Wednesday, July 13, 2016

காஷ்மீர்: ஆபத்திலும் மனித நேயம் காக்கும் முஸ்லிம்கள்!



ஸ்ரீநகர்: கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தங்களது உயிரை பணயம் வைத்து விபத்தில் சிக்கித்தவித்த அமர்நாத் யாத்திரை பக்தர்களை பத்திரமாக மீட்டுள்ளனர் அங்குள்ள இஸ்லாமியர்கள்.

கஷ்மீர் மாநிலத்தில் ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச்சேர்ந்த தீவிரவாதி வாணி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அங்கு காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டடு. இந்த மோதல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையில் இச்சம்பவத்தில் 30ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களை ஏற்றி வந்து கொண்டிருந்த மினி பேருந்து பிஜிபெஹரா என்னும் பகுதியில் விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் பேருந்தின் டிரைவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 20 ற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட பிஜிபெஹரா மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் தங்களது உயிர்களை துச்சமென மதித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தங்களது ஊரில் பெரிய அளவில் பிரச்சனை நடந்து கொண்டிருந்த போதும், மனித நேயத்தை மறந்துவிடாமல் பாதிக்பட்டவர்களை ஓடி வந்து பாதுகாத்தனர். இது கஷ்மீர் மக்களுக்கே உரித்தான சிறந்த பண்பாகும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து மனித நேயத்திற்காக போராட வேண்டும் என இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

தகவல் உதவி
நியூ இந்தியா
13-07-2016

http://www.newindia.tv/news/india/item/766-muslims-rescue-amarnath-pilgrims-in-an-accident-in-kashmir#sthash.FhYOM2pR.dpuf

2 comments:


  1. மிகவும் நல்ல பதிவு.
    நன்றி.
    எல்லா மதஙகளும் இந்த உலகத்திற்கு சிறந்த ஆண்களையும் பெண்களையும் வழங்கி உள்ளது என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

    உண்மைதான். நல்லவா்கள் ஏராளமாக உள்ளாா்கள்.

    ReplyDelete

  2. சுயநலவாதி சுவனப்பிாியன். காஷ்மீாில் பிாிவினை வாதிகள் -பாக்கிஸ்தான ஆதரவு காடையா்கள் செய்யும் அட்டுழியங்கள் குறித்து இதுவைர தாங்கள் எந்த கண்டனத்தையும் தொிவித்து எந்த பதிவையும் போடவில்லை.ராணுவத்தை குறை சொல்லி ஒரு பதிவை போட்டுள்ளீா்கள். ஒரு தலைப்பட்டசமான தங்களது செயல்பாடு அநியாயமானது.பயங்கரவாத முஸ்லீம்களால் இந்துக்கள் நட்டப்பட்டால் தாங்கள் கண்களை இறுக மூடிக் கொள்வீா்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)