கம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகையை முடித்து விட்டு சந்தோஷமாக வெளியேறும் சீன முஸ்லிம்கள். கணவனும் மனைவியும் எவ்வளவு சந்தோஷமாக வெளியாகிறார்கள்.
இன்றும் தமிழகத்தில் பெண்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கும் சுன்னத் ஜமாத் முத்தவல்லிகள் இனியாவது பெண்களை அனுமதிப்பார்களாக!
போட்டோ கிளிக்கியது.... Barakath Ali
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
நூல் : முஸ்லிம் (754)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (751)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (757)

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)