Tuesday, July 31, 2012

தலித் யூனிஃபார்ம் கேள்விப்பட்டிருக்கீகளா?



கௌசல் பென்வார் என்ற தலித் பெண்மணிக்கு தனது இளமைக் காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளை அமீர்கானோடு பகிர்ந்து கொள்வதை இந்த காணொளியில் காண்கிறீர்கள். படிக்கும் பள்ளியிலும் தலித்துகளுக்கு தனி சீருடை கொடுத்து அவர்களை படுத்திய கொடுமையை என்னவென்பது. பள்ளியில் தலித்துகள் தனியாக அடையாளம் காணப்பட வேண்டும் என்ற தீய நோக்கில் அந்த குழந்தைகளுக்கு தனி உடை கொடுத்து சீருடையின் மேன்மையையே குலைத்திருக்கிறார்கள் அந்த மேல்சாதி வகுப்பாசிரியர்கள். சரி. படித்து முடித்து விட்டார். இனியாவது தீண்டாமை என்ற சனியனிலிருந்து விடுபடலாம் என்றால் அங்கு வேறொரு முகத்தில் தனது கோரப் பற்களை காட்டிக் கொண்டு வந்து நின்றால் ஒரு சாமான்யனால் என்ன செய்ய முடியும்? படித்தவர்களிடத்தில்தான் தீண்டாமை அதிகமாக தென்படுகிறது. படித்தவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்..

பல்வந்த்சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு கீழே வேலை பார்த்த ஒரு பிராமணன் இவருக்கு டீ கொடுக்கும் போது தனி குவளையில் கொடுத்தானாம். எவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்தாலும் தீண்டாமை நம் சமூகத்திலிருந்து அகலப் போவதில்லை என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.

மனித கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து பல ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நடைமுறைக்கு வந்தபாடில்லை. சென்னையில் மட்டும் போன வருடம் நூற்றுக்கு மேற்பட்டோர் விஷ வாயு தாக்கியும் மனித மலங்களை அகற்றும் போது ஏற்படும் விபத்துகளாலும் இறந்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. இலவசங்களை வாரி வழங்கும் நமது அரசு இந்த மக்களை காப்பாற்ற ஏன் இயந்திரங்களை வாங்க யோசிக்கிறது? நாட்டு மக்களின் இழி நிலையை போக்குவது அரசின் கடமை அல்லவா?

பிராமணர்கள் தங்களின் நிறத்தாலும் தங்களின் வேலையினாலும் இந்திய மக்களை தாழ்வாக நினைப்பதற்காவது ஒரு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் இந்திய நிறத்தை பெற்றுக் கொண்டு இந்த மண்ணின் மைந்தர்களான அடுத்த தட்டில் உள்ளவர்களும் தலித்துகளை கேவலமாக நினைப்பது அதை விடக் கொடுமையில்லையா? பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, கீழ் வெண்மணி சம்பவங்கள் அனைத்தும் பிராமணர்களால் வரவில்லை. அதற்கும் கீழுள்ள சாதிகளாலேயே தலித்துகள் கொல்லப்பட்டனர். இன்று இலங்கை பிரச்னை இடியப்ப சிக்கலாக மாறியுள்ளது. பொது எதிரியாக ராஜபக்ஷே உள்ளவரை தமிழர்கள் ஒற்றுமையாக உள்ளது போல் நமக்கு தெரிகிறது. தனி ஈழம் கிடைத்தவுடன் அதன் பிறகு எழும் சாதி சண்டைகள் தற்போது உள்ளதை விட மோசமானதாக இருக்கும் என்று மலையக தமிழர் ஒருவர் என்னிடம் சொன்னார். இந்த கொடுமையை எங்கு போய் சொல்வது.


கிறித்தவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கிறித்தவனாக மாறினாலும் தனி கல்லறை: தனி மாதா கோவில்: என்று அனைத்திலுமே அவர்களை தனியாக்கி மிக சரியாக தாங்களும் இந்து மதத்துக்கு சளைத்தவர்களல்ல என்று பெருமிதப் பட்டுக் கொள்கிறார்கள்..

இதில் நம்ம முஸ்லிம்களும் சந்தடி சாக்கில் வட நாடுகளில் தீண்டாமையை கடைபிடிப்பதை பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சொல்லும் போது 'பள்ளிவாசலில் மிகவும் கண்ணியமாக தீண்டாமை பாராட்டாமல் நடந்து கொள்கிறார்கள். பள்ளியை விட்டு இறங்கியவுடன் ஏழை பணக்காரன் வித்தியாசத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம்கள் சாதி வித்தியாசம் பார்க்கிறார்கள்' என்று சொன்னபோது தீண்டாமை பாராட்டும் அந்த முஸ்லிம்களை பார்த்து பரிதாபம்தான் பட்டேன்.

இந்த உலகில் இன பாகுபாட்டை ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் எவனாவது வர்ணாசிரமக் கொள்கையை கடைபிடித்தால் அவன் இஸ்லாத்தை இன்னும் விளங்கவில்லை என்றுதான் அர்த்தம். நல்லவேளையாக தமிழகத்தில் கடந்த இருபது வருடமாக நடந்து வரும் தீவிர தவ்ஹீத் பிரசாரத்தின் வழியாக இஸ்லாமியர் மத்தியில் தமிழகத்தில் தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் வட நாடுகளில் இன்றும் மசூதிக்கு வெளியே தீண்டாமை கடைபிடிப்பதை அனைத்து முஸ்லிம்களும் ஒட்டு மொத்தமாக எதிர்க்க வேண்டும். பள்ளிக்கு இறைவனை வணங்கச் சென்றவுடன் தீண்டாமையை முற்றாக மறக்கும் ஒரு முஸ்லிம் வெளியே வந்தவுடன் ஏன் பார்க்கிறான் என்பதையும் இங்கு நாம் அலச வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள பெரும்பான்மை சமூகமான இந்துக்கள் சாதி வித்தியாசம் பார்க்கிறார்கள். இதை நோட்டமிடும் பாமர முஸ்லிம் நாமும் அப்படி இல்லா விட்டால் நம்மையும் தீண்டத்தகாதவனாக இந்துக்கள் நினைத்து விடுவார்களோ என்று நினைத்து தன்னை உயர்ந்தவனாக காட்டிக் கொள்கிறான்.

இந்துக்கள் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்க காரணம் அவர்களின் வேதங்களும், புராணங்களும், ஸ்மிருதிகளும் சாதி ஏற்றத் தாழ்வை தூக்கிப் பிடிக்கின்றன. எனவே அவர்கள் தீண்டாமையை கடை பிடிக்க வேதத்தை ஆதாரமாக சிலர் காட்டக் கூடும். ஆனால் குர்ஆனும் முகமது நபியின் போதனையும் சாதி ஏற்றத் தாழ்வை காலில் போட்டு மிதிக்கின்றன. எனவே இஸ்லாமியர்கள் இந்துக்களை இந்த விஷயத்தில் காப்பி அடித்து மனித விரோத செயலில் ஈடுபடாமல் குர்ஆன் கூறும் வாழ்வியலுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முகமது நபி எந்த அளவு எளிமையாகவும், எந்த வேலையையும் தாழ்வாக எண்ணாமல் பார்த்ததையும் கீழே வரும் அவரது வரலாறு நமக்கு பாடமாக உணர்த்துகிறது. எனவே இஸ்லாமியரில் எவரும் சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற பரந்த எண்ணத்துக்கு வர வேண்டும். நம்மைப் பார்த்து நமது சகோதரர்களான இந்துக்களும் கிறித்தவர்களும் அவர்களிடம் தவறாக குடி கொண்டுள்ள சாதி வேற்றுமையை ஒழிக்க முன் வர வேண்டும்..

முகமது நபியின் எளிய வாழ்க்கை:

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள். நூல் : அஹ்மத் 23756, 24176, 25039.

தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள். நூல் : தப்ரானி (கபீர்) 12494

மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள்.நூல் : தப்ரானி (ஸகீர்) 41

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். நூல் : புகாரி 3906

இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம் 'மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்' என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். நூல் : புகாரி 2262, 3406, 5453

நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி) நூல் : புகாரி 1502, 5542

இந்த நிகழ்வுகளெல்லாம் தொழிலில் எதுவும் இழிந்த தொழில் இல்லை என்பதை விளக்குவதற்காகவே முகமது நபி செய்திருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்று எண்ண ஆரம்பித்து விட்டாலே அவன் முகமது நபியை அவரது போதனைகளை முற்றாக புறம் தள்ளுகிறான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தீண்டாமை பாராட்டினால் அதனால் பாதிக்கப்படுபவனின் மனம் என்ன பாடுபடும் என்பதை மேலே உள்ள காணொளி நமக்கு அழகாக விவரிக்கிறது. மனிதன் இறைவனுக்கு செய்யும் குற்றங்களை தான் நாடியோருக்கு மன்னிப்பதாக கூறும் இறைவன் ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் செய்யும் கொடுமைகளை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை தானும் மன்னிக்கப் போவதில்லை என்று குர்ஆனில் கூறுகிறான். எனவே நோன்பு, ஹஜ்ஜூ, உம்ரா, தொழுகை, தர்மம் என்று பல நன்மைகளை செய்து வரும் நாம் தீண்டாமையை கடைபிடிக்காமல் இறைவனின் அன்பை பெற முயற்ச்சிப்போமாக!

----------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு 10



11 comments:

  1. இந்தியாவில் முஸ்லீம்களில் தீண்டாமை இருக்கிறதென்பது நாம் இன்னும் இஸ்லாத்தை சரிவர அவர்களுக்கு எத்தி வைக்காமல் இருக்கிறோம். அதை நோக்கி நம் விரல்கள் நீளவேயில்லை. அதற்காக அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகிறோம் என்ற உண்மையை உணர்த்துவதாய் இருக்கிறது.

    இதை அழிக்க என்ன செய்யப் போகிறோம்? நம் சிந்தனையை இதன் பக்கம் நகர்த்தி சிறப்பான முடிவெடுக்க வேண்டும். துவங்கியவர்களுக்கிரிய கூலி இறைவனிடத்தில் மிகப்பெரியது. நாம் துவக்குவோம்.

    ReplyDelete
  2. கிறிஸ்துவர்களால் வாயில் மலம் திணித்த‌ சாதி கொடுமை . அராஜகம்.

    கிறிஸ்தவ ஜாதி சனியன். இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!

    இந்துமதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்குப் போனவர்கள் அங்கும் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள்.

    ஒரே மேய்ப்பனாக ஏசு இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரே மந்தையாக இருப்பதில்லை.

    சாதியற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லி மதம் மாற்றம் செய்யும் கிறிச்துவ சர்ச்சுகளும் மிஷனரிகளும் சாதி அடிப்படையில் வன்முறையை தூண்டிவிட்டு பின்னர் சாதியின் பெய‌ரிலேயே தப்பித்துக்கொள்ளவும் முயற்ச்சி செய்கின்றார்கள்

    என்றுமே தெரியாமல் மறைந்திருக்கும் குற்றப் பிண்ணனியில் உள்ள கிறிஸ்துவ சர்ச்சுகளின் செயல்பாடுகள் இந்த பிரச்சினைகளிலும் வலுவாக தென்படுகின்றது.

    ஊர் இரண்டு பட்டால் ஒண்ட வந்தவனுக்கு கொண்டாட்டம் என்பது போல மேற்க்கத்திய கிறிஸ்துவ நாடுகளின் உதவியோடு ஊருக்குள் நுழைந்து பெரும்பான்மை சமுதாயத்தை மதம் மாற்றம் செய்து ஊர் மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி குளிர் காய்கின்றன சர்ச்சுகளும் மிஷனரிகளும்.


    இங்கே சொடுக்கி >>>> மேலும் படியுங்கள் <<<<<<<

    ReplyDelete
  3. இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும்.

    அதனால்... அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.


    அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும்.

    பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.

    இங்கே சொடுக்கி >>>> மேலும் படியுங்கள் <<<<<<<

    .

    ReplyDelete
  4. ஒரு தாய் மக்கள் நாமென்போம்!

    இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானமும், நாகரீகமும் வளர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொண்டாலும் மனிதர்களிடம் உயர்வு, தாழ்வு காணும் போக்கு பல நாடுகளில் தொடர்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

    மொழியை வைத்தும், இனத்தை வைத்தும் நில ஆதிக்கத்தை வைத்தும் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கடை பிடிக்கப்படுவது உலக நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இந்தியாவில் வித்தியாசமாக ஒரே மொழியை பேசுகிறவர்களும், ஒரே நிறத்தில் இருப்பவர்களும் தங்களை சமமாக கருதாமல் பிறப்பின் அடிப்படையில் ஒரு சிலரை தாழ்ந்த சாதியாக கருதும் போக்கு கோலோச்சி வருவது வேதனையான ஒன்று.

    இரண்டுமே தடுக்கப்பட வேண்டியவைகள் தான்.

    சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்றுவரை சாதீய அடக்குமுறைகள் அடங்கிய பாடில்லை.

    தீண்டாமைக் கொடுமைகள் தலை விரித்தாடுவதை தடுக்க முடியவில்லை.

    பெரியாரும், திராவிட இயக்கங்களும் தொடர்ந்து சாதீயத்திற்கு எதிராக போர்ப் பரணியைப் பாடிய போதும் தமிழகத்தில் சாதீயம் வேர் விட்டு வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

    தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருக்கும் ஆலய நுழைவு மறுப்பும், இரட்டைக் குவளை முறையும் சாதீயம் இன்னும் வீழவில்லை என்பதையும் வலிமை பெற்றிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

    இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு உயர்ப் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் அமர வைக்கப்பட்டனர்.

    சட்டம் இயற்றும் சபைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தது மட்டுமல்லாது, அமைச்சர்களாக, மாநில முதல்வர்களாக, ஏன் நாட்டின் முதல் குடிமகன் எனப்படும் ஜனாதிபதி பதவி வகிக்கும் வகையில் உயர்வு பெற்றனர்.

    இந்த வளர்ச்சிகளின் காரணமாக பொருளாதார ரீதியாக, பதவி ரீதியாக உயர்வு பெற்றாலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதீய ரீதியாக தீண்டத் தகாத நிலையிலிருந்து எந்த வித உயர்வும் ஏற்படவில்லை.

    நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற உயர் பதவி வகித்த ஜெகஜீவன் ராம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவர் திறந்து வைத்த காந்தி சிலை கங்கை நீரால் கழுவப்பட்டது.

    பீகார் மாநிலம் பாட்னா நகரில் நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீதிபதி வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் அமர்ந்த நாற்காலியில் உயர்சாதி நீதிபதி அமர்ந்தால் தீட்டு ஏற்படும் என்று கூறி நாற்காலி கழுவப்பட்டது.
    நீதிமன்றம் முழுவதும் தண்ணீரால் சுத்தப்படுத்தும் சடங்கு நடைபெற்றது.

    தனித் தொகுதிகளில் வெற்றி பெற்றதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களில் சிலர், ஆதிக்கச் சாதியினரான துணைத் தலைவர்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் சோக நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் இப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்த உரிமைப் போராட்ட முடிவுகளும் பெரிய அளவில் எந்த வித பிரயோஜனத்தையும் ஏற்படுத்த வில்லை.

    பிறப்பினால் உயர்வு - தாழ்வு கற்பித்த இந்து மதத்தில் இனி மேலும் நீடிக்கக் கூடாது என்று வேறு மதத்திற்கு மாற வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்த முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது.

    புத்த மதத்திற்கு செல்வோம் என்று முடிவெடுத்தார்கள். அங்கும் சாதீய ரீதியான ஏற்றத் தாழ்வு!

    தொடர்ந்து சீக்கிய மதத்திற்கு மாறிய போதும் சாதீய தாழ்வு அவர்களை விட்டு விலகவில்லை.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய போதும் சாதீயம் அங்கேயும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியது.


    ஆக மதங்கள் மாறின. கடவுள் சிலைகள் மாறின. ஆனால் சாதீயத்தின் ஆதிக்கம் மட்டும் மாறவில்லை. தீண்டாமை தீ அணையவில்லை.

    ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சிலருக்கு இந்த சாதீய அவமானத்திலிருந்து விடுதலை கிடைத்ததை மறுக்க முடியாது.

    அவர்கள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று முஸ்லிம்களாக மாறியதால் ஏற்றம் பெற்றார்கள்.


    மற்ற மதங்கள் சாதீயத்தை அசைத்துப் பார்க்க முயற்சித்துக் கொண்டு இருக்கின்றன.

    ReplyDelete
  5. ஒரு தாய் மக்கள் நாமென்போம்!

    ஆனால் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் - தந்தையருக்குப் பிறந்தவர்கள்;

    பிறப்பினால் யாருக்கும் எந்த வித உயர்வு - தாழ்வும் இல்லை என்ற பிரகடனத்தை அறிவித்து சாதீய மடமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.


    மனிதர்களே! உங்களை ஓர் ஆண் - பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன். - (அல்குர்ஆன் 49:13)

    மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையை படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். -- (அல்குர்ஆன் 4:1)

    மேற்கண்ட இறை வசனங்கள் சாதீயத்தின் ஆணி வேரையே அறுத்தெறிந்து விட்டது.

    இதன் காரணமாகத்தான் இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து என பெரியார் அறிவித்தார்.

    சாதீய ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டும், மனிதர்கள் சமமாக நடத்தப்பட வேண்டுமென்றால் மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்,

    பிறப்பினால் உயர்வு - தாழ்வு இல்லை, மக்கள் அனைவரும் சமம் என்ற உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் இஸ்லாத்தை நோக்கி அணி வகுப்பதே சிறந்த வழி!

    THANKS TO SOURCE: KEETRU.COM http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20357:2012-07-04-17-13-12&catid=1485:2012&Itemid=727
    ---------------------------

    இன்றும் மதுரை மாவட்டத்தில், 149 கிராமங்களின் டீக்கடைகளில் இரட்டைக் குவளைகள் நடைமுறையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வை மேற்கொண்ட, மதுரை, "எவிடன்ஸ்' நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :ஒரு மாதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வுக்கு எடுக்கப்பட்ட, 149 கிராமங்களில், 463 டீக்கடைகளில், இரட்டை டம்ளர் முறை, தற்போதும் உள்ளது.

    இதில், 131 கிராமங்களில், இரு சமூகத்தினருக்கு, தனித் தனி டம்ளர் கொடுப்பதும், 12 கிராமங்களில், ஒரே டம்ளர்களை, இரு சமூகத்தினருக்கு தனித்தனியாக வைப்பதும் தொடர்கிறது. ஒன்பது டீக்கடைகளில், குறிப்பிட்ட சமூகத்தினர், டம்ளர்களை சுத்தப்படுத்தி வைக்கின்றனர்.

    67 கடைகளில், தனித் தனி இருக்கைகளும் உண்டு.

    டீக்கடைகளில் மட்டுமல்ல; ஓட்டல், சலூன், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடியில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என்னதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவர்கள் மீதான சாதிய முத்திரை மட்டும் அகல்வது போல் தெரியவில்லை.

    இதனால்தான் சமூக நீதிக்காக சம உரிமைக்காக போராடிய பெரியார் அவர்களே ஒரு கட்டத்தில், 'இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து'' என்ற கருத்தை முன் வைத்தார்.

    ஆம். இஸ்லாம் ஒன்றுதான் ஒருவனது பழைய முகவரியை மாற்றி முஸ்லிம் என்ற ஒரே முகவரியைத் தர வல்லது என்பதை பெரியார் உணர்ந்திருந்தார்.

    ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவிய அடுத்த நொடியே பரம்பரை முஸ்லிமின் சகோதரனாகி விடுகின்றான்.

    இவன் நேற்றுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவனாயிற்றே; இவனுடன் நமக்கென்ன உறவு என்று எந்த முஸ்லிம்களும் நினைப்பதில்லை.

    மாறாக அவனோடு ஒரே தட்டில் உண்டு உறவாட இன் முகத்துடன் முன்வருவார்கள்.

    இந்த பக்குவத்தை இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது.

    ஏனென்றால் இஸ்லாம் பிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமல்ல. மாறாக மனிதனின் வாழ்வின் அடிப்படையை வைத்து, அவன் இறைவனுக்கு அஞ்சும் தன்மையை வைத்தே அவனை சிறந்தவன் என்று சொல்லும் மார்க்கம்.

    அம்பேத்கரே இந்துமத தீண்டமையினால் வெறுத்து, பல்லாயிரம் மக்கள் சகிதமாக புத்தமதம் தழுவினார்.

    ஆனாலும் அம்பேத்கார் எதிர்பார்த்த அந்த சுயகவுரத்தை புத்தமதம் வழங்கிவிடவில்லை.

    அதனால்தான் இன்றும் அந்த இழிவு நீங்கவில்லை.

    அதே நேரத்தில் பெரியாரின் அறிவுரைப்படி இஸ்லாத்தில் இணைந்த பட்டியின மக்கள் இன்று தங்களின் பழைய பாரம்பரியம் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவர்கள் இழிவிலிருந்து நீங்கி, கவுரவத்துடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்கிறார்கள்.

    எனவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீராத இந்த இழிவை ஒரு நொடியில் நீக்கும் அருமருந்தான இஸ்லாத்தை நோக்கி வாருங்கள். இன்முகத்தோடு வரவேற்கிறோம்.

    இங்கே சொடுக்கி >>>
    ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது
    <<< மேலும் படியுங்கள்
    .
    .

    ReplyDelete
  6. சலாம் சுல்தான் பாய்!

    //இதை அழிக்க என்ன செய்யப் போகிறோம்? நம் சிந்தனையை இதன் பக்கம் நகர்த்தி சிறப்பான முடிவெடுக்க வேண்டும். துவங்கியவர்களுக்கிரிய கூலி இறைவனிடத்தில் மிகப்பெரியது. நாம் துவக்குவோம்.//

    நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். தீண்டாமையைப் பொறுத்த வரை மற்ற சமூகங்களுக்கு நாம் எத்தனையோ சதவீதம் சிறப்பாக சம நிலையை கடை பிடிக்கிறோம். ஆனால் இது போதாது. முற்றாக சமதர்ம சமூக நிலையை கொண்டு வர இன்னும் உழைக்க வேண்டும். அதற்கு முறையான இஸ்லாமிய பயிற்சி நம்மவர்களுக்கு அளிக்க வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. சகோ உண்மைகள்!

    //அதே நேரத்தில் பெரியாரின் அறிவுரைப்படி இஸ்லாத்தில் இணைந்த பட்டியின மக்கள் இன்று தங்களின் பழைய பாரம்பரியம் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவர்கள் இழிவிலிருந்து நீங்கி, கவுரவத்துடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்கிறார்கள். //

    சிறப்பான பல சுட்டிகளை தொடர்ந்து அளித்து பதிவை மேலும் மெருகூட்டுகிறீர்கள். வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. salaam,

    தீண்டாமை என்னும் நோய்க்கு மருந்தே இஸ்லாம் தான் ...இதை சமீபகாலமாக மக்கள் நன்கு உணர்ந்திருப்பதினால் தான் இஸ்லாத்தை நோக்கி மக்களின் கூட்டம் ஓடிவருகிறது.


    புதிய வரவு:

    விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்

    read more-http://tvpmuslim.blogspot.in/2012/08/ban-vijay-tv-program-cinema.html

    ReplyDelete
  9. சலாம் சகோ திருவாளப்புத்தூர்!

    //தீண்டாமை என்னும் நோய்க்கு மருந்தே இஸ்லாம் தான் ...இதை சமீபகாலமாக மக்கள் நன்கு உணர்ந்திருப்பதினால் தான் இஸ்லாத்தை நோக்கி மக்களின் கூட்டம் ஓடிவருகிறது.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. Anonymous6:29 AM

    Kavya says:
    August 1, 2012 at 7:56 am

    நான் உங்களுக்கு எழுதிய பதில் தடைசெய்யப்பட்டு விட்டது. எனவே அதையே வேறுவிதமாக எழுதுகிறேன்.

    நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுப்போடுகிறீர்கள். இங்கு பேசப்படுவது எப்படி ஒரு ஜாதியினருக்கு மட்டும் அர்ச்சகராகலாம் என்று சொல்லப்படுகிறது அல்லது செய்யப்படுகிறது என்பதே. அந்த ஒரு ஜாதியினரிலும் ஒரு சிலர்தான் என்றால், அந்தச்சிலர் தகுதியின் அடிப்படையிலா? வாரிசினடிப்படையிலா?

    கண்டிப்பாக வாரிசுதாரகளாகத்தான் வருகிறார்கள். ஒரு கோயில் அர்ச்சகர், அவருக்குப்பின் அவர் பிள்ளைகளில் ஒருவனையாவது அவர் தொழிலில் இறக்கிவிடுகிறார்.

    அவருக்கோ அல்லது அவர் பிள்ளைக்கோ என்ன தகுதிகள் இருக்கின்றன அல்லது இருந்தன என்று எந்த பக்தர்களுக்கும் தெரியாது. மிகவும் மோசமானவர் என்று வெட்ட வெளிச்சமாகத்தெரிந்தாலொழிய அக்கோயில் நிருவாகத்தினர் அந்த அர்ச்சகரை வெளியேற்ற முடியாது.

    நான் ஏற்கனவே திண்ணையில் எழுதிவிட்டேன். திருப்பரங்குன்றத்தில் ஒரு அர்ச்ச்கர் பெண்ணுடன் சல்லாபித்ததை நேரில் கண்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நீக்கம் செய்யப்பட்டார். நேரில் எவரும் காணவில்லையென்றால்? அல்லது பெண் சல்லாபம் மட்டும்தான் தடையா? பலபல குணக்குறைகள் இருக்கலாமில்லயா? அவை எப்படி வெளியே தெரியும்? தெரியா.

    அக்கோயிலின் அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக. அங்கிருப்பவர்கள் எல்லாரும் மகேசன் சேவையென்று இல்லை. பரம்பரைத்தொழில் எனவேதான் அத்தொழிலை விடமறுக்கிறார்கள்.

    ஆக, ஒரு தொழிலுக்கு தகுதியிருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் நாம் ஒரு ஜாதியினரைத் தேர்ந்தெடுக்கின்றபடியாலே, காஞ்சிபுரம் தேவநாதன் போன்ற கசப்பான சம்பவங்கள் நேரிடுகின்றன.

    மாறாக, எவராகினும் சரி, அவருக்கென்று சில அடிப்படைத் தகுதிகள் இருக்கவேண்டுமென நிர்ணயித்து அதன்படி செயல்பட்டால், சமத்துவம் மட்டுமன்றி, கோயில்களில் புனிதத்தன்மையும் காப்பாற்றப்படும் என்பதே இந்துமதத்துக்கு நாம் செய்யும் பெருஞ்சேவையாகும்.

    எடுத்துக்காட்டாக இத்த‌குதிக‌ளை எதிர்பார்க்க‌லாம்:

    1. இன்துவாக‌ இருக்க‌வேண்டும‌ட்டும‌ன்றி, அதில் நம்பிக்கையுட‌ன் அக்க‌ட‌வுள், அல்ல‌து க‌ட‌வுள‌ர்க‌ளை ம‌ட்டுமே தொழுப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும்.
    2. வைதீக‌ ம‌த‌த்தை ஏற்றுக்கொண்டு, அதே ச‌ம‌ய‌ம் தொல் த‌மிழ‌ர் இன்துவ‌ழிபாட்டு முறைக‌ளையும் ம‌தித்துப்போற்றுப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும். (இன்த‌ இர‌ண்டாவ‌தில் த‌மிழ்ப்பார்ப்ப்ன‌ர்க‌ள் செய்வ‌தில்லை)
    3. சைவ‌த்திலிருன்தால், த‌மிழ் திரும‌றைக‌ளை ந‌ன்கு க‌ற்றுத்துறைபோகிய‌னாக‌வும், அதை நாளும் தொழுதுப‌டிப்ப‌வ‌னாக‌வும், பிற‌ருக்குஞ்சொல்ப‌வ‌னாக‌வும் இருக்க‌வேண்டும்.
    4. வாழ்க்கைச்சுக‌ங்க‌ளை நுக‌ர‌த்துடிப்ப‌வானாக‌ இல்லாம‌ல், சிறுக‌க்க‌ட்டி பெருக‌ வாழ்ப‌வனாக‌ இருக்க‌வேண்டும்.
    5. பெண்ணை ம‌தித்துப்போற்றுப‌னாக‌ இருக்க‌ வேண்டும். இர‌க்க‌ சுபாவமுள்ள‌வான‌க‌வும் சான்த‌ குண‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்க‌வேண்டும்.

    ReplyDelete
  11. Anonymous6:30 AM

    Kavya says:.....

    6. வைண‌வ‌த்திலிருன்தால் ஆழ்வார்க‌ளில் பாசுர‌ங்க‌ளில் ஆழ‌ங்கால்ப‌ட்ட‌வனாக‌வும், அவ‌ற்றை நாளும் பாராய‌ண‌ம் ப‌ண்ணுப‌வ‌னாக‌ இருக்க‌ வேண்டும். ஆச்சாரிய‌ர்க‌ளைத் தொழுப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும். திருமாலின் அனைத்துஅவ‌தார‌ங்க‌ளையும் இதிகாச‌ங்க‌ளையும் போற்றித்துதிப்ப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும்.

    இவைய‌னைத்தும் அவ‌னுக்கு முத‌லில் இருன்த‌ பின்ன‌ர், அர்ச்ச‌க‌ர் ப‌யிற்சி நிலைய‌த்தில் சேர்ன்து அப்ப‌யிற்சியைப்பெறுப‌வ‌னாக‌ இருக்க‌ வேண்டும்.

    Daunting list, isnt? ஆனால் நீங்கள் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டால், நான் கூறிய அனைத்துத்தகுதிகளும் (இதற்கு மேலும் தகுதிகள் வரும்!) இருந்துவிடும் முடிவு செய்வது எங்ஙனம் சுவாமி? இன்றைய வாழ்க்கையில் எவரேனும் அப்படி நீங்கள் கண்டதுண்டா? ஒரிருவர் இருக்கலாம். அப்படி அங்கு இருந்தால், பிறஜாதியிலும் இருப்பரே?

    நாம் ஏன் நம் வலையை அகலமாக வீசக்கூடாது? சமத்துவம் என்பதன்று இங்கு விவாதம். இந்துமதம் சிறக்கவேண்டின் தகுதிகளா அல்லது பரம்பரையாக வந்த தேவநாதன்களா என்று முடிவு செய்யவேண்டும்.

    சித்தர்கள் ஒர் மாட்லி க்ரவுட். (motley crowd): பலஜாதிகள், பல தொழில்கள். பல ஊர்களிலிருந்து வந்தார்கள். அதே ஆழ்வார்களிடையேயும். பலஜாதிகள், பல தொழில்கள், பல ஊர்கள். நாயன்மார்கள் கதைகளும் அதே. இல்லையா? அங்கு எங்கே போனது உங்கள் சாஸ்திரங்கள்?

    இறுதியாக, நான் எழுதினால் தடை செய்யப்படும். அவரே சொல்லட்டும்.


    சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்

    சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

    சாத்திரம் சொல்லிடுமாயின் – அது

    சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

    If I write the above, it will be banned as words against a community. But these harsh words came from Subramania Bhrati. I apply it here, because it is citing the Shastras that people like Vedam Gopal feel that only one community i.e Tamil Brahmins should do archanai.

    When the shastra posed obstacles for reforms in the religion, they were just ignore. Similarly, we should override it (I dont want to use the harsh word for such rejection as the disgruntled poet did) and bring archakas who are dedicated, but may even be from the lowest caste of Dalits.
    Reply

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)