Wednesday, April 18, 2018

உபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை!



உபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை!

உபியின் கான்பூருக்கு பக்கத்தில் உள்ள இடாவா வட்டம். இங்குள்ள கிமாவ் கிராமத்தில் சந்தியா மற்றும் அவரது தங்கை சாலு என்ற இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தியா 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இத்தனை வருடம் கஷ்டப்பட்டு வளர்த்து இன்று துப்பாக்கிக்கு இரையாக கொடுத்தால் பெற்றவர்களின் மனது என்ன பாடுபடும். சந்நியாசி யோகி ஆதித்யநாத்துக்கு இந்த வலி தெரிய வாய்ப்பில்லை. போலீஸ் விசாரணை தொடர்கிறது. காவிகளின் ஆட்சியில் ரிப்போர்ட் எவ்வாறு எழுதப்படும் என்பது நமக்கு நன்றாக தெரியும்.

இந்த நாட்டை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
17-04-2018



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)