Friday, July 20, 2012

இந்தியாவுக்கு இஸ்லாமிஸ்டுகளால் ஆபத்தாம்!- அமெரிக்கா

இந்தியாவுக்கு இஸ்லாமிஸ்டுகளால் ஆபத்தாம்!- அமெரிக்கா

நம்ம பெரியண்ணன் சொல்லிட்டாக! இந்தியாவில் சமீப காலமாக பெரும் மோதல்களோ இனப் பிரச்னைகளோ எழவில்லை. இதனால் உடன் அமெரிக்காவின் மூக்கில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் இல்லாத பல அமைப்புகளின் பெயர் பட்டியலை தனது மக்களுக்கு கொடுத்துள்ளது அமெரிக்கா. தனது நாட்டு மக்கள் இந்தியாவுக்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை கசிய விட்டுள்ளது. இனி சிஐஏ யின் ஏஜண்டுகள் சிலர் சில வறிய முஸ்லிம்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இத்தனை லட்சம் சென்று விடும் என்ற ஆசையும் காட்டப்படும். அமெரிக்கா சொல்லிய அனைத்து இடங்களிலும் கச்சிதமாக பல நாச வேலைகளை சிஐஏ யின் ஏஜண்டுகள் மொசாத்தின் எஜண்டுகள் உள்ளூர் ஆட்கள் உதவியோடு செய்து முடிப்பார்கள். குண்டு வெடித்தவுடன் ஏதாவது ஒரு ப்ரௌசிங் சென்டரில் சிஐஏ யின் உளவாளி 'நான்தான் இந்தியன் முஜாஹிதீன். நான் தான் குண்டு வைத்தேன்' என்று கூறுவான். நம் ஊடகங்களும் கண் காது மூக்கு வைத்து செய்திகளை இன்னும் சுவாரஸ்யமாக மக்களுக்கு தரும். அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு 20 வருடம் சிறை வாசத்துக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்ற பழைய பல்லவியை பாடி விடுதலை செய்யப்படுவார்கள். இதற்குள் பல மில்லியன் ஆயுத வியாபாரமும் அமெரிக்காவால் நடத்தப்பட்டு விடும்.

அமெரிக்கா இவ்வாறு மற்ற நாடுகளின் ரத்தத்தில் தனது நாட்டு மக்களை சுபிட்சமாக வைத்திருப்பதற்கு பதில் உலக நாடுகள் அனைத்திலும் வருடம் இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம். மனித உயிர்களாவது மிஞ்சும். ஒபாமா நடவடிக்கை எடுப்பாரா?

சவுதி அரேபியா இதைத்தான் செய்து வருகிறது. வருடா வருடம் இத்தனை மில்லியன்கள் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்காவுக்கு தந்து விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு சவுதி உள் நாட்டு பிரச்னைகள் எதிலும் தலையிடுவதில்லை. இதை ஏன் மற்ற நாடுகள் பின்பற்றக் கூடாது? :-)

-------------------------------------------------------

U.S. Cautions Citizens Against Overseas Travel, Including India
Thursday, 19 July 2012, 02:01 Hrs

Washington: The United States has issued a fresh travel advisory on overseas travel to its citizens, including India which "continues to experience terrorist and insurgent activities."

"India continues to experience terrorist and insurgent activities which may affect US citizens directly or indirectly," the state department said in its new worldwide travel alert for its citizens.

"Anti-Western terrorist groups, some on the US government's list of designated Foreign Terrorist Organizations, are active in India, including Islamist extremist groups such as Harkat-ul-Jihad-i-Islami, Harakat ul-Mujahidin, Indian Mujahideen, Jaish-e-Mohammed, and Lashkar-e Taiba," it said.

"Terrorists have targeted public places in India frequented by Westerners, including luxury and other hotels, trains, train stations, markets, cinemas, mosques, and restaurants in large urban areas," the state department said.

US citizens are reminded to maintain a high level of vigilance and to take appropriate steps to increase their security awareness, the state department said, adding that it remains concerned about the continued threat of terrorist attacks, demonstrations, and other violent actions against US citizens and interests overseas.

"Current information suggests that al-Qaida, its affiliated organisations, and other terrorist organisations continue to plan terrorist attacks against US interests in multiple regions, including Europe, Asia, Africa, and the Middle East," the advisory said.

http://www.siliconindia.com/news/usindians/US-Cautions-Citizens-Against-Overseas-Travel-Including-India-nid-123924-cid-49.html?utm_campaign=Newsletter&utm_medium=Email&utm_source=l1

-------------------------------------------------------

துபாய்: துபாயில், தமிழக மீனவர்களை எச்சரிக்காமல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, ஐக்கிய அரபு எமிரேட் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பலுக்கு, எரிபொருள் சப்ளை செய்ய, "ரபானாக்' என்ற அமெரிக்க கப்பல், துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த எண்ணெய் கப்பலை நோக்கி வந்த படகு மீது, அமெரிக்க மாலுமிகள் 16ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராமநாதபுரம் மாவட்டம், தோப்பு வலசை களிமண்குண்டைச் சேர்ந்த சேகர் பலியானார். ராமேஸ்வரத்தில் உள்ள கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்து கண்ணன், முருகன் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஜபெல் அலி என்ற இடத்தில் தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் விடுத்த எச்சரிக்கையை மீறி, படகு வந்ததால் தான் சுட்டோம்' என, அமெரிக்க மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர்களை சந்தித்துப் பேசிய ஐக்கிய அரபு எமிரேட்டின் போலீஸ் உயர் அதிகாரி தாகி கல்பான் தமீம் குறிப்பிடுகையில், "அமெரிக்க கப்பல் மாலுமிகள் எச்சரிக்கை ஏதும் விடவில்லை. அமெரிக்க கப்பலை பார்த்து, படகில் இருந்தவர்கள் தான் வேறு திசை நோக்கி சென்றுள்ளனர். இருப்பினும், அமெரிக்க கப்பல் மாலுமிகள் திடீரென சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் உண்மையை சொல்வதாக நம்புகிறேன்' என்றார்.
தின மலர்
20-07-2012

இங்கும் அமெரிக்க படையினர் வேண்டுமென்றே ஒரு தமிழனை சுட்டு கொலை செய்துள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் பதட்டத்தை நிறுவி இன்னும் போர்த் தளவாடங்களை விற்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்.

___________________________________________________________

வாஷிங்டன்: அமெரிக்காவில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 14பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில் பேட்மேன் ( தி டார்க் நைட் ரைடர்ஸ் ) என்ற திரைப்படம் முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன் கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில் துப்பாக்கி குண்டுகளுக்கு 14 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். துபபாக்கி சூடு நடத்தியதன் நோக்கம் இன்னும் போலீசாரால் அறிய முடியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமுற்றவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபடி இருக்கின்றன. பலரும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது. தியேட்டர் வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஏன் சுட்டான் ? எப்படி சுட்டான் ? : இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில்: அதிகாலை 12. 25 மணியளவில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது அரங்கமே முழு இருட்டாக இருந்தது. இந்நேரத்தில் பலத்த சப்தம் கேட்டது. அரங்கம் முழுவதும் ஒரே புகை மண்டலமானது. இந்த அதிர்ச்சியில் உறைந்த சில நிமிடத்திலேயே துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்பின. அலறியபடி எங்கும் யாரும் தப்ப முடியவில்லை. பலரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தனர்.
-தின மலர்

20-07-2012

25 comments:

  1. இஸ்லாமிய சமூகத்திற்கெதிராக பரப்பபடும் விஷமங்களை அவதூறுகளை உண்ணாமல் உறங்காமல் சல்லடை போட்டு சதா தேடி தேடி எடுத்து பேணை பெருமாளாக்கி தமிழ் பதிவுலகில் குடுகுடுப்பை அடித்துவரும் கோடங்கி இக்பால் செல்வனை

    சுவனப்பிரியன் இந்தப்பதிவினால் ஐயோ வடை போச்சே என புழம்ப விட்டு விட்டார்.

    கோடங்கி எதை எழுதினாலும் சொறிந்துவிட்டு சிங்கி அடிக்கும் கூட்டமும் ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.

    ReplyDelete
  2. Anonymous7:38 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சகோ உண்மைகள்!

    //சுவனப்பிரியன் இந்தப்பதிவினால் ஐயோ வடை போச்சே என புழம்ப விட்டு விட்டார்.

    கோடங்கி எதை எழுதினாலும் சொறிந்துவிட்டு சிங்கி அடிக்கும் கூட்டமும் ஏமாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.//

    அவர் என்னதான் பொய்களை பரப்பினாலும் தமிழ் மக்கள் நம்பத் தயாரில்லை. அவரது பதிவுகளை யாரும் அவ்வளவு சீரியஸாகவும் எடுத்துக் கொள்வதில்லை. விட்டுத் தள்ளுங்கள்.

    ReplyDelete
  5. சுதந்திரம் என்பது எது என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது . அளவற்ற சுதந்திரத்தால் இது வரை எத்தனை உயிர்களை காவு கொடுத்திருக்கிறோம் enbathai அவர்கள் யோசிக்கவே மாட்டார்கள். காரணம் , ஜனாதிபதிகளை கொன்றால் அவர்களுக்கு தூக்கு , ( பூத், - ஆஸ்வால்ட் )அப்பாவிகளை கொன்றால் உடனே மனிதநெய்ய அம்மைப்புகள் வந்துவிடும் காப்பாற்ற .

    ReplyDelete
  6. எனக்கு ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை., நான் அடிக்கடி சொல்வதுண்டு, இது kuriththu
    இது போன்ற வார்த்தை பிரயோகங்கள் ஏன் வருகிறது. கருத்தில் மோதல் வேண்டும் என்றால் எடுத்தால தமிழில் வார்த்தைகள் இல்லயா? இலை எதிராளி kovamoottinaal பிடரி நரம்பில் irukkum இறைவன் தூரப்போயவிடுவானா?

    சில மாற்று வார்த்தைகள் -
    //பிச்சை// - கையேந்தலாம் என்று சொல்லிபாருங்கள், கண்ணியமாக திட்டுவதாக தெரியும்
    //பெண்கள விபச்சாரம் //- ஆணாதிக்க வார்த்தை .வேணுமென்றால் மனநல மருத்துவரிடம் intha வார்த்தைகள் நாம் ஏன் உபயோகபடுத்துகிறோம் endru கேட்டுபாருங்கள்
    //சதா தேடி தேடி எடுத்து பேணை பெருமாளாக்கி தமிழ் பதிவுலகில் குடுகுடுப்பை அடித்துவரும் கோடங்கி இக்பால் செல்வனை// - வேறு மாதிரியாக சொல்ல வரும் குற்ற பொருளை எழுதலாம் .
    //சொறிந்துவிட்டு சிங்கி அடிக்கும் கூட்டமும்// - நாகரீக மற்ற வார்த்தை ( நாகரீகம் penupavargalukku...)
    //எதை வழித்து நக்க போகிறார்கள்// - இவர்களின் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
    //தாலியை அறுத்தாலும்// - இல்லை இதைவிட வேறு வார்த்தயில் சொல்ல வருவதை சொல்ல முடியும்


    மிக சரியாக ஒரு வார்த்தை இது -
    //அவர் என்னதான் பொய்களை பரப்பினாலும் தமிழ் மக்கள் நம்பத் தயாரில்லை. அவரது பதிவுகளை யாரும் அவ்வளவு சீரியஸாகவும் எடுத்துக் கொள்வதில்லை. விட்டுத் தள்ளுங்கள்.//

    எனது அடிப்படை கருத்துக்கள் நாத்திகமும் அல்ல, ஆத்திகமும் அல்ல, vaalvatharkkuriya sattangalai penuthal .,

    ReplyDelete
  7. //இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இத்தனை லட்சம் சென்று விடும் என்ற ஆசையும் காட்டப்படும். //

    ஏனோ நிறைய பேர் இப்படித்தான் ... செத்த பிறகு உனக்கு அது கிடைக்கும் .. இது கிடைக்கும் என்றால் நம்பி இப்படி மோசம் போய்விடுகிறார்கள்.

    பாவம்!!!

    ReplyDelete
  8. திரு தருமி!

    //ஏனோ நிறைய பேர் இப்படித்தான் ... செத்த பிறகு உனக்கு அது கிடைக்கும் .. இது கிடைக்கும் என்றால் நம்பி இப்படி மோசம் போய்விடுகிறார்கள்.

    பாவம்!!! //

    சரியாகவே சொன்னீர்கள். குர்ஆனின் வசனங்களை சில முல்லாக்கள் தவறாக விளக்கி பல இளைஞர்களை மூளை சலவை செய்துள்ளது பலுசிஸ்தான், வஜிரிஸதான் போன்ற பகுதிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க ஒரே வழி குர்ஆனின் உண்மையான விளக்கம் அந்த இளைஞர்களை சென்றடைய வேண்டும்.

    ReplyDelete
  9. Anonymous12:19 PM

    சிராஜ் said...

    //* அமெரிக்கா இவ்வாறு மற்ற நாடுகளின் ரத்தத்தில் தனது நாட்டு மக்களை சுபிட்சமாக வைத்திருப்பதற்கு பதில் உலக நாடுகள் அனைத்திலும் வருடம் இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம். *//

    உலக அமைதிய பத்தி பேசைல அவனுகளுக்கு கொஞ்சம் கூட வெட்கம் வறாதா?? என்ன ஜென்மங்களோ???

    ReplyDelete
  10. Anonymous12:22 PM

    ஓ, நல்ல யோசனை. ஆனால் இவ்வளவு கேவலமான செயல்களை செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து மும்மீன்கள் கூட்டம் கூட்டமாக சென்று குடிஏறுகிறார்களே அங்கு சென்று எதை வழித்து நக்க போகிறார்கள். தங்களுக்கு எதிராக செயல்படும் ஒரு நாட்டில் போய் இப்படி பிச்சை எடுத்து தின்று கொண்டிருக்கிறார்களே இவர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் வராதா. என்ன ஜென்மங்களோ

    ReplyDelete
  11. அனானி!

    //ஓ, நல்ல யோசனை. ஆனால் இவ்வளவு கேவலமான செயல்களை செய்யும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து மும்மீன்கள் கூட்டம் கூட்டமாக சென்று குடிஏறுகிறார்களே அங்கு சென்று எதை வழித்து நக்க போகிறார்கள். தங்களுக்கு எதிராக செயல்படும் ஒரு நாட்டில் போய் இப்படி பிச்சை எடுத்து தின்று கொண்டிருக்கிறார்களே இவர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் வராதா. என்ன ஜென்மங்களோ //

    வளைகுடா மூமின்கள் யாரும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் சென்று பிச்சை எடுக்க செல்லவில்லை. படிக்க செல்கிறார்கள். தொழிலில் முதலீடு செய்ய செல்கிறார்கள். வளைகுடா இல்லை என்றால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் நீங்கள் சொல்வது போல் பிச்சை எடுக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  12. Anonymous2:55 PM

    Not only now. India is always vulnerable for attack form muslims. It may be either externally in the form of enemy countries like Pakistan or internally from Indin Muslims.

    India has to awaken now.

    ReplyDelete
  13. //Not only now. India is always vulnerable for attack form muslims. It may be either externally in the form of enemy countries like Pakistan or internally from Indin Muslims.//

    அசீமானந்தா, சாது பிரக்யாசிங், புரோகித் இவங்கல்லாம் யாருங்கண்ணா! கொஞ்சம் சொன்னா தேவல...:-)

    ReplyDelete
  14. “ இந்துத்துவ பாசிச வாதிகள் ,அவுரங்கஜெபை இன்றும் தொடர்ந்து மதவெறியராக காட்டி வருவது ஏன்?

    ஏனென்றால்,அவுரங்கஜெபைப் படிக்கும் அனைவருக்கும் அவர் மீது வெறுப்பு வரவேண்டும் என்பதுதான்.

    அவுரங்கஜெப் மீது,அவரது ஆட்சிமீது வெறுப்பு வந்தால்தான்,அவர் பலவந்தமாக மாற்றியதாக கூறும் முஸ்லிம்களின் வம்சாவளியினர் மீது,அதாவது இன்றைய முஸ்லிம் மக்கள் மீதும் வரவேண்டும் என்பதற்காகத்தான் அவுரங்கஜெப் குறித்து தவறான வரலாறு எழுதி, அதனை உண்மை என மக்களை நம்பசெய்து வருகிறார்கள்! “ - ஓசூர் ராஜன்


    சொடுக்கி ----- பிராமணர்கள் எதிர்க்கும் முகலாய மன்னர்! - ஓசூர் ராஜன் ------ படிக்கவும்

    ReplyDelete
  15. அன்புள்ள நண்பருக்கு
    நான் வெள்ளிநிலா என்ற ஒரு மாத இதழ் நடத்தி வருகிறேன்
    இதுபோன்ற செய்திகள் எமக்கு அனுப்பி வைத்தால் வரும் மாதங்களில் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்..
    அன்புடன்
    நிசார் அஹ்மத்
    ஆசிரியர் -வெள்ளிநிலா
    email : vellinila@gmail.com

    ReplyDelete
  16. சகோ நிசார் அஹமத்!

    //அன்புள்ள நண்பருக்கு
    நான் வெள்ளிநிலா என்ற ஒரு மாத இதழ் நடத்தி வருகிறேன்
    இதுபோன்ற செய்திகள் எமக்கு அனுப்பி வைத்தால் வரும் மாதங்களில் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்..//

    தாராளமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் பதிவுகளையும் அனுப்பி வைக்கிறேன். பதிவுக்கு ஏற்றதாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    முதல் வருகைக்கும் கருத்தக்கும் நன்றி!

    ReplyDelete
  17. திரு வெங்கட் சாமிநாதன்!

    //குரானே எழுதப்பட்டது எப்போது?//

    1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.

    அல்லாஹ்வால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள்; அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும் செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் – அந்த வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும் நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம் தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – தம் தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள். அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச் சொல்லி – அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம் செய்யப்பட்ட வசனங்களும் – தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை – மேற்படி வசனங்களை மனனம் செய்த தம்; தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.

    2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.
    அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில் அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை.
    அருள்மறை கும்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் – வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம் என்பதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.
    அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் – ஜிப்ரில் (அலை) அவர்களிடம் – வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.
    மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே – அருள்மறை குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் – நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு – தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.

    3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.
    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (ளூநநவள) போன்ற ஒரு பொதுவான பொருளில் – எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி – அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் – சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைக் கட்டியும் வைத்தார்கள்.

    ReplyDelete
  18. திரு வெங்கட் சாமிநாதன்!

    //இறைவன் இறக்கியதைத் தான் முகம்மது சொன்னார் என்பதற்கும் என்ன ஆதாரம்? ஹதீஸ் எழுதியது யார்? அது எப்படி ஆதாரமாகும். ஷரியா எழுதியது யார்? அதுவும் எப்படி ஆதாரமாகும்.//

    4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
    அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் தம் நாவால் மொழியும் போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல் ) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் . தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் – எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் – சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.
    மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை – நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது – அதனை எழுதி வைத்துக் கொண்ட தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து – தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸெய்த் பின் தாபித் (ரலி) அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச் செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால் இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர் அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் – எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன் காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.

    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் – அரபி மொழி அல்லாதவர்களும் – அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி – பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை – ஃபத்ஆ – தம்மா – கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் – ஸேர் – பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் – அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில் உச்சரித்து ஓதுவதற்கு – அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு – குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685 முதல் 705 வரை) ஆட்சி புரிந்த – உமையாத் – காலத்தின் ஐந்தாவது கலீஃபா – மாலிக் அர்-ரஹ்மான் என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில் இணைக்கப்பட்டது.

    ReplyDelete
  19. திரு வெங்கட் சாமிநாதன்!

    //கடைசியாக இவையெல்லாம் இன்றைய வாழ்விற்கு எப்படி உதவும்? எந்த நூற்றாண்டுச் சிந்தனைகள் எந்த நூற்றாண்டு வாழ்வுக்குப் பொருந்தும்? இவையெல்லாம் தத்துவார்த்த சிந்தனைகள் அல்ல. அனறாட வாழ்க்கை எப்படி எதிர்க்கொள்ளவேண்டும் என்பதற்கான வழிமுறைகள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலான ஒரு பாலைவன நாடோடி வாழ்க்கைக்கான வழிமுறைகள் இன்று எப்படி வழிகாட்டும்? //

    குர்ஆனின் எந்த வசனம் இந்த காலத்திற்குப் பொருந்தாது என்கிறீர்கள்? உசிலம் பட்டியில் வாழும் ஒரு முஸ்லிமும், உகாண்டாவில் வாழும் ஒரு முஸ்லிமும் உக்ரைனில் வாழும் ஒரு முஸ்லிமும் குர்ஆனை அங்குலம் அங்குலமாக பின் பற்றி வாழ முடிகிறதே? மனிதர் கொண்டு வந்த ஒரு வேதத்தில் இது சாத்தியப்படுமா? அடுத்து இன்றைய அறிவியலில் உறுதிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு எந்த வகையிலும் மாறாத வசனங்களை கொண்டது குர்ஆன். பரிணாமவியல் ஒன்றுதான் தற்கால அறிஞர்களோடு குர்ஆன் முரண்படுகிறது. பரிணாமவியல் என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் நிரூபிக்க முடியாது என்று பல அறிஞர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.

    ReplyDelete
  20. திரு புனை பெயரில்!

    //அதற்கு பின் 30ஆண்டுகள் கழித்து இதே வித்தையை திருமாவளவனிடம் முஸ்லீமாக நீங்கள் மாறுங்கள் என்ற போது, அதனால் மரியாதை வராது என்று தெளிவாகப் புறந்தள்ளினர். அவர் தனது இனத்தின் தகுதி உயர்த்த போராடுகிறார். அறிவை வளர்த்து அதனால் மரியாதை கிடைக்கப் போராடுகிறார்.//

    கேள்வி:இஸ்லாம் மதத்தை தழுவிய பெரியார் தாசனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டீர்கள். இதைத் தொடர்ந்து நீங்களும் இஸ்லாம் மதத்துக்கு மாறப்போவதாக செய்திகள் வருகிறதே?

    திருமாவளவன் பதில்:ஒரு பெரியாரியவாதி திடீரென இஸ்லாமிய மதத்தை தழுவினார் என்பது பெரியாரிய தொண்டர்களுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது. அப்படி நானும் அதிர்ச்சிக்குள்ளானது உண்மைதான். அவர் எந்த சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார் என்பது முக்கியமல்ல.

    ஆனால் அவர் இந்துத்துவத்தை, இந்து மதத்தை ஏற்கவில்லை என்பது நமக்கு ஆறுதல் அளித்த ஒன்றாகும். பெரியாரும், அம்பேத்கரும் இந்து மதம், இந்ததுத்துவத்தை கடுமையாக விமர்சித்தவர்கள். அந்த வகையில் பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தை தழுவியது இந்துத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையே. அந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது உண்மைதான். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

    புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவியபோது அவர் சார்ந்த ‘மகர்’ பிரிவினரே அவருடன் பௌத்த மதத்தை தழுவினர். வேறு தலித் சமூகப் பிரிவினர் யாரும் அவரைப் பின்பற்றவில்லை என்பது கசப்பான உண்மை. உலகப் புகழ்பெற்ற தலைவருக்கே இந்த நிலை என்றால், நான் மதம் மாறினால் என்னை முற்றாக ஆதரித்து தலித் சமூகம் மதம் மாறும் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. நான் இஸ்லாத்தை தழுவினால் என்னுடன் சில ஆயிரம்பேர் மட்டுமே தழுவலாம்.

    இஸ்லாமியனாக மாறிய பிறகு அடிமைப்பட்டு கிடக்கிற, தலித் மக்களுக்கு என்னால் குரல் கொடுக்க முடியாது. எனவே, தாழ்த்தப்-பட்ட தலித் மக்கள் உள்பட ஏழைகளுக்கு செய்யும் தொண்டுதான் உண்மையான இறைப்பணி. எனவே நான் இஸ்லாத்தை தழுவியே தீரவேண்டும் என்ற தேவை எழவில்லை.
    http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1066&rid=59

    இஸ்லாத்துக்கு மாறினால் தலித்களுக்காக குரல் கொடுக்க முடியாதே என்ற ஆதங்கத்தில்தான் இன்றும் இஸ்லாத்தை தழுவாமல் இருப்பதாக அவரே சொல்வதை பாருங்கள்.

    ReplyDelete
  21. திரு புனை பெயரில்!

    //இது தான் உங்கள் பிரச்சனையே…. தகுதியை வளர்க்காமல் தகுதி எதிர்பார்ப்பது… அந்த மாதிரி நிச்சயம் இங்கு நடக்காது…//

    மிக அழகாக புரோகிதத்தை உள்ளே நுழைக்கிறீர்களே! இந்த சாதிதான் புரோகிதராக வேண்டும்: மற்ற சாதியினர் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும்: படிக்கும் நாக்கை அறுக்க வேண்டும் என்று நீங்கள் இந்து மதத்தின் பெயரால் சொல்லும் போது.....

    எந்த சாதியும் தேவையில்லை. எந்த மதரஸாவிலும் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. குர்ஆனை பொருள் உணர்ந்து வாசிக்கத் தெரிந்த யாரும் தலைவராக நின்று (உங்கள் பாசையில் புரோகிதராக நின்று) தொழ வைக்கலாம் என்ற சட்டம் உள்ளதே இதுதான் இஸ்லாம்.

    ReplyDelete
  22. //மாறாதது மெய்மை / உண்மை / சத்தியம் எனப்படும் ஸ்ருதியே.
    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”,
    “அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
    ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”,
    “வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே”
    என்றெல்லாம் இங்கும் பாடங்கள் உண்டு.
    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்//

    இருந்து என்ன பயன். நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஏட்டளவிலேயே உள்ளது. இன்றளவும் செயலுக்கு வரவில்லையே! தாழ்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை இன்று வரை நின்றபாடில்லையே!

    நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை அற்று.

    ReplyDelete
  23. Anonymous9:34 AM

    நெய்ல் பாலிஷ் போட்டால் சர்க்கரை நோய் தாக்கும்

    வாஷிங்டன் :சென்ட், பாடிஸ்பிரே, நெயில்பாலிஷ் அதிகம் பயன்படுத்தும் பெண்களுக்கு சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வுத் தகவல். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ப்ரிகாம் மருத்துவமனையின் பெண்கள் நலப்பிரிவு சார்பில் டாக்டர் தமரா ஜேம்ஸ் டாட் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

    தேசிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் என்ற பெயரில் ஒரு சர்வே மற்றும் அதனுடன் இணைந்து ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது: 2,350 பெண்கள் சிறுநீர் தொற்றால் அவதிப்படுவது முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தாலேட்ஸ் வகை ரசாயனம் அவர்களது சிறுநீரில் அதிக அளவில் இருந்ததே இதற்கு காரணம் என்பது பல்வேறு பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. தாலேட்ஸ் ரசாயனம் அதிக அளவில் இருந்தவர்கள் சர்க்கரை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர்.

    நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும் தாலேட்ஸ் ரசாயனப் பொருள் மாயிஸ்சரைசர், சோப்புகள், ஹேர் ஸ்பிரே ஆகியவற்றில் உள்ளது. மேலும், நாம் அதிகம் பயன்படுத்தும் பசைப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், விளையாட்டு சாதனங்களில்கூட இந்த ரசாயனம் அதிக அளவில் உள்ளது. நெய்ல்பாலிஷ், பாடி ஸ்பிரே, சென்ட் உள்ளிட்ட பர்ப்யூம்களில் அதிகமாக உள்ளது. தாலேட்ஸ் வகைகளான மோனோ பென்சைல் தாலேட் மற்றும் மோனோ ஐசோபியூட்டைல் தாலேட் ஆகியவை சிறுநீரில் அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    தாலேட்ஸ் அதிகம் உள்ள ரசாயன பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்தினால், நம் உடலில் இவை அதிகம் ஊடுருவும். நாள்பட பயன்படுத்தும்போது சர்க்கரை நோய்க்கு ஆளாகும் அபாயம் உண்டாகும். எனவே, முடிந்தவரை இந்த வகை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அவ்வப்போது முழு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டால், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  24. தங்கமணி!

    //இதுவரை நான் கேட்டு நீங்கள் பதில் தராத கேள்விகளில் இன்னும் ஒன்று ஏறியிருக்கிறது.
    1) அரபி அரபியல்லாதவனை விட மேலானவனில்லை என்று பொருள் வரும் ஹதீஸ் எங்கே?//

    யார் பொய் சொல்கிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு நன்கு தெரியும். அந்த நடுநிலைமையை உங்களிடமோ மலர் மன்னனிடமோ எதிர்பார்க்க முடியாது.

    நான் அனுப்பிய பல பதில்களை சாமர்த்தியமாக திண்ணை நிர்வாகம் எடிட் செய்து தனது நடு நிலையை அழகாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. வாழ்க நடு நிலைமை. ஆனால் அவை அனைத்தையும் எனது பதிவில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன் என்பதையும் திண்ணை நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    http://en.wikipedia.org/wiki/The_Farewell_Sermon
    http://www.islamreligion.com/articles/523/
    http://www.readislam.net/lastsermon.htm
    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
    ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706
    (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

    முகமது நபியின் இறுதிப் பேருரையில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. மிக நீண்ட பேருரையாதலால் பலர் பல தலைப்புகளில் தொகுத்துள்ளனர். முழு உரையும் ஒருவரே தொகுக்கும் அளவுக்கு அன்று எழுதும் வசதிகள் இல்லை என்பதும் நமக்கு தெரியும். எனவே பல நபித் தோழர்கள் சிறு சிறு குறிப்புகளாக அன்றைய தினம் குறித்து வைத்ததை இன்று நாம் ஒரே கோர்வையாக முழு பேருரையையும் தெரிந்து கொள்கிறோம்.

    இப்னுமாஜா 3074, 2712, 3055

    சுனன் நஸயி 4192, 3642

    ஜாமிஉத் திர்மதி 1706, 2120, 2121

    ஸஹீஹ் முஸ்லிம் 2334

    அபு தாவுத் 2870, 3560

    புகாரி 4402

    இவை அனைத்து நபி மொழிகளையும் ஒன்றாக்கினால் முகமது நபியின் கடைசி சொற்பொழிவு நமக்கு கோர்வையாக கிடைக்கும்.

    ReplyDelete
  25. Anonymous8:09 AM

    //அசீமானந்தா, சாது பிரக்யாசிங், புரோகித் இவங்கல்லாம் யாருங்கண்ணா! கொஞ்சம் சொன்னா தேவல.//

    இவர்களிடம் என்ன குற்றம் கண்டீர்கள் சுவனப்ரியன், இந்து மதம் என்ற ஒன்றையே இந்த நாட்டில் இருந்து அழித்து விட்டு, இஸ்லாமை நிலை நாட்ட வேண்டும் என்று குறிக்கோளுடன் ஒவ்வொரு முஸ்லிமும் தாவா செய்து கொண்டு இருக்கும்போது, தங்களால் முடிந்த அளவாவது அதனை காப்பாற்ற வேண்டும் என்று இவர்கள் நினைப்பது தவறு இல்லையே. மதனியும், பாஷாவும் உங்கள் பார்வையில் உத்தம சீலர்களாக இருக்கும்போது அசிமானந்தாவும், பிரக்யாசிங்கும் செய்ததில் எந்த தவறும் இல்லை. அவர்களை ஆதரிக்காமல் போலி மதச்சார்பின்மை பேசி கொண்டிருப்பது தான் மற்ற இந்துக்கள் செய்யும் பெரும் தவறு . வருங்காலத்தில் சொந்த நாட்டில் தனது குல தெய்வத்தை வணங்க முகமதுவின் அடியாட்கள் தடுப்பாக வந்து நிற்கும்போது தான் உங்கள் கூட்டத்திற்கு ஜால்ரா அடிக்கும் சில இந்துக்கள் உண்மை நிலையை உணர்வார்கள். நீங்கள் தாவா செய்து இந்த நாட்டில் மத மாற்றம் செய்வது நியாயம், அதை தடுக்க நினைப்பது அநியாயமா? இந்த ஊத்தை நியாயத்தை சவுதியிலும் அரபு தேசங்களிலும் போய் சொல்ல வேண்டும். அங்கே எடுபடும். அங்கே போய் வேறு மதத்தினர் மத மாற்றம் செய்ய முடியுமா அல்லது பிற மதத்தினர் தங்கள் வழிபாடுகளை செய்ய முடியுமா. முடியாது அல்லவா? இந்த நாட்டில் இன்னும் இந்துக்களுக்கு உள்ளேயே ஒற்றுமை இல்லாததன் காரணம் தான் உங்கள் கூட்டம் அதை பயன்படுத்தி படு கேவலமாக மத மாற்றத்தில் ஈடுபடுவது. செய்வது ஈனத்தனம், அதை நிறுத்த துப்பில்லை. இதில் அசிமானந்தா அப்படி பண்ணிட்டாரு, ப்ரோகித் இப்டி பண்ணிட்டாரு என்று ஊளை கூச்சல்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)