கை பெட்ரோல் கேண்களில் கொண்டு வரப் பட்டு பெட்டியின் மீது முஸ்லிம்கள் எறிந்து தீ வைத்தனர் என்று. ஆனால் பானர்ஜி அறிக்கையோ 'கர சேவகர்கள் ரயிலின் உள்ளே ஸ்டவ் போன்ற சாதனங்களால் சமையல் செய்து வந்தனர்.அவற்றிலிருந்து பரவிய தீயே அந்த பெட்டி எறிய காரணமானது. வெளியிலிருந்து எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை. இது ஒரு விபத்து'. என்று அறிக்கை அளித்திருக்கிறாரே! இதைக் காரணமாக வைத்து முஸ்லிம்களை கருவறுத்த நரேந்திர மோடி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவர் நினைத்தபடியே ஹிந்துக்களின் ஓட்டைப் பெற்று மறுபடியும் ஆடசியைப் பிடித்து விட்டார்.

    பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டின் கணிப்பின் படி குஜராத் இனப் படுகொலை நடந்திருக்காவிட்டால் மோடி தனது சொந்த தொகுதியான காந்தி நகரில் கூட ஜெயித்திருக்க மாட்டார்.(Front Line 11, 2005, Article by Praful Bidwai)

    //ஆனால் இப்போது நடந்த குண்டு வெடிப்போ காங்கிரஸ் ஆட்ஷிக்காலத்தில் நடந்தது. உடனேயே கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் இஸ்லாமியராக உள்ளனர்.//

    ஆட்சி மாறினாலும் வேலை செய்யும் அரசு அதிகாரிகள் பழையவர்கள் தானே! கடந்த பாஜக சிவசேனாவின் ஐந்து வருட ஆட்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையினரில் அதிகமானோர் இந்துத்வாவாதிகளாக மாற்றப் பட்டுள்ளனர். அவர்கள் தான் எங்கு எந்த குற்றம் நடந்தாலும் முஸ்லிம்களை இலக்காக்குகிறார்கள். இப்படி அப்பாவிகள் குற்றம் செய்யாமல் பல வருடங்கள் தண்டனை அனுபவித்து வெளியே வருகிறார்கள். 'குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவித்தேன். இனி அது போன்ற குற்றங்களை செய்து விட்டு உள்ளே போகிறேன்' என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்தால் நம் நாடு தாங்குமா? இதை ஆட்சியாளர்களும் நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்களும் சிந்திக்க வேண்டும்.

    //இந்த லாஜிக்கின்படி பார்த்தால் எப்போதுதான் இஸ்லாமியர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்கிற கேள்வி ஏற்படுகிறது. தங்களின் மேலான பதிலைக் கோருகிறேன்.//

    இந்த நிலை மாற வேண்டுமென்றால் முஸ்லிம்களின் சதவீதத்துக்கு ஒப்பாக அனைத்து அரசு பதவிகளிலும் முஸ்லிம்கள் அமர்த்தப் பட வேண்டும். அன்று தான் இது போன்ற ஒரு தலை பட்சமான முஸ்லிம் விரோத போக்கு அகல வாய்ப்பிருக்கிறது. இப்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று அரசு சிந்திக்கும் நேரங்களிலெல்லாம் எங்காவது ஒரு இடத்தில் குண்டு வெடிக்கும். அப்பாவி முஸ்லிம்ள் சிறை பிடிக்கப் படுவார்கள். அரசும் திட்டத்தை கிடப்பில் போடும். இது தானே இன்று வரை நடந்து வருகிறது.

    ReplyDelete
  25. புலிப் பாண்டி அண்ணாச்சி!

    //(NoMuslimoRDXcentricBJPyo
    BajrangthallomaticRSSo
    SivasenaMania)//

    முஸ்லிம்களில் உள்ள தீவிரவாத குழுக்களின் பெயரை சேர்க்காமல் முஸ்லிம்கள் என்பொதுவாக குறிப்பிட்டு இருக்கிறீர்களே! விஷயம் தெரிந்த நீங்களே இது போன்ற தவறுகளை செய்யலாமா?

    அடுத்து அந்த செய்தியை கொடுத்தவன் சுனில் என்ற இந்து தீவிரவாதி என்பதை போலீசும் கண்டு பிடித்து விட்டது. இப்பொ இந்த வியாதிக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க! : -)

    ReplyDelete
  26. அபிராமம்!

    முதல் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  27. சிராஜீத்தீன்!

    வருகைக்கும் முக்கியமான தகவலைத் தந்ததற்கும் நன்றிகள். இது போன்ற சூழ்ச்சிகளை உடனுக்குடன் அம்பலப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் முஸ்லிம்களைப் பற்றிய தவறான எண்ணம் நம் இந்து சகோதரர்களிடம் இருந்து எடுபடும்.

    ReplyDelete
  28. திரு நல்லடியார்!

    //இருக்கும் வெளிநாட்டவர்களில் பெங்காலிகளை மட்டும் அப்புறப்படுத்தக் கூடாது. நேபாளிகளும் இருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்தேககப்படுவதில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.//

    பெங்காளிகளில் ஹிந்துக்களை மட்டும் இங்கே தங்க வைக்கலாம் என்று முந்தைய பிஜேபி அரசு ஆர்வம் காட்டியதும் இப்போது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  29. do u mean to say that no muslim is involved in these bombings? that is absurdity to the core. there may be some who are good some who are bad but all are of the same terrorist mentality. unless muslims come out of the terrorist mentality things would not improve and if things do not improve every muslim has to bear the brunt of the anti terrorist actions and resultant police excesses. muslims should try to be more patriotic and should place the country before their religion. if their religions preaches violence then they should discard the religion and become good citizens.

    ReplyDelete
  30. ஐயையோ.. இங்கே பாருங்க.. நம்மூரிலயும் போலீஸ் திட்டமிட்டு அவதூறு பரப்ப வெறும் அப்பாவிகளை கைது செய்திருக்காங்க. அது சம்பந்தமா இந்த்துவா செய்தித்தாளில் வந்திருக்கும் செய்தி :

    http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=140962

    இப்னுபஷீர் என்பவர் மனநலம் குறித்தெல்லாம் பேசுவது தான் வேடிக்கை.ஹிஹி

    ReplyDelete
  31. //கோவி கண்ணன், குமரன், முத்து தமிழினி போன்றவர்களெல்லாம் யாரோ செய்த தவறுக்கு இங்குள்ள இஸ்லாமியர்களை புழுதி வாரி தூற்ற வேண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் நீங்களும், ஜெயராமன்,வஜ்ரா சங்கர், நேச குமார்,கால்கரி சிவா போன்றவர்களும் இஸ்லாமிய குழுக்கள்தான் செய்துள்ளன என்று முடிவே எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டீர்களே!//

    நீங்களாகவே அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. 'இங்குள்ள இஸ்லாமியர்களை புழுதி வாரி தூற்றுகிறேன்' என்று நீங்கள் அள்ளி விடுவது அபாண்டமான குற்றச்சாட்டு.

    தீவிரவாதிகளை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு ஏன் பற்றிக் கொண்டு வருகிறது?!

    நீங்கள் தான் முஸ்லீம்கள் எல்லாருமே ரொம்பவே அப்பாவிகள் மாதிரியும், ஏனையோர் அனைவருமே அப்பாவி இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்துவதற்காக வந்துள்ளார்கள் என்பது போலவும் 'உருவாக்க' முயலுகிறீர்கள்.

    மும்பை குண்டு வெடிப்பை செய்த கயவாளிகளை கண்டிப்பதில் காட்டும் அக்கறையை விட 'அடடே.. முஸ்லீம் தீவிரவாதிகள் மீது எல்லாரும் குற்றம் சாட்டுவார்களே' என்ற பதட்டம் தான் உங்கள் குழுவினரிடம் காணப்படுகிறது.

    எல்லா இஸ்லாமியர்களையும் என்றைக்குமே நான் தவறாக பேசியதில்லை. எனக்கு இஸ்லாமிய நண்பர்களே அதிகம்.

    தீவிரவாதிகளை கண்டித்தால், அதனை நீங்கள் பொதுப்படையாக எடுத்துக் கொண்டால், அது என் பிழையல்ல.

    சிமி போன்ற தீவிரவாத செயல்களுக்காக கையும் தீவிரவாதமுமாக பிடிபட்டு, தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி- அது இஸ்லாமியர்களால் நடத்தப்படும் இயக்கம் என்பதினால் - நல்ல முறையில் பேசவோ எழுதவோ கவலைப்படாதவர்களே இருக்கும் போது, தீவிரவாதிகளை கண்டித்து எழுத நான் ஏன் வருத்தப்பட வேண்டும்?!

    ReplyDelete
  32. மாயவரத்தான் உங்களுக்கு ஒரு நற்செய்தி,
    ஆர்.எஸ். எஸ் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் 'அப்பட்டமான நாடகம்' என்று உண்மை அறியும் குழு கண்டுபிடித்துள்ளதாம். இவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

    இதையெல்லாம் கண்டுபிடித்தால் அவர்கள் அனைவரையும் 'மனநலம் குன்றியவர்' என்று தானே சொல்ல வேண்டும்?

    ReplyDelete
  33. //ஐயையோ.. இங்கே பாருங்க.. நம்மூரிலயும் போலீஸ் திட்டமிட்டு அவதூறு பரப்ப வெறும் அப்பாவிகளை கைது செய்திருக்காங்க.//

    மாயவரத்தாரே,

    பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே! இஸ்லாம் அவர்களை அப்படி செய்யச் சொல்லவில்லை. (ஒரு கும்பல் இதையே கடமையாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.) மாறாக, அவ்வாறு செய்பவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது.

    சுவனப்பிரியன் சொன்னது போல.. //எது எப்படியோ! உண்மைக் குற்றவாளிகள் சமூகத்தின் முன் நிறுத்தப் பட்டு தூக்கில் இடப் பட வேண்டும்.// என்பதுதான் முஸ்லிம்களின் விருப்பமும்.

    ஆனால், திட்டமிட்டு முஸ்லிம்களின் மீது பழிவிழ வேண்டும் என்பதற்காக காய்நகர்த்தும் இந்த சுட்டியில் உள்ளவன் போன்ற தீவிரவாதிகளை என்ன செய்யலாம், சொல்லுங்கள்!

    http://www.dailythanthi.com/article.asp?NewsID=272342&disdate=7/20/2006

    சிமி மற்றும் லஸ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளின் மீது பழி விழ காரணமாக இருந்த இமெயிலை அனுப்பிய தீவிரவாதி சுமித் தம்ராகார். விளையாட்டாக இந்தக் காரியத்தை செய்தானாம் இந்த 'விளையாட்டுப் பிள்ளை!'.

    இதன் பின்விளைவாக, போலீஸாரின் விலைமதிப்பற்ற நேரம் வீணாக்கப்பட்டது. சம்பந்தமேயில்லாத சிமி இயக்கத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போலீஸாரின் கவனம் திசைதிருப்பப்பட்டிருந்த இந்த நேரத்தில் உண்மையான குற்றவாளிகள் நாட்டை விட்டே வெளியேறி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

    இப்படிப்பட்ட 'விளையாட்டு தீவிரவாதிகளை'யும் இவர்களை தூண்டிவிட்டவர்களையும் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸார் லாடம் கட்டினால்தான் மற்றவர்களுக்கு பயம் ஏற்படும். இதற்காவது உங்கள் ஆதரவு உண்டா? அல்லது இதற்கும் வெறும் 'ஹிஹி'தானா?

    ReplyDelete
  34. சுவனப்பிரியன்,

    >>> கடந்த பாஜக சிவசேனாவின் ஐந்து வருட ஆட்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையினரில் அதிகமானோர் இந்துத்வாவாதிகளாக மாற்றப் பட்டுள்ளனர். அவர்கள் தான் எங்கு எந்த குற்றம் நடந்தாலும் முஸ்லிம்களை இலக்காக்குகிறார்கள்.<<<<

    ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதத்தைத்தான் சொல்லியுள்ளீர்கள். ஆயினும், ஒரு ஸந்தேகம். கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டவர்களும் இஸ்லாமியராக உள்ளனரே. தமிழகத்திலோ பாஜாகா என்னும் கட்ஷி ஸாமியார்கள் கட்ஷியாக அறியப்பட்டு மரியாதை இல்லாத நிலையில்தானே இருக்கிறது. மேலும், தமிழகத்தை அப்போது ஆண்டவர், த்ராவிட பாரம்பரியத்திலுதித்த ஹிந்துத்துவ எதிரியான, தற்போதைய முதல்வர் தானைத் தலைவர் மாண்புமிகு கலைஞர்தானே. பாஜாகாவின் இன்ஃப்ளுயன்ஸ் இல்லாத இடங்களிலும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுகின்றனரே. இது ஏன்?

    என் முந்தைய கேள்விக்கு தெளிவான விடை அளித்துள்ளீர்கள். நன்றிகள். இந்த கேள்விக்கும் தங்களின் பதிலை கோருகிறேன்.

    ReplyDelete
  35. முதல் வருகைக்கு நன்றி எஸ.எல!

    //do u mean to say that no muslim is involved in these bombings?//

    நான் அப்படி சொல்லவில்லையே! நான் கொடுத்திருக்கும் பட்டியலை நீங்கள் பார்க்கவில்லையா? பாகிஸ்தானாகவும் இருக்கலாம், முஸ்லிம் தீவிரவாதிகளாகவும் இருக்கலாம், இந்துத்துவ வாதிகளாகவும் இருக்கலாம். எங்கு பாம் வெடித்தாலும் முதல் குற்றவாளிகளாக முஸ்லிம்களை கைது செய்வதையே கண்டிக்கிறேன். இதனால் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் இது போன்ற காரியங்களைச் செய்து, செய்தி ஊடகங்கள் அவர்கள் கையில் இருப்பதால் முஸ்லிம்கள் மேல் பழியைப் போட்டிருக்கிறார்கள். எனவே யார் செய்திருந்தாலும் உண்மைக் குற்றவாளி கூண்டிலேற்றப் பட வேண்டும் என்கிறேன். பைலை க்ளோஸ் பண்ணுவதற்காக ஒப்புக்கு விசாரணைக் கைதிகளை பத்திரிக்கைகளுக்கு காண்பித்து விட்டு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்று வெளியாக்குவது நம் காவல் துறை வழக்கமாக செய்து வரும் பணி. இது போன்ற முறைக் கேடுகளெல்லாம் களையப் பட வேண்டும்.

    // that is absurdity to the core. there may be some who are good some who are bad but all are of the same terrorist mentality. unless muslims come out of the terrorist mentality things would not improve//

    உங்களின் புரிதலில் சில தவறுகள் இருக்கின்றன. நமது நாட்டு பத்திரிக்கைகளில் வரக் கூடிய செய்திகளின் அடிப்படையில் உங்கள் வாதம் அமைந்துள்ளது. பாபரி மசூதி இடிப்புக்கு முன்னர் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? தீவிரவாதத்தை ஆரம்பித்து வைத்தது அத்வானியும் அவரைப் பின்பற்றும் அடிவருடிகளும். இது போன்ற அநியாயங்களை சிலர் போராட்டம் மூலம் சந்திக்கின்றனர். வேறு சிலர் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்ற ரீதியில் ஆயுதத்தை கையிலும் எடுக்கின்றனர். இது தவறு என்று குர்ஆன் ஹதீஸ்ஆதாரங்களின் மூலம் விளக்கியும் வருகிறோம். சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் அழகிய போதனைகள் வேறு. தவறாக வழி காட்டப் பட்ட தீவிரவாதிகளின் இலக்கு வேறு. இரண்டையும் போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. உண்மையான முஸ்லிம் கண்டிப்பாக தீவிரவாதியாக இருக்க மாட்டான்.அப்பாவிகளையும் இலக்காக்க மாட்டான்.

    //if their religions preaches violence then they should discard the religion and become good citizens.//

    விடுதலைப் போரில் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு தங்கள் சதவீதத்துக்கு மேலாகவே தியாகங்கள் செய்திருக்கிறார்கள் .என்னுடைய தாத்தா மலேசியாவில் இந்திய தேசிய ராணுவத்துக்கு தன் ஒரு மாத சம்பளத்தை சுபாஷ் சந்திர போசிடம் நேரிடையாக கொடுத்ததாக என்னிடம் சொன்னதை இங்கு சொல்லிக் கொள்ளவும் ஆசைப் படுகிறேன். சிப்பாயக் கலகம், மாப்பிள்ளைக் கலகம் என்று வரலாறு நெடுக சிந்திய இஸ்லாமிய ரத்தம் வரலாறுகளில் பதியப் பட்டிருக்கிறது. எனவே நாட்டுப் பற்றைப் பற்றிய சந்தேகம் முஸ்லிம்களிடத்தில் உங்களுக்கு எழுவது நகைப்பிற்குரியதே!
    இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவும் இல்லை. இதைக் காரணமாக வைத்து இஸ்லாத்தை விட வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

    ReplyDelete
  36. மாயவரத்தான்!

    நம் மாலைப் பத்திரிக்கைகளின் நம்பகத் தன்மைக்கு ஒரு உதாரணமாக 'ஈரைப் பேனாக்கி' என்ற தலைப்பில் ஒரு பதிவு இன்று போட்டிருக்கிறேன். சென்று பார்த்து தெளிவு பெறுங்கள்.

    ReplyDelete
  37. திரு ம்யூஸ்!

    //கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டவர்களும் இஸ்லாமியராக உள்ளனரே.//

    //பாஜாகாவின் இன்ஃப்ளுயன்ஸ் இல்லாத இடங்களிலும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுகின்றனரே. இது ஏன்?//

    கோயம்பத்தூரில் செல்வராஜ் என்ற காவலர் சில விஷமிகளால் கொல்லப் படுகிறார். காரணம் ஆயிரம் இருந்தாலும் ஒரு காவலரை வெட்டிக் கொன்றது காட்டுமிராண்டித்தனம். அதை மூன்று முஸ்லிம்கள் செய்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை கொடுத்தாலும் அதைப் பற்றி முஸ்லிம்களுக்கு கவலையும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப் படக் கூடியவர்களே!

    ஆனால் போலீஸ் செய்துது என்ன? ரோட்டில் சென்று கொண்டிருந்த இருபது முஸ்லிம்களை இந்துத்துவ வாதிகளோடு சேர்ந்து கொண்டு குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றது நம் காவல் துறை. நூறு கோடி ரூபாய்க்கும் மேல் இஸ்லாமியரின் சொத்துக்கள் நாசமாக்கப் பட்டது. கொள்ளையடிக்கப் பட்டது. இது எந்த வகையில் நியாயம்?போலீஸை கொன்ற அந்த மூன்று பேரையும் முஸ்லிம்கள் பிடித்துக் கொடுத்தார்களா இல்லையா? பிறகு எதற்கு இந்த தேவையில்லாத துப்பாக்கி சூடு? தேவையில்லாமல் துப்பாக்கி சூடு நடத்திய காவலர்களுக்கு தண்டனை கொடுத்ததா கலைஞர் அரசு?இதனால் உயிர்களையும், சொத்துக்களையும் இழந்த முஸ்லிம்களின் உறவினர்களில் தீவிரவாத எண்ணம் கொண்ட ஒரு சிலர் அப்பாவிகளை இலக்காக்கி கோயம்புத்தூரில் குண்டு வைக்கிறார்கள். இதனால் பல அப்பாவிகள் கிட்டத் தட்ட நாற்பது பேர் வரை இறக்கிறார்கள். காவல் துறையினர் செய்த அதே தவறை ஒரு சில முஸ்லிம்களும் செய்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு தவறுக்கு மற்றொரு தவறு பரிகாரமாகாது. தவறு செய்தவர்கள் இன்று தண்டனையை அனுபவிக்கிறார்கள். மேலும் இவர்களோடு சேர்த்து சில அப்பாவிகளையும் பிடித்து சந்தேக கேசில் பொடாவில் உள்ளே தள்ளியது போலீஸ். இன்று வரை விசாரணையின்றியே பல வருடங்கள் சிறையில் பல முஸ்லிம்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

    எனவே கோயம்புத்தூரைப் பொறுத்தவரை போலிஸிடமும் தவறிருக்கிறது, முஸ்லிம் தீவிரவாதிகளிடமும் தவறிருக்கிறது. அன்றைய கலைஞர் அரசும் தன் பங்குக்கு பிரச்னையை சிக்கலாக்கியது. இதற்கு மூன்று தரப்பாரும் காரணமாகின்றனர்.

    ReplyDelete
  38. ம்யூஸ்!

    //ஸந்தேகம்.,ஸாமியார்கள் கட்ஷியா,ஸுவனப்ரியன்,
    ஆட்ஷிக்கால,எந்த கட்ஷி ஆட்ஷிக்கு,அரஸாங்க//

    உங்களின் பின்னூட்டத்தைப் படிக்கும் போது பழைய தின மணி பத்திரிக்கையைப் படிப்பது போன்று இருக்கிறது. கஷ்டப் பட்டு வடமொழிச் சொற்களைப் புகுத்துவது வித்தியாசமாக தெரியவில்லையா?

    ReplyDelete
  39. Your analysis is good.

    Please read my article
    http://izzath/blogspot.com

    ReplyDelete
  40. சுவனப்பிரியன்,

    கோயம்புத்தூர் வெடிகுண்டு கைதுகள் பற்றிய தங்களது கருத்துக்கள் ஒதுக்கிவிடக்கூடியவை இல்லை. பாஜாகா ஆளும் மாநிலங்களில் ஹிந்துத்துவ ஷக்திகள் மேலிலிருந்து நீதித்துறையை ஆக்கிரமிக்கிறது என்றால், தமிழ்நாடு போன்ற இடங்களில் அதிகாரவர்க்கத்திற்குள் புகுந்து இவை ஆட்டிப்படைக்கின்றன என்று கூறுகிறீர்கள். மேலும், இதை சரிசெய்ய இஸ்லாமியர்களுக்கு மக்கள்தொகையின் எண்ணிக்கை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதுதான் வழி என்றும் கருதுகிறீர்கள். பதிலுக்கு நன்றிகள்.

    இருப்பினும், ராவணனின் தலைபோல என் மனது விஷமத்தனமாய் மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்புகிறது. ராமச்சந்திரன்போல பொறுமையாய் பதிலளிக்க வேண்டுகிறேன். என் மனது கேட்கும் கேள்வி இதுதான்.

    அப்படியே இட ஒதுக்கீடு அளித்து இஸ்லாமிய ஸகோதரர்களுக்கு அவர்கள் கேட்குமளவுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பதவிகளும் கிடைக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ஹிந்துத்துவ ஃபாஸிஸ ஷக்திகளால் பீடிக்கப்பட்ட அதிகார அரஸியல் மனிதர்கள்தான் அங்கே ஏற்கனவே இருந்துவருகின்றனரே. அவர்கள் இடஒதுக்கீட்டின்படி ஸமநீதிப் பெற்று பதவியடைந்த இஸ்லாமிய அன்பர்களை அவர்களது கடமையாற்ற விடுவார்களா?

    விடமாட்டார்கள் என்பது தங்களது கருத்தாக இருக்குமாயின் அதற்கு மாற்று வழிதான் என்ன?

    ReplyDelete
  41. சுவனப்பிரியன்,

    >>> கஷ்டப் பட்டு வடமொழிச் சொற்களைப் புகுத்துவது வித்தியாசமாக தெரியவில்லையா? <<<

    ஸ, ஷ, ஜ, ஹ போன்ற "ஒலிகள்" எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. இந்த ஒலிகள் வடமொழிக்கு மட்டுமே உரித்தானவை என்று தோன்றவில்லை.

    தமிழின் சிறப்பே எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் வித்யாஸம் இல்லாமலிருப்பதுதான். அதனால்தான் தாங்களும் "கஷ்டப்பட்டு" ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அதுவும் எந்தவிதமான "கச்டமுமின்றி".

    எனவே இது இயல்பானதுதான். மாறானது இல்லை. மற்ற வார்த்தைகளை டைப் செய்யும் வேகத்தில்தான் இவற்றையும் நான் டைப் செய்கிறேன். இவையும் தமிழே.

    தமிழை தூய்மைப்படுத்துகிறோம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை (தமிழ் தாயை பன்னீரால் குளிப்பாட்டுங்கள். ஏறுக்கொள்கிறேன். வரவேற்கிறேன். ஆனால் தோலை சீவி எறிய வேண்டியதில்லை). ஒவ்வொரு எழுத்தாக அழித்துக்கொண்டே வருகிறார்கள். உதாரணத்திற்கு "ஐயப்பன்" என்பதற்குப் பதிலாக "அய்யப்பன்" என்று எழுதச்சொல்கிறார்கள். ஸ, ஜ, ஹ, ஷ போன்றவற்றை வடமொழி எழுத்துக்கள் என்று ஒதுக்கினால், "ஐ" என்கிற எழுத்தை வேறு ஏதாவது இதே போன்ற முட்டாள்த்தனமான காரணங்களுக்காக ஒதுக்கச் சொல்கிறார்கள்.

    இதைத் தமிழ் மொழி அழிப்பிற்கான முயற்சிகளாகத்தான் என் தமிழ் உணர்வுகள் பார்க்கின்றன. தமிழ் தாயின் புதல்வர்கள் இந்தக் கருத்தை ஒத்துக்கொள்வர்.

    ReplyDelete
  42. பின்னூட்டமிட்ட இஜ்ஜத், இப்னு பஷீர், ராஜா, அபிராமம், ம்யூஸ் ஆகிய அனைவருக்கும் நன்றிகள் பல.

    இஜ்ஜத்தும் தன்னுடைய கருத்தை அழகாக சொல்லியிருந்தார் தன்னுடைய வலைப் பூவில்.

    ReplyDelete
  43. ம்யூஸ்!

    .// அவர்கள் இடஒதுக்கீட்டின்படி ஸமநீதிப் பெற்று பதவியடைந்த இஸ்லாமிய அன்பர்களை அவர்களது கடமையாற்ற விடுவார்களா? //

    அவ்வாறு முஸ்லிம்கள் விகிதாச்சார அடிப்படையில் பதவியில் அமர்ந்தால் குஜராத்தைப் போல நுற்றுக்கு நூறு சதவீதம் அக்கிரமங்கள் நடக்காமல் நூற்றுக்கு இருபது சதவீதம், அல்லது முப்பது சதவீதமாக அக்கிரமங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறதல்லவா?

    உதாரணத்துக்கு கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்துக்கள், கிறித்தவர், முஸ்லிம்கள் ஓரளவு சம எண்ணிக்கையில் இருக்கக் கூடிய அந்த மாநிலத்தில் அப்பாவிகள் தண்டிக்கப் படுவது, சிறைவாசம் அனுபவிப்பது மிகக் குறைவு. இன மோதல்கள் நடப்பதும் மிகவும் அரிது. அப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும் மறு நாளே குற்றவாளிகளை பிடித்து விடுகிறது போலீஸ். எதனால்? அதிகார வர்க்கத்தில் அனைத்து மதத்தினரும் சமமாக அமர்ந்திருப்பதனால்.இதனால் அனைத்து மத்தவருக்கும் அந்த மாநிலத்தின் மேல் ஒர பாசம், பிரியம் தானாகவே ஏற்ப்பட்டு விடுகிறது. வெளிநாடுகளில் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது முதலில் கேட்பது 'நீங்கள் மலையாளியா?'. இங்கு மதம் முன்னுக்கு வருவதில்லை. இன்று அசுர வேகத்தில் மற்ற மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறி செல்கிறது என்றால் அங்கு அனைத்து மத்தவரும் சமமாக நடத்தப் படுவதே!

    வேறொன்றையும் பார்க்க வேண்டும். கேரளாவில் அனைத்து மதத்துக்கும் சம அந்தஸ்து கொடுக்கப் படுவதால் இந்து மதத்துக்கு என்ன இழப்பு வந்து விட்டது? மற்ற மாநிலங்களை விட அதிக பூஜைகளும், புணஸ்காரங்களும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. 'தெய்வங்களின் நாடு' என்ற மற்றொரு பெயரும் இம் மாநிலத்துக்கு உண்டு.

    'இந்து மறுமலர்ச்சி இந்துக்களிடம் கொண்டு வரப் போகிறோம்' என்று அரசியல் பண்ணிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி க்கு இம்மாநிலத்தில் என்ன மரியாதை என்பது உங்களுக்கே தெரியும். இன்று வரை ஒரு எம்.எல்ஏ சீட்டும், அல்லது ஒரு எம்.பி சீட்டும் கூட இம் மாநில மக்கள் கொடுக்கவில்லை. மூன்று மதத்தவரின் மனங்களும் இங்கு ஒன்று பட்டு விட்டதால் இந்துத்வ வாதிகளுக்கு இங்கு வேலை இல்லாமல் போய் விட்டது. எனவே கேரள மாநிலத்தைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.


    //விடமாட்டார்கள் என்பது தங்களது கருத்தாக இருக்குமாயின் அதற்கு மாற்று வழிதான் என்ன?//

    நல்லதையே நினைப்போம். இன்று இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் சமூக நீதி அனைத்து மதத்தவருக்கும் கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையில் தானே நம் வாழ்க்கையே ஓடுகிறது.

    ReplyDelete
  44. ம்யூஸ்!

    //இதைத் தமிழ் மொழி அழிப்பிற்கான முயற்சிகளாகத்தான் என் தமிழ் உணர்வுகள் பார்க்கின்றன. தமிழ் தாயின் புதல்வர்கள் இந்தக் கருத்தை ஒத்துக்கொள்வர்.//

    மொழி சம்பந்தமாக நீங்கள் வைக்கும் சில கருத்துக்களை ஓரளவு நானும் ஒத்துக் கொள்கிறேன். வட மொழிச் சொற்களை உபயோகப் படுத்த வேண்டாம் என்றால் அந்த இடங்களில் பயன் படுத்த தக்க பதிய எழுத்துக்களை தமிழ் ஆர்வலர்கள் கண்டு பிடித்து தர வேண்டும் அல்லவா? அது போன்ற ஒரு முயற்ச்சி எடுக்காத வரை வட மொழி எழுத்துக்களை பயன் படுத்துவது தவிர்க்க இயலாததாகி விடும். ஆங்கில மொழி இன்று உலகை ஆளுவதற்கு முக்கிய காரணம் அது உலக மொழிகள் அனைத்திலிருந்தும் வஞ்சகமில்லாமல் பல வார்த்தைகளை சுவீகரித்துக் கொண்டதே! எனவே ஒரு மொழி வளர்வதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

    நான் சுட்டிக் காட்டியது மற்றவர்களின் எழுத்துக்கும் உங்களின் வட மொழி கலந்த எழுத்துக்கும் சிறிய மாற்றம் தெரிகிறது என்று சொன்னேன். வேறொன்றும் இல்லை.

    ReplyDelete
  45. சுவனப்பிரியனுக்கு எமது நன்றிகள். இது புதிய தகவல்.
    ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் பல வருடசதி திட்டங்கள். உண்மைகள் அம்பலம்
    நடுங்க வைக்கும் நாந்தேடு பயங்கரம்
    கடந்த ஏப்ரல் மாதம் 7 தேதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாந்தேடில் நடந்த குண்டு வெடிப்பைப் பற்றிய உண்மைத்தகவல்கள் தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. சம்பசம் நிகழ்ந்த தினத்தில் குண்டு வெடிப்பைப் பற்றிய செய்தி மாநிலத்திற்கு வெளியே ஒருவரும் அறிந்திருக்கவில்லை. விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக காவல்துறையும், அரசாங்கமும், பத்திரிக்கைகளும் கடும் முயற்சி செய்தனர். காரணம் குண்டு வெடிப்பின் பின்னணியில் செயல்பட்டவர்கள் தேசப்பக்தியை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள சங்பரிவார் அமைப்பனர். படுகொலைகளுக்கான திட்டம் தீட்டுபவர்கள் ஒரு தரப்பினர். ஆனால் கைது செய்யப்படுவதோ ஒன்றும் அறியாத அப்பாவிகள். இதுதானே இன்று வரை நடந்து வருகிறது.
    ஒதுக்குப்புறமான இடத்தில் பைப் வெடிகுண்டுகளைப் தயாரிக்கும் பொழுது குண்டுகள் தவறுதலாக வெடித்ததில் 2 பஜ்ரங்தன் உறுப்பினர்கள் அதே இடத்தில் வெடித்துச் சதறினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தான் இதுவரை மறைவாக நடந்து கொண்டிருந்த தீவிரவாதிகளின் சதித்திட்டங்களை வெளிக் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பதினைந்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். நாந்தேடிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த 3 வருடங்களாக நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் மூளையாகச் செயல்பட்பவர்கள் யார் என்பது பைப் வெடிகுண்டுகள் வெடித்ததன் மூலம் தெளிவாகி விட்டது.
    நன்றி: சமரசம் (ஜீலை 16-31)

    ReplyDelete
  46. வருக சிராஜூத்தீன்!

    இஸ்ரேலியர்கள் (யூதர்கள்) எப்படி பல நாச வேலைகளை செய்து விட்டு முஸ்லிம்கள் தலையில் கட்டுகிறார்களோ அதே பாணியைத்தான் நம் நாட்டு இந்துத்வா வாதிகளும் முஸ்லிம்களை பகடைக் காய்களாக பயன் படுத்துகிறார்கள். தற்போது சுஷ்மா சுவராஜூக்கும் தாவூத் இப்றாகீமுக்கும் உள்ள தொடர்பை மதன்லால் குரானா போட்டு உடைத்திருக்கிறார். புதிதாக அதைப் பற்றிய பதிவு கூட போட்டிருக்கிறேன். இவர்களின் சுயரூபம் ஒவ்வொன்றாக வெளிப் பட்டு வருகிறது. இவை அனைத்தும் மக்களிடம் கொண்டு செல்ல தினப் பத்திரிக்கை ஒன்று (எந்த அமைப்பையும் சாராமல்) முஸ்லிம்களுக்கு அவசியம் தேவை. ஆர்வம் உள்ள முஸ்லிம் செல்வந்தர்கள் தான் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

    பல அரிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்து வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  47. பிஸ்மில்லாஹ் ஹிர்ரகுமான் னிர்hஹிம்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    உங்கள் பணிக்கு முன்பாக நான் செய்வது ஒன்றுமில்லை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நமக்கொரு நாளிதழ் என்று நமது சமுதாய தலைவர்கள் பேசி பல காலங்கள் உருண்டோடி விட்டன. இதற்காக வசதிப் படைத்தவர்களை எதிர்ப்பார்த்து காரியம் ஆகாது. நம்மைப் போன்று சமுதாய சிந்தனையுள்ள மக்கள் ஒன்றிணைந்தோ அல்லது தன்னார்வ சமுதாய இயக்கங்களோ தான் இதை செய்யவேண்டும். கேரளாவில் உள்ளது போல. ஜாகிர் நாயக் கூட மீடியாவும், முஸ்லீம்களும் என்ற தலைப்பில் பேசிய சி.டி.யில் முஸ்லீம்களுக்கென்று ஒரு 24 மணி நேர டிவி சேனல் வேண்டும் என்று சொல்லி விட்டு, இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. ஒரு சில முஸ்லீம் தொழிலதிபர்களின் சட்டைப் பை பணம் தான் இதற்கு ஆகும் செலவு என்றார். கடைசியாக அவரால் பீஸ் டிவி உருவாக்கப்பட்டதை அறிவீர்கள். ஆக சமூகப் பணி என்று வந்துவிட்டால் உடலாலும், பொருளாலும் நாம் பணி ஆற்றியே தீர வேண்டும். பணம் படைத்தவர்கள், அதை அல்லாஹ_வீன் பாதையில் செலவழிக்க வேண்டும் என்று சிந்திப்பவர்கள் மிகக் குறைவு.
    இது இந்த பின்னூட்டத்திற்கான செய்தி இல்லாததால் இதை உங்கள் தனிப்பட்ட ஆலோசனைக்காக எழுதுகிறேன்.

    ReplyDelete
  48. சிராஜீத்தீன்!

    //இதற்காக வசதிப் படைத்தவர்களை எதிர்ப்பார்த்து காரியம் ஆகாது. நம்மைப் போன்று சமுதாய சிந்தனையுள்ள மக்கள் ஒன்றிணைந்தோ அல்லது தன்னார்வ சமுதாய இயக்கங்களோ தான் இதை செய்யவேண்டும்.//

    உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். என் பங்காக உடலாலும் எழுத்தாலும், பொருளாலும் உதவ நானும் என் நண்பர்கள் குழாமும் தயாராக இருக்கின்றோம். ஷேர்களாக பிரித்துக் கூட இந்த தினப் பத்திரிக்கையை செயல்படுத்தலாம். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் கை கோர்க்க நான் என்றுமே தயார். அப்படி ஆரம்பித்தால் 'மணிச்சுடர்' பத்திரிக்கையைப் போல் குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல் தின மணி, தினமலர், ஹிந்து பத்திரிக்கைகள் போல் பல இனத்தவரையும் சென்றடைவது போல் அமைக்கப்பட வேண்டும். இன்று இந்துத்துவ வாதிகள் தங்கள் காரியத்தை வெகு சுலபமாக நிறை வேற்றிக் கொள்ளுவதற்கு காரணமாக இருப்பது ஊடகத்துறை பெரும்பாலும் அவர்கள் கையில் இருப்பதுதான்.

    ReplyDelete
  49. //ஒரு நல்ல முஸ்லீம் என்பதை நிரூபிக்க அப்துல்கலாம்//
    யப்பா இவரை எம்பா இழுக்கிறீங்க பாவம் அவரை விட்டுடங்கப்பா ஏதோ நல்லது செஞ்சிட்டு போறாரு.அவரை மதத்துக்குள்ள இழுத்துட்டு.

    ReplyDelete
  50. வருகைக்கு நன்றி சந்தோஷ.!

    //விட்டுடங்கப்பா ஏதோ நல்லது செஞ்சிட்டு போறாரு.அவரை மதத்துக்குள்ள இழுத்துட்டு.//

    நடக்கும் பிரச்னைக்கும் அப்துல் கலாமுக்கும் சம்பந்தம் இல்லை. இதை அவர் தவிர்த்திருக்கலாம். உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)