Thursday, December 20, 2012

பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!

பாடகி நித்யஸ்ரீயின் கணவர் தற்கொலை!



அதிர்ச்சியான செய்தி. ஒரு முறை கும்பகோணத்தில் இவரது கசசேரியை நேரிலேயே கேட்டிருக்கிறேன். மிகவும் வசீகரமான குரல். அந்த பாடல்களுக்கு ஏற்றவாறு இவரது முக பாவனைகளும் மிக சிறப்பாக இருக்கும். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் திடீரென இப்படியொரு சோகம்.



மனிதனுக்கு பணம் மட்டுமே வாழ்வில் நிம்மதியைக் கொடுத்து விடாது என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் நமக்கு பாடமாக அமைகின்றன. தங்கள் குழந்தைகளை நாட்டியத்திலும், சினிமாவிலும் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனேகம் பேரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. இது போன்ற கலைஞர்களின் வாழ்வு வெளி உலகுக்கு பகட்டாக தெரிந்தாலும் உள்ளுக்குள் மிகப் பெரிய போராட்டங்களையே அனேகர் நடத்தி வருகின்றனர்.

இவர் சினிமாவில் பாடுவதும், கச்சேரி என்று பல நாடுகள் சுற்றுவதும் கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதுதான் முக்கிய காரணம் என்றும் செய்திகள் கூறுகின்றன. தனது தாயாரின் இறப்பை தாங்கிக கொள்ள முடியாமல்தான் தற்கொலையை நாடினதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. அதற்காக தற்கொலை முடிவு என்பது கோழைத்தனமானது. மனைவியை அன்பாக திருத்த முயற்சித்திருக்கலாம். ஒரு சிறந்த பாடகியின் வாழ்வில் திடீரென புயல் வீசி உள்ளது.

ஆழந்த அனுதாபங்கள்.



----------------------------------------------------

குஜராத் தேர்தலில் பணம் கொடுத்து ஊடங்களில் செய்தி:பிரச்சனையை கையில் எடுத்த கட்சு!

குஜாரத்தில் தேர்தலில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் அரசியல் வாதிகள் பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிட வைத்தாகவும் பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனக்கு புகார் வந்ததும் இதை விசாரிக்க “உண்மை கண்டறியும் தனிக் குழுவை” அமைத்து அவர்களை இது குறித்து விரிவாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்சு உத்தரவிட்டுருந்தார்.

பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இது குறித்து விசாரித்து முதல் கட்ட தகவலை கடந்த 17-12-2012 அன்று கட்சு அவர்களிடம் தெரிவித்துள்ளது.

பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு அவர்கள் இது குறித்து கூறுகையில்:

”பத்திரிக்கை ஊடகங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களும் இதில் பெருமளவு ஈடுபட்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு குஜராத் தேர்தலில் அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது” என பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் என்னிடம் முதல் கட்ட அறிக்கை அளித்துள்ளார்.

எனினும் இந்த புகார் குறித்த முழுமையான அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அது விரைவில் என்னிடம் சமர்பிக்கப்படும், முழு அறிக்கை எனது கைக்கு வந்ததும், தேர்தல் ஆணையத்திற்கு ”பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்த அனைத்து அரசியல் வாதிகளின் கேட்டிடேட்களையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப் போகின்றேன். சமீபத்தில் உபி தேர்தலில் ரத்து செய்யப்பட்டது போன்று!' எனக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளிடமும் இது குறித்து பேசவிருக்கின்றேன் என தற்போது கட்சு கர்ஜித்துள்ளார்.

கட்சு ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அவர் எவ்வளவோ பெரிய ஆளாக இருந்தாலும் அவரை ஆட்டம் காண வைத்து விடுவார் என்பது மஹாராஷ்ட்ர முதல்வர் சவான் விசயத்தில் அனைவரும் அறிந்ததே!


தற்போது மோடியை திரும்பவும் முதல்வராக்கியிருக்கின்றனர் குஜராத் மக்கள். போன தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்க வேண்டும். இடங்களும் குறைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு எதிராக முழு ஊடகத்துறையும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதின. அதே போல் மோடியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளின. இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து காங்கிரஸ் முன்பை விட தற்போது அதிக இடங்களையும், அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது ஆச்சரியமான ஒன்றுதான். இமாசல பிரதேசத்தில் பிஜேபியை வீட்டுக்கு அனுப்பி விட்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையும் கவனிக்க வேண்டும்.

குஜராத்தில் மோடியின் வெற்றி குறித்து சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ளது; இந்த தேர்தலில் மோடியும், பா.ஜ.,வும் 117 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளன; ஒருவேளை பா.ஜ., 93 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அங்கு நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்போம்; மோடி, காங்கிரசை மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே வென்றுள்ளார்; ஆகையால் அது உண்மையான வெற்றி அல்ல. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அடுத்து மோடி தனது இந்துத்வா அஜெண்டாவை தூர வைத்து விட்டு முஸ்லிம்களை அரவணைக்க துவங்கியுள்ளார். இர்ஃபான் பதானையும் கூடவே பிரசாரத்துக்கு அழைத்துச் சென்றதையும் நோக்க வேண்டும். இனி வருங்காலங்களில் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக நடந்து கெட்டு போன தனது பெயரை சரி செய்ய முயல்வாராக!

இந்துத்வா இந்த நாட்டை தூக்கி நிறுத்தி விடும் என பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் இந்த நாட்டுக்கு எதிராக குண்டு வெடிப்புகளையும் அப்பாவி மக்களை கொல்வதிலும் முன்னுக்கு நிற்பது இந்துத்வா ஆட்களே என்பதை சமீபத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு கைதுகளும், ஹைதரபாத் குண்டு வெடிப்பு கைதுகளும் நமக்கு உறுதிபடுத்துகின்றன. எனவே இந்த நாட்டின் முதல் அச்சுறுத்தல் இந்துத்வா என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. நாட்டு நலனில் உண்மையிலேயே மோடிக்கு அக்கறை இருந்தால் இந்துத்வா வாதிகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தொடங்க வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது. நமது நாட்டுக்கும் நல்லது.

33 comments:

  1. thakavalkalukku nantri!

    ReplyDelete
  2. இரண்டு விஷயங்களை மிக அற்புதமா சொல்லிருக்கிங்க சொன்னவிதம் அருமை, தற்கொலை முயற்சி மிகவும் கோழைத்தனமானது என்றாலும், இதில் மர்மம் அடங்கி இருப்பதாக தகவல். பாசம் அதிகம் வைத்திருக்கும் ஒருவர் தவறு செய்தால் அதை கண்டித்து அடித்து துன்புறுத்தும் மனமில்லாததால் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்பவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் நண்பரே! இன்னும் கொஞ்ச நாளில் பல உண்மைகள் வெளிவரும்.

    ReplyDelete
  3. அஸ் ஸலாமு அலைக்கும் பாய், மாஷா அல்லாஹ், வழக்கம் போல அருமையான பதிவு.

    //நாட்டு நலனில் உண்மையிலேயே மோடிக்கு அக்கறை இருந்தால் இந்துத்வா வாதிகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தொடங்க வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது. நமது நாட்டுக்கும் நல்லது. //
    ம்ம்... அப்படி என்றால் முதல் டிக்கெட்டே மோடிக்குத்தான் போலத் தெரிகிறது :)) எனிவே.... உண்மையிலேயே நாட்டு நலனை எண்னினால் நல்லதுதான்.... பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ். :)

    ReplyDelete
  4. சுவனம் நாட்டில் ஒரு நல்லது நடந்தால் உங்களுக்கு பிடிக்காதே. முதலில் உங்கள் நாடான பாகிஸ்தானில் ஆரம்பிங்க. முதலில் மதவாதத்தை அகற்ற வேண்டியது பாகிஸ்தானில்

    ReplyDelete
    Replies
    1. Sankara un moolaye thani . ean muslimgalai thunpuruthugirai endru kettal pakkathu veetil payavaikiran edhir veetil kari samikran maadi veetil thuni thuvaikiran ayyayyo hindustanathukku aabathu pakisthanai paar tholugiraan nonbu vaikiraan indhyavukke aabathu , pakisthan oru muslim naadu madayane angu muslimgalulku thaan munmurimai indhiya hindhukkal naada adhai pakirangamahe advaniyum modiyum stattapadi adhigara poorvamage arivikka thayara indhiya himdukkal naada jananayage naada. Nee badhil solla maattaai sankara naan solgiren kettukol india is an union , and india is not a nation but it is a country which has a bunch of nationalities satte medhai Ambedkar sonna vaarthaigal ivai unnal mudindhaal indha indhiya adippadai arasiyal amaipu sattathai maatri eluthu naangal pakisthanai patri parkalam

      Delete
  5. சகோ செம்மலை ஆகாஷ்!

    //இரண்டு விஷயங்களை மிக அற்புதமா சொல்லிருக்கிங்க சொன்னவிதம் அருமை, தற்கொலை முயற்சி மிகவும் கோழைத்தனமானது என்றாலும், இதில் மர்மம் அடங்கி இருப்பதாக தகவல். பாசம் அதிகம் வைத்திருக்கும் ஒருவர் தவறு செய்தால் அதை கண்டித்து அடித்து துன்புறுத்தும் மனமில்லாததால் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்பவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் நண்பரே! இன்னும் கொஞ்ச நாளில் பல உண்மைகள் வெளிவரும்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  6. சகோ சீனி!

    //thakavalkalukku nantri!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. சகோ உம்மு உமர்!

    வஅலைக்கும் சலாம்!

    //ம்ம்... அப்படி என்றால் முதல் டிக்கெட்டே மோடிக்குத்தான் போலத் தெரிகிறது :)) எனிவே.... உண்மையிலேயே நாட்டு நலனை எண்னினால் நல்லதுதான்.... பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ். :)//

    நல்லதே நடக்க வேண்டும். பார்ப்போம் பொருத்திருந்து.

    ReplyDelete
  8. ஜெய்சங்கர்!

    //சுவனம் நாட்டில் ஒரு நல்லது நடந்தால் உங்களுக்கு பிடிக்காதே. முதலில் உங்கள் நாடான பாகிஸ்தானில் ஆரம்பிங்க. முதலில் மதவாதத்தை அகற்ற வேண்டியது பாகிஸ்தானில்//

    தற்போதய பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்கள் என்ற விபரம் தெரியுமோ? அனைவரும் இந்து மதத்திலிருந்து மதம் மாறியவர்கள். இந்து மத புராணங்கள் குறிப்பிடும் இடங்கள் அதிகமாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறது. முஸ்லிம்களை விட இந்துக்களுக்கே அந்த இடங்களில் அதிக உரிமை இருக்கிறது. எனவே இனிமேல் உங்க பாகிஸ்தான் என்று சொல்லாமல் நம்ம பாகிஸ்தான், நம்ம ஆப்கானிஸ்தான் என்று சொல்லனும், புரியறதா! :-)

    ReplyDelete
  9. //பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் பார்ப்பனர்கள் என்ற விபரம் தெரியுமோ? //
    உங்களுக்கு காமடி நல்லா வருது. ஆதாரம் குடுங்க. பாகிஸ்தான் ஒரு மதவாத நாடு. அதுல போய் மத நல்லினக்கம் பத்தி பேசி பாருங்க

    ReplyDelete
  10. திரு மலர் மன்னன்!

    //இஸ்லாத்தில் மதச் சம்மதத்துடனான விபசாரத்திற்கு அளிக்கப்படும் மறுபெயர்தான் திருமணம். எதுபற்றியும் சரியாகத் தெரிந்துகொள்ளாமலே எல்லாம் தெரிந்ததுபோல் விமர்சிப்பவர்களுக்கும், தவறைச் சுட்டிக் காட்டியபிறகும் வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரிகம்கூடத் தெரியாதவர்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது கால விரயம்.//

    எப்படி...கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற போர்வையில் இளம் பெண்களை கோவிலுக்கு நேர்ந்து விடுவதும், பிறகு அந்த பெண்களை கோவிலில் உள்ளவர்கள் உபயோகித்துக் கொள்வதும், அந்த பெண்கள் தேவரடியாள் என்ற பட்ட பெயரோடு சமூகத்தில் ஓரங்கட்டப்படுவதுமாக எனது நாட்டில் இளம் பெண்கள் நரகில் தள்ளப்படுகிறார்களே! இதற்கு காரணமானவர்கள் அல்லவா சமூகத்தில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அந்த பெண்களை சமூகத்தில் இரண்டற கலக்கச் செய்ய வேண்டும்?

    பொட்டு கட்டி விடும் பழக்கத்தினால் தஞ்சையில் இன்றும் அந்த குடும்பங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றன. நேபாளத்தில் இன்றும் பொட்டு கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அதை தடுக்க மலர்மன்னன், தங்கமணி, ஸ்மிதா போன்றவர்கள் முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  11. //இவர் சினிமாவில் பாடுவதும், கச்சேரி என்று பல நாடுகள் சுற்றுவதும் கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதுதான் முக்கிய காரணம் என்றும் செய்திகள் கூறுகின்றன//

    தயவு செய்து உங்களுக்கு சரியா தெரியலனா எதுவும் சொல்லாதீங்க. அவர் கடந்த ஐந்து வருஷமாவே மன உளைச்சல்ல இருக்கறதா தான் செய்திகள் வந்திருக்கு.

    ReplyDelete
  12. //தயவு செய்து உங்களுக்கு சரியா தெரியலனா எதுவும் சொல்லாதீங்க. அவர் கடந்த ஐந்து வருஷமாவே மன உளைச்சல்ல இருக்கறதா தான் செய்திகள் வந்திருக்கு.//

    தற்கொலை செய்து கொள்ளும் முன் யாருடனோ மிகவும் ஆக்ரோஷமாக செல் போனில் பேசியுள்ளார். அதன் பிறகுதான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது கூட இருந்த ஓட்டுனர் கொடுத்த தகவல். யாருடன் பேசினார் என்ற விபரம் தெரிந்தால் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும். நானும் உறுதிப்படுத்தப்படாத செய்தியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன். தற்போது விசாரணை நடந்து வருகிறது. பிறகுதான் உண்மை தெரிய வரும்.

    ReplyDelete
  13. Anonymous2:47 AM

    மேலும், நித்யஸ்ரீயின் குடும்ப நண்பர்கள் சிலரையும் போலீசார் விசாரித்ததில், நித்யஸ்ரீக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு வருவதாகவும், மேலும் நித்யஸ்ரீயின் இசை நிகழச்சிகள் மகாதேவனின் அனுமதி இல்லாமல் நடக்கக்கூடாது என்று அவர் எச்சரித்ததாகவும் கூறினார்கள். எனவே, இதன் காரணமாக மகாதேவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகே தெரியும் என்று செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், பிரேத பசிசோதனைக்கு பிறகு மகாதேவனின் உடல் அவரது குடும்தாரிடையே ஒப்படைக்கப்பட்டது. நேற்று இரவே தேனாம்பேட்டை சுடுகாட்டில் மகாதேவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=34632

    ReplyDelete
  14. PART 1. வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.

    இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

    சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25
    - VINAVU

    <‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை. அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”
    - பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.

    தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்.

    ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல.

    இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம். பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

    இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை. மறுப்பவர்கள் தேசத் துரோகிகள்.

    பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும்.

    அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.

    70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம்.

    ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.

    இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா,

    ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.


    வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.

    திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும்.

    ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை.

    பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது.

    அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது.

    கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

    அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன.

    CONTINUED…

    ReplyDelete
  15. PART 2. வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.

    இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

    சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25
    - VINAVU

    அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது.
    இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன?

    கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.

    இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.

    தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன்.

    காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே.

    தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.

    இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்;

    போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்;

    மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான்.

    இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான்.

    மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.

    இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது.

    எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது.

    மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.

    ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.

    இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.

    பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.

    பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.

    ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.

    பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.

    ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

    CONTINUED ….

    ReplyDelete
  16. PART 3. வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.

    இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

    சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25
    - VINAVU

    அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

    ‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.

    இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.

    ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

    “நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.

    மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

    “நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.

    நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.

    இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.

    அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

    இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;

    இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும்.

    பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;

    மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.

    மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.

    ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.

    இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

    பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!

    என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.


    பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.

    தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும்.

    பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.

    இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது.

    பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள்.

    ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

    CONTINUED ….

    ReplyDelete
  17. PART 4. வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.

    இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

    சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25
    - VINAVU

    மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.

    தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள்.

    வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.

    இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது?

    முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல.

    ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன?

    தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்;

    திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்;

    தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்;

    மீண்டும் அயோத்தியை ஆண்டான்.

    இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான்.

    போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம்.

    ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?

    ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல.

    இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்!

    ARTICLE COPIED FROM SOURCE: http://www.vinavu.com/2012/12/21/conversion-25/

    THANKS TO VINAVU.COM

    ReplyDelete
  18. //இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்!//

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    ReplyDelete
    Replies
    1. Aamam sankara nee kaludhai dhane adhanal dhan unakku unmai manappadhillai

      Delete
  19. //நாட்டு நலனில் உண்மையிலேயே மோடிக்கு அக்கறை இருந்தால் இந்துத்வா வாதிகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தொடங்க வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது. நமது நாட்டுக்கும் நல்லது//

    உண்மைதான் மத வெறி பிடித்தவர்களால் என்றுமே நாட்டுக்கு கெடுதல் தான், அப்படி பார்த்தால் என்மதமே உயர்ந்தது மற்றவர்கள் எல்லாம் காபிர்கள், காபிர் மதம், என்று உச்ச கட்ட மத வெறியுடன் ஒரு கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது, அந்த கூட்டத்தையும் சேர்த்து நாட்டை விட்டு விரட்டி அடித்தால் நாடு நலம் பெறும்

    ReplyDelete
  20. //பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.//

    இது தவறு. அவர் கட்டயமாக உடன்கட்டை ஏறுவதைத்தான் தவறு என்று சொன்னார்

    ReplyDelete
  21. ஏப்ரலில் இறந்த தாயாரின் துக்கம் தாங்காமல்... டிசம்பரில் தற்கொலையா..? எப்படி..?

    நடுவிலே கொஞ்சம் அத்தியாயத்தையே காணோம்..!

    அப்புறம், கூவத்தில் சடலத்தை தேடி எடுக்கும் முன்பே சற்று நேரத்தில் வீட்டுக்கு போய் விட்டாராமே..?

    இருந்தும்... கதை புரிகிறதே..!

    ReplyDelete
  22. அடுத்து...

    மோடி.

    குஜராத்தில் சத்தியத்தை சிந்திக்கும் நேர்மையான மக்கள் சற்றே அதிகரித்துள்ளனர்..! இதனை வரவேற்போம்..!

    ஓட்டரசியலில் இதுவரை...

    குஜராத்தியில் மட்டுமே பேசிய மோடி இப்போது ஹிந்தியில் பேச ஆரம்பித்து இருப்பது... மத்திய அரசின் பிரதமர் கனவு என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால். அந்தோ பரிதாபம்..! இமாச்சல் பிரதேசம் இந்தியாவில் அல்லாவா இருக்கிறது..? குஜராத் மட்டுமே பிரதமர் பதவிக்கு போதாதே..?

    ஹா..ஹா..ஹா.. மோடிக்கு கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை... தாடிக்கும் ஆசை..!

    ReplyDelete
  23. சகோ முஹம்மது ஆஷிக்!

    //குஜராத்தியில் மட்டுமே பேசிய மோடி இப்போது ஹிந்தியில் பேச ஆரம்பித்து இருப்பது... மத்திய அரசின் பிரதமர் கனவு என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால். அந்தோ பரிதாபம்..! இமாச்சல் பிரதேசம் இந்தியாவில் அல்லாவா இருக்கிறது..? குஜராத் மட்டுமே பிரதமர் பதவிக்கு போதாதே..?//

    கனவு யார் வேண்டுமானாலும் எப்படியும் காணலாம் இல்லையா? மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் பிஜேபிக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச ஓட்டும் காங்கிரஸூக்கு சென்று விடும். அது காங்கிரஸை மிக எளிதாக வெற்றியுறச் செய்யும்.

    ReplyDelete
  24. //இது தவறு. அவர் கட்டயமாக உடன்கட்டை ஏறுவதைத்தான் தவறு என்று சொன்னார்//

    அப்போ தானாக உடன்கட்டை ஏறுவதை சரி என்கிறீர்களா? வெளங்கிடும்.

    ஒளரங்கசீப் காலத்தில் இதற்காக சட்டமே இயற்றப்பட்டு உடன்கட்டை ஏறுதல் முற்றாக தடுக்கப்பட்டது.

    'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!

    ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

    விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

    ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
    Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339

    ReplyDelete
  25. நித்திய சிறீக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடகி அவர்..கவலையாகத்தான் இருக்கின்றது..

    ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கின்றேன்

    ReplyDelete
  26. திரு மலர் மன்னன்!

    //ஹிந்து மதத்தின் எந்த ஸ்ருதி, ஸ்மிருதியில் பெண்களைப் பொட்டுக் கட்டி விட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவும்.//

    தேவதாசிகளை ருத்திர கன்னிகை என்றே பல ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

    சைவ சமயக் குறவரான திருநாவுக்கரசர்

    அருமணித்தடம் பூண் முலையரம்பையரொ டருளிப் பாடியர்
    ஊமையிற்றொழுவர் உருத்திரபல் கணத்தார்

    என்று அழகு தமிழில் பாடுகின்றார். சுந்தர மூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியாரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் யார்? எந்த குலம்? அவர் ஒரு தேவரடியார். தேவதாசி குலத்தில் பிறந்தவர். இந்த இருவரின் காதலுக்கு சிவ பெருமானே தூதாக சென்றதாக இந்து மத புராணங்கள் கூறுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் 400 தேவதாசிகள் பணி புரிந்ததாக விபரம் உள்ளது. இந்து மத கடவுளே தேவதாசி காதலுக்கு தூது போனதாக வரும் போது வேறு எந்த ஆதாரத்தை மலர் மன்னன் கேட்கிறார்?

    மேலும் ஆண்டாள் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோர்களைப் பற்றி கண்ணியம் கருதி நான் எழுதவில்லை.

    அல்லது இந்த தேவதாசி முறை ஏன் நமது சமூகத்தில் ஊடுருவியது? அதற்கு யார் காரணம என்பதை மலர் மன்னன் விளக்குவாரா

    குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களை கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு தேவரடியார் (தேவடியாள் என்றுதான் வழக்கில் சொல்லுவார்கள்) என்று முத்திரை குத்தும் கேவலமான முறை ஒழித்துக்கட்டப் பட்டது நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்!
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அம்மையார்தான் இதற்கான மசோ தாவை முன்மொழிந்தார். அதற்கும் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு! - அதிலும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    "தாசிகுலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக் கள்ளன் என்று கூடக் கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.
    சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதைத் திரும்பச் செல்ல விரும்பு கிறேன். தாசிகள் கோயில் பணிக் கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரதநாட்டியக் கலை அழிந்து விடும். ஆண்டவன் கட்ட ளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயம் ஆகும்!" - என்று வீர உரை நிகழ்ததியதை மலர் மன்னன் மறுக்க முடியுமா?


    .

    ReplyDelete
  27. திரு மலர் மன்னன்!

    //அதென்ன அரேபியனுக்கு இத்தனை வக்காலத்து வாங்கும் அடிமைப் புத்தி? அரேபியன் இங்கு வந்து மணம் செய்து சொற்ப காலம் அனுபவித்துவிட்டுத் தூக்கி எறிந்து செல்வது நம் நாட்டு ஏழை முஸ்லிம் பெண்களைத்தான் என்கிற தார்மிகக் கோபம் கூட வராத அளவுக்கா அரேபிய மோகம் தலைக்கு ஏற வேண்டும்?//

    இங்கு யாருக்கும் எந்த அரேபிய பாசமும் இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. எந்த நாட்டுக்கு சென்றாலும் உழைத்தால்தான் அதற்கு தக்க ஊதியம் கிடைக்கும். வயதான அரபுகள் ஹைதரபாத் போன்ற நகரங்களில் வந்து சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதை நான் என்று ஆதரித்தேன். இது முற்றாக தடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு திருமணம் நடக்க யார் காரணம்? உங்களைப் பொன்ற உயர்சாதிக் காரர்கள் இரண்டு சதவீதமே இருந்து கொண்டு என்பது சதமான அரசு வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளீர்கள். முஸ்லிம்களுக்கு அவ்வளவு லேசில் அரசு வேலைகள் கிடைப்பதில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு படிப்பும் பறிக்கப்பட்டது. அரசியலில் இருந்தும் ஓரம் கட்டப்பட்டோம். வறுமை விளையாடும் ஒரு குடும்பத்தில் தனது மகளுக்கு வெளி நாட்டில் பண உதவியோடு திருமணம் நடைபெறுகிறது என்பதால் அரை மனதோடு அந்த பெற்றோர் சம்மதிக்கின்றனர்.

    இதே பெற்றோர் நல்ல வசதியோடு கல்வியறிவோடு இருந்தால் ஒரு கிழவனுக்கு தனது மகளை கொடுப்பார்களா? எனவே தவறு நமது அரசாங்கத்திடமும், பெரும்பான்மை சமூகத்திடமும்தான் உள்ளது. அது மாறினால் இது போன்ற திருமணங்கள் தானாக குறைந்து விடும்.

    ReplyDelete

  28. //பெண் என்பவள் ஏதோ ஒரு பண்டம் என்பது போலவும் பண்ட மாற்று போலப் பேசப்படுவதாகவும் அல்லவா உள்ளது? இதைப் பெருமையுடன் எட்டுத்துக்காட்டும் மனப் போக்கை என்ன சொல்ல? இது என்ன ஸிண்ட்ரோம்?
    -மலர்மன்னன்//

    அன்றைய காலங்களில் ஆதரவற்ற அனாதைகளை பராமரிக்க தற்போது உள்ளது போன்ற விடுதிகள் கிடையாது. அந்த பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காக சமூதாய தலைவர்களிடம் தஞ்சம் அடைவார்கள். அந்த தலைவர் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அந்த பெண்களை உரிய மணமகனுக்கு திருமணம் முடித்து கொடுப்பது அந்த காலத்து வழக்கம். இது நம் நாட்டிலும் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்தது. அவ்வாறு ஒரு ஆதரவற்ற பெண் நபிகளிடம் வந்து 'தங்களின் பாதுகாப்பில் இருந்து கொள்கிறேன்' என்று சொல்லி நபி குடும்பத்தாரோடு தங்கி கொள்கிறார். அந்த நேரத்தில்தான் ஒரு நபி தோழர் அந்த பெண்ணை தான் மணந்து கொள்வதாக அனுமதி கேட்கிறார். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

    ReplyDelete
  29. அண்ணாச்சி அந்தப் பாடகியின் கணவர் மரணத்தில் உங்களின் பங்கு ஏதாவது உள்ளதா?

    ReplyDelete
  30. //அண்ணாச்சி அந்தப் பாடகியின் கணவர் மரணத்தில் உங்களின் பங்கு ஏதாவது உள்ளதா?//

    ஆம்.... என் பங்கும் உள்ளது. ஒரு உயிரை அநியாயமாக போக்கிக் கொள்ள ஒரு மனிதனுக்கு உரிமையில்லை என்ற செய்தியை அவரிடம் சேர்ப்பிக்க முடியவில்லையே...ஒரு தமிழனாக இருந்து இதைக் கூட செய்யவில்லையே என்று மனம் வருத்தப்பட்டது உண்டு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)