Thursday, June 07, 2018

என்னை கவர்ந்த இஸ்லாம் - 23


7 comments:

  1. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷ சரிதம் இயற்றிய பாணன் என்ற ஸம்ஸ்க்ருத கவிஞன் செப்புகிறான்-- “எங்கள் நாட்டு மக்களுக்குஇந்துக்களுக்கு கடல் என்பது ஒரு கால்வாய் போல; பூமி என்பது முற்றத்தில் கிடக்கும் கல் மேடை போல" என்று. அதாவது கடற் பயணத்தில் வல்லவர்கள் இந்துக்கள் என்பது இதன் கருத்து.

    “அங்கணவேடி வஸுதா குல்யா ஜலாப்திஹி” - ஹர்ஷ சரித

    ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இதற்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளில் புகழ் கொடி நாட்டியதை நாம் அறிவோம். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களும், கலிங்கர்களும் கடலாதிக்கம் செலுத்தினர். கீழைக் கடலிலும் மேலைக் கடலிலும் குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.



    ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ்ப் பழமொழி; இதை பாணனும் பாடுகிறான்:

    ‘அப்ரமனேன ஸ்ரீ சமாகர்ஷனே’ – ‘லக்ஷ்மியானவள் கடல் பயணத்தின் மூலம் வருகிறாள்’ என்பான்.



    சூத்ரகன் என்ற சம்ஸ்க்ருத நாடக ஆசிரியன் 1800 ஆண்டுகளுக்கு முன்பு ‘மிருச்ச கடிகம்’ என்ற நாடகத்தை எழுதினான். இதை பண்டித கதிரேசன் செட்டியார் ‘மண்ணியல் சிறுதேர்’ என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் வசந்த சேனை என்ற விலைமாதரின் வீட்டில் சாருதத்தன் என்னும் கதாநாயகன் நகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு விதூஷகனை (நகைச் சுவை நடிகன்) அனுப்புகிறான்.


    அவன் அவளது எட்டு அடுக்கு வீட்டைப் பார்த்து-- அரண்மனையைப் பார்த்து-- மூக்கில் விரல் வைத்து, வசந்த சேனையின் தோழியிடம் வியக்கிறான்—‘அம்மையே! என்ன கடல் வாணிபம் செய்வதில் வல்லவரோ நீவீர்! இவ்வளவு செல்வம் எங்கிருந்து வந்ததோ!’

    ‘பவதி கிம் யுஸ்மாகம் யானபாத்ராணி வஹந்தி!’



    ஆக அக்காலத்தில் யாரிடமாவது செல்வம் அளவுக்கு மீறி இருந்தால் அது கடல் வர்த்தகம் மூலம் சம்பாதித்ததாகப் பேசுவர்.



    மஹாபாரதம் சபா பர்வத்தில் அனந்ததாகி (துருக்கி நாட்டு அண்டியோக்), ரோமா ( இதாலி நாட்டு ரோம்), யவனபுரி ( எகிப்திலுள்ள அலெக்ஸான்ட்ரியா) முதலிய துறைமுகங்கள் குறிப்பிடப்படுகின்றன.


    சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை ஒரு மஹா நாயகன் - கப்பல் வணிகன் (மாநாய்க்கன்); கோவலனின் தந்தை நில வணிகன் (மஹா சார்த்தவாஹ) மாசாத்தன்.



    சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய குறிப்புகள் நிறைய உள. சுங்க வரி விதித்து புலி முத்திரை குத்தியது வரை சுவையான செய்திகள் கிடைக்கின்றன.



    மஹா பாரதத்தில் யக்ஷப் ப்ரஸ்னம் ( பேயின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் கொடுத்த பதில்கள்) பகுதியில் ஏரியைப் பாதுகாக்கும் பிராஹ்மணப் பேய் (பிரம்ம ராக்ஷஸ்) பல கேள்விகளைக் கேட்கிறது. அதில் ஒரு கேள்வி

    யார் நண்பன்?

    அதற்கு தர்மனின் (யுதிஷ்டிரன்) பதில்:-

    ‘பயணம் செய்வோனுக்கு வண்டி நண்பன்; வீட்டில் உள்ளோருக்கு மனைவி நண்பன்’-- என்று விடை பகர்வான்.

    இது வியாபாரி ஒருவனை மனதில் கொண்டு தர்மன் அளித்த பதில் என்பது ஸம்ஸ்க்ருத சொற்றொடரைக் காண்கையில் ‘உள்ளங்கை நெல்லிக் கனி’ என விளங்கும்

    ‘சார்தஹ ப்ரவசதோ மித்ரம் பார்யா மித்ரம் க்ரிஹசதஹ’ (ஆரண்யக பர்வம்).



    துலுக்கர் கையில் சிக்கிய குதிரை வியாபாரம்



    முதலில் இந்துக்கள் கைகளில் இருந்த குதிரை வர்த்தகம் மெதுவாக அராபியர் கைகளுக்கு மாறியது. குதிரைகளுக்கான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் அராபிய மயமாயின. கி.மு 1400ல் துரக (குதிரை) ஸ்தானத்தில் ஸம்ஸ்க்ருத்த்தில் குதிரைகளைப் பழக்கிய தகவல்கள் மிகவும் பிரஸித்தம்- துரக ஸ்தானம் என்பது துலுக்கர் கைகளில் சிக்கியவுடன் ‘துருக்கி’ ஆனது. துருக்கன் என்பது ‘துலுக்கன்’ ஆனது.

    ReplyDelete
  2. ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இதற்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளில் புகழ் கொடி நாட்டியதை நாம் அறிவோம். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களும், கலிங்கர்களும் கடலாதிக்கம் செலுத்தினர். கீழைக் கடலிலும் மேலைக் கடலிலும் குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.



    ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ்ப் பழமொழி; இதை பாணனும் பாடுகிறான்:

    ‘அப்ரமனேன ஸ்ரீ சமாகர்ஷனே’ – ‘லக்ஷ்மியானவள் கடல் பயணத்தின் மூலம் வருகிறாள்’ என்பான்.



    சூத்ரகன் என்ற சம்ஸ்க்ருத நாடக ஆசிரியன் 1800 ஆண்டுகளுக்கு முன்பு ‘மிருச்ச கடிகம்’ என்ற நாடகத்தை எழுதினான். இதை பண்டித கதிரேசன் செட்டியார் ‘மண்ணியல் சிறுதேர்’ என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் வசந்த சேனை என்ற விலைமாதரின் வீட்டில் சாருதத்தன் என்னும் கதாநாயகன் நகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு விதூஷகனை (நகைச் சுவை நடிகன்) அனுப்புகிறான்.


    அவன் அவளது எட்டு அடுக்கு வீட்டைப் பார்த்து-- அரண்மனையைப் பார்த்து-- மூக்கில் விரல் வைத்து, வசந்த சேனையின் தோழியிடம் வியக்கிறான்—‘அம்மையே! என்ன கடல் வாணிபம் செய்வதில் வல்லவரோ நீவீர்! இவ்வளவு செல்வம் எங்கிருந்து வந்ததோ!’

    ‘பவதி கிம் யுஸ்மாகம் யானபாத்ராணி வஹந்தி!’



    ஆக அக்காலத்தில் யாரிடமாவது செல்வம் அளவுக்கு மீறி இருந்தால் அது கடல் வர்த்தகம் மூலம் சம்பாதித்ததாகப் பேசுவர்.



    மஹாபாரதம் சபா பர்வத்தில் அனந்ததாகி (துருக்கி நாட்டு அண்டியோக்), ரோமா ( இதாலி நாட்டு ரோம்), யவனபுரி ( எகிப்திலுள்ள அலெக்ஸான்ட்ரியா) முதலிய துறைமுகங்கள் குறிப்பிடப்படுகின்றன.


    சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை ஒரு மஹா நாயகன் - கப்பல் வணிகன் (மாநாய்க்கன்); கோவலனின் தந்தை நில வணிகன் (மஹா சார்த்தவாஹ) மாசாத்தன்.



    சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய குறிப்புகள் நிறைய உள. சுங்க வரி விதித்து புலி முத்திரை குத்தியது வரை சுவையான செய்திகள் கிடைக்கின்றன.



    மஹா பாரதத்தில் யக்ஷப் ப்ரஸ்னம் ( பேயின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் கொடுத்த பதில்கள்) பகுதியில் ஏரியைப் பாதுகாக்கும் பிராஹ்மணப் பேய் (பிரம்ம ராக்ஷஸ்) பல கேள்விகளைக் கேட்கிறது. அதில் ஒரு கேள்வி

    யார் நண்பன்?

    அதற்கு தர்மனின் (யுதிஷ்டிரன்) பதில்:-

    ‘பயணம் செய்வோனுக்கு வண்டி நண்பன்; வீட்டில் உள்ளோருக்கு மனைவி நண்பன்’-- என்று விடை பகர்வான்.



    இது வியாபாரி ஒருவனை மனதில் கொண்டு தர்மன் அளித்த பதில் என்பது ஸம்ஸ்க்ருத சொற்றொடரைக் காண்கையில் ‘உள்ளங்கை நெல்லிக் கனி’ என விளங்கும்

    ‘சார்தஹ ப்ரவசதோ மித்ரம் பார்யா மித்ரம் க்ரிஹசதஹ’ (ஆரண்யக பர்வம்).



    துலுக்கர் கையில் சிக்கிய குதிரை வியாபாரம்



    முதலில் இந்துக்கள் கைகளில் இருந்த குதிரை வர்த்தகம் மெதுவாக அராபியர் கைகளுக்கு மாறியது. குதிரைகளுக்கான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் அராபிய மயமாயின. கி.மு 1400ல் துரக (குதிரை) ஸ்தானத்தில் ஸம்ஸ்க்ருத்த்தில் குதிரைகளைப் பழக்கிய தகவல்கள் மிகவும் பிரஸித்தம்- துரக ஸ்தானம் என்பது துலுக்கர் கைகளில் சிக்கியவுடன் ‘துருக்கி’ ஆனது. துருக்கன் என்பது ‘துலுக்கன்’ ஆனது.



    ஆயினும் அராபியர்கள் அவ்வளவு எளிதில் இந்திய வணிகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம் முழுதும் துலுக்கர்கள் படை சென்றபோது அந்த நாடுகள் அட்டைப் பெட்டிகள் சரிந்து போவது போல சரிந்து மடிந்தன. ஆனால் இந்தியாவில் துலுக்கர் படைகள் காஸி நகரை அடைய 450 ஆண்டுகள் ஆயின. ஸோமநாதபுரத்தைக் கொள்ளையடிக்க கஜினி முகமது என்னும் அயோக்கிய அரசன் 17 முறை படை எடுக்க வேண்டி இருந்தது அப்படியும் கூட ப்ருத்விராஜ், சுந்தர பாண்டியன் போன்றோர் காட்டிக் கொடுத்ததாலேயே ஒரு கோரி முகமதுவும், ஒரு மாலிக்காபூரும் நுழைய முடிந்தது. ஆக 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த இந்து வணிகம் சிறுகச் சிறுக அராபியர் கைகளில் வீழ்ந்தன. அவர்கள் மலேஸியா, இந்தோ நேஷியா போன்ற நாடுகளை துலுக்க நாடுகளாக மாற்றினர். வணிகர்களாக வந்த ஆங்கிலேயரும் துலுக்கர்களும் மத த்தையும் பரப்பினர். இந்துக்கள் அதைச் செய்யத் தவறினர்.வீழ்ந்தது பாரதம்.நம் தாய்நாடு.

    ReplyDelete
  3. ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம்

    ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம்

    பாகிஸ்தானில் லாகூரில் ஒரு கல்லறையில் உபநிஷத் மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கிலேயர் கல்லறையில்!

    ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளதாக பல, திராவிடங்கள் எழுதிக்கொண்டே இருக்கும்; ஆனால் அங்கு போய் வந்த தமிழர்கள் எனக்கு போன் செய்து, ‘ஸார் அப்படி அங்கு ஒன்றும் இல்லையே’ என்பர். என் நண்பர்கள் ஆண்டுதோறும் அங்கு சென்று கல்லறைக்கு மாலை போட்டு அஞ்சலி செய்துவருகின்றனர். அவர்களும் பார்த்ததில்லை-

    ReplyDelete
  4. அதே ஆக்ஸ்போர்டு நகரில் இருந்து வந்த மற்றொரு பெரியார் வூல்னர் (A C Woolner). ஜி.யு.போப், தமிழில் இருந்த திருவாசகம், நாலடியார், பல புற நானூற்றுப் பாடல்கள், திருக்குறள் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். அது போல வூல்நரும் பல ஸம்ஸ்க்ருத நூல்களை மொழி பெயர்த்தார். அவர் ஸம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், பாரசீக மொழி, சீன மொழி ஆகியவற்றைக் கற்றவர். பஞ்சாப் (பாகிஸ்தானின் லாகூரில் உளது) பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிற்றியவர்.

    டாக்டர் ஆல்ப்ரெட் கூப்பர் வூல்னர் 1878 மே 13ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1936ல் இறந்தார். இந்த ஆண்டுகளுக்குள் அவர் அழியாத புகழுடைய பல நூல்களைப் படைத்தார்.

    ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில் பாலி, ஸம்ஸ்க்ருத மொழிகளைப் பயின்ற அவருக்கு பல விருதுகள், மான்யங்கள் கிடை த்த பின்னர் லாகூரில் ஓரியண்டல் கல்லூரியில் பிரின்ஸிபாலாக வேலைக்குச் சேர்ந்தார்

    33 ஆண்டுகளுக்கு பஞ்சாப் பலகலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றினார்.

    அவர் எழுதிய ஆங்கில நூல்கள்

    ReplyDelete
  5. .ப்ராக்ருத மொழிக்கு ஓர் அறிமுகம்

    2.அசோகர் கல்வெட்டு மொழி

    3.பாஷா-வின் 13 ஸம்ஸ்க்ருத நாடகங்களின் மொழிபெயர்ப்பு

    4.குண்டமாலா (மல்லிகை மலர் மாலை) மொழிபெயர்ப்பு

    5.இந்திய மாணவர்களுக்கு மொழிநூல் கையேடு



    இது தவிர ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள்!



    நல்ல ஆஜானு பாஹூவான ஸரீரம் படைத்த வூல்நர் மிகவும் உயரமானர்; புகழிலும் உயர்ந்தவர். அடக்கமானவர். அவரது சிலைகள் லாகூரில் பல்கலைக் கழக வளாகம், அதன் முன்னுள்ள சாலைகளில் இடம்பெற்றுள்ளது.

    அவர் மால்டா ஜூரம் எனப்படும் ஒரு வகை பாக்டீரியா தாக்கி இறுதியில் நிமோனியாவால் 1936ல் இறந்தார். அவருடைய கல்லறை லாகூரில் உளது. அதில் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தின் புகழ் பெற்ற வாக்கியங்கள் தேவ நாகரி லிபியில் பொறிகப்பட்டுள்ளதாக 1940 ஆண்டு வெளியான நினைவு நூல் கட்டுரை ஒன்று விளம்புகிறது:-



    அஸதோ மா ஸத் கமய

    தமஸோ மா ஜ்யோதிர் கமய

    ம்ருத்யோர் மா அம்ருதம் கமய— என்பதே அந்த மந்திர வாக்கியங்கள்.



    இதன் பொருள் என்ன?



    மாயத் தோற்றத்தில் இருந்து என்னை உண்மை நிலைக்கு இட்டுச் செல்வாயாக



    இருளிலிருந்து ஒளிமயமான பாதைக்கு அழைத்துச் செல்வாயாக

    மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு கொண்டு போவாயாக



    சுருக்கமான பொருள்- வீடு பேற்றினை அருள்வாயாக; அதற்கான பாதையில் செல்ல எனக்கு அருள் புரி; வழி காட்டு

    ReplyDelete
  6. ஒரு வேடிக்கையான தகவல்
    ராபர்ட் டி நொபிலி என்று ஒரு அக்கிரமப் பாதிரியார்.

    பிராமணராக தன்னைச் சித்தரித்துக் கொண்டார். சமூகத்தில் தன்னலமற்றுச் சிறந்து விளங்கிய அக்கால பிராமணர்களை இப்படியாவது கவர முடியுமா என்று பார்த்தார்.

    அவர் செய்த அக்கிரமங்களைச் சொல்லத் தனி நூல் தான் வேண்டும்.

    கீதையின் பால் உலகெங்கும் இருக்கும் மதிப்பும் கிறிஸ்தவ மதமாற்ற வெறியர்களைக் கவர்ந்தது.

    ஆகவே எழுந்தது தான் கிறிஸ்து கீதை!

    இன்னொன்று டேவிட் கீதை!

    கிறிஸ்து கீதை

    பைபிளின் 14 அத்தியாயங்களைத் தமிழில் மொழி பெயர்த்து கீதையின் பெயரால் பைபிளை உலவ விடச் செய்த முயற்சி தான் கிறிஸ்து கீதை! இது வெற்றி பெறவில்லை. காலப்போக்கில் அழிந்தொழிந்தது!

    டேவிட் கீதா

    இது டேவிட்டின் உபதேசங்களை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்ட கீதை!

    (Sanskrit Translation of Psalams of David by W.Yates – Published from Calcutta in 1844)

    இதுவும் வெற்றி பெறவில்லை.

    அல்லா உபநிஷத்

    அக்பருக்கு ஒரு ஆசை. எல்லோரும் இஸ்லாமியராக வேண்டும் என்று!

    உபநிஷத் பெயரைச் சொன்னாலாவது ஹிந்துக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவ மாட்டார்களா என்று அவர் எண்ணவே,

    அக்பரை மகிழ்விக்க எண்ணிய ஒரு பண்டிதர் அல்லாவின் உபநிஷத் வேதத்திலேயே இருக்கிறது என்றார்.

    எங்கே அது என்று கேட்ட போது அவர் அல்லா உபநிஷத்தைத் “தயாரித்து” அக்பரிடம் காட்டினார்.

    ஆனால் இதுவும் வெற்றி பெறவில்லை.

    பொய்க்குக் கால்களே கிடையாது! ஆக அது எப்படி நடக்க முடியும், ஓட முடியும்?!


    ‘ஓம்! அஸ்மல்லம் இல்லா – மித்ரா வருணோ – திவ்யநிதத்த, இலில்லாவருணோ’ என்று அல்லா உபநிஷத் ஆரம்பிக்கிறது.

    ‘அல்லோ அல்லம் இல்லல்லாதி இல்லல்லாஹ்’ என்று அது முடிகிறது.

    ஆக ஹிந்து மதத்தை அழிக்க நடந்த முயற்சிகள் ஏராளம். அதில் போலி உபநிஷத்துகளையும் போலி கீதைகளையும் உலவ விட்டனர் மத வெறியர்கள்.

    உபநிஷத், கீதை என்ற பெயருக்கு உள்ள மகத்துவத்தை இதனால் உணரமுடிகிறது.

    நமது அரிய செல்வத்தைக் காத்து அதை நம் சந்ததியினருக்குத் தர வேண்டியது நமது கடமை அல்லவா!

    எழுமின்! விழிமின்! மதமாற்றத்தில் ஈடுபடாத ஹிந்து தர்மத்தை உலகெங்கும் பரப்புமின்!

    ReplyDelete
  7. இது தான் இந்தியா

    ஹிந்துக்களின் உயரிய குணங்கள்-சில உண்மைச் சம்பவங்கள்

    ஹிந்துக்களின் பாரம்பரிய தர்மம் சத்தியம் பேசுவது; பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது; உண்மையாக உழைப்பது; நேர்மையாக இருப்பது: எளிமையாக வாழ்வது உள்ளிட்ட பல உயரிய குணங்களைக் கொண்டதாகும்.



    இதை விளக்கும் சம்பவங்கள் கடந்த பல நூற்றாண்டுகளில் ஏராளம், ஏராளம் உண்டு.



    அதைத் தொகுத்தால் ஒரு பெரிய கலைக்களஞ்சியம் ஆகி விடும்.

    மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் பலவற்றை ஆங்கிலேயர்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர்.

    நெகிழ வைக்கும் சில சம்பவங்களை இங்கே காணலாம்.



    2

    1943ஆம் ஆண்டு!



    பிரான்சை சேர்ந்த மருத்துவக் கம்பெனி ஒன்று கல்கத்தாவில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரைத் தங்கள் தயாரிப்புகளைப் பரிந்துரைத்து விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.அதன் பிரதிநிதிகள் டாக்டரை சந்தித்தனர்.

    அப்போது அவர்கள் டாக்டரிடம் கூறி வியந்த சொற்கள் இவை:

    “நாங்கள் உலகெங்கும் சுற்றி வருகிறோம். இங்கு இந்தியாவில் பஞ்சத்தால் மக்கள் வாடி வதங்குகிறார்கள். பிச்சை எடுத்தாலும் கூட உணவு கிடைப்பதில்லை. பெரிய மளிகைக் கடைக்கு அருகில் கூட பஞ்சத்தால் மக்கள் இறப்பதைக் காண்கிறோம். ஆனால் அதிசயம் என்னவெனில் இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் அவர்கள் மளிகைக் கடையைச் சூறையாடி இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் திருடவும் இல்லை; கொள்ளை அடிக்கவுமில்லை; சூறையாடவும் இல்லை.”





    கடுமையான சோதனை காலத்தில் கூட உயிரை இழக்க ஹிந்துக்கள் தயாராக இருந்தார்களே தவிர கொள்ளையிலோ, கொலையிலோ அவர்கள் இறங்கியதில்லை!



    3

    1942ஆம் ஆண்டு. நவம்பர் மாதம்.

    கல்கத்தா ஹை கோர்ட்டைச் சேர்ந்த ஒரு பிரபல அட்வகேட் கூறியது இது:



    எங்கள் கிராமத்தில் இருந்த ஒரு விவசாயி ஒரு கனவானிடம் வேலை பார்த்து வந்தார். அந்த கனவான் அவருக்கு 10 ரூபாய் தர வேண்டும். அவர் அந்த விவசாயியிடம் அதைப் பின்னால் தருவதாகக் கூறினார். அந்த விவசாயி என்னிடம் வந்து, “ஐயா! இந்த பஞ்ச காலம் மகா கொடுமையானது. எனக்கு வேலை தந்த அந்த கனவானிடம் இரண்டு மூன்று முறை எனக்கு வர வேண்டிய பணத்தைக் கேட்பதற்காகச் சென்றேன். ஆனால் என்னால் அதைக் கேட்க முடியவில்லை. எனக்கு ஏழ்மையின் கொடுமை தெரியும். அவரும் அப்படியே அதில் வாடி இருக்கும் போது அவரிடம் எப்படி நான் கேட்பது?”





    4



    சிசு பாபு பெரிய பணக்காரர்.தர்மாத்மா. சந்தன் நகரில் வசித்து வந்தார் அவர். அவரைப் பற்றிய இரு சம்பவங்கள் உண்டு.





    ஒரு ஏழை பிராமணர் தன் பெண்ணின் கல்யாணத்திற்காக உதவி வேண்டி சிசுபாபுவைச் சந்தித்தார். மாப்பிள்ளை யார் என்று கேட்டார் சிசு பாபு. கல்யாண தேதி, கல்யாணத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பதையும் அந்த பிராமணரிடம் அவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். அங்கிருந்து சென்ற பிராமணருக்கோ ஒரே கவலை. வெளிப்படையாக உதவுகிறேன் என்று சிசுபாபு சொல்லவில்லை. உதவி செய்வாரா என்றெல்லாம் கவலைப்பட்டு உருகினார் அவர்.
    கல்யாணம் நிச்சயமானவுடன கல்யாண தேதியை சிசு பாபுவிடம் சென்று அவர் கூறினார்.

    திருமண தினத்திற்கு முந்தைய நாள் தேவையான அனைத்தையும் வழங்கிய சிசுபாபு செலவிற்கான பணத்தையும் தந்தார்.

    பிராமணரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டியது. நன்றியைத் தெரிவித்த கண்ணீர் அது.





    சிசுபாபுவின் மாளிகை வீட்டில் ஒரு பெரிய சாண்ட்லியர் விளக்கு ஹாலில் எரிந்து கொண்டிருக்கும். ஒரு நாள் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலைக்காரி வீட்டை சுத்தம் செய்யும் போது அதைத் தவறுதலாக உடைத்து விட்டார். அந்த விளக்கின் மேல் சிசுபாபு கொண்டிருந்த பிரியத்தை அவர் அறிவார். கண்ணீர் விட்டுக் கதறினார் அந்த வேலைக்காரி.
    இதைப் பார்த்த வீட்டின் திவான் (மானேஜர்) அந்த வேலைக்காரியைக் கடுமையாகத் திட்டியதோடு, அவளை அடிக்கவும் ஆரம்பித்தார்.

    கங்கையிலிருந்து திரும்பி வந்த சிசுபாபு நடந்ததை அறிந்தார்.



    மானேஜரைக் கடிந்து கொண்டார்:” அவளே தன் தவறுக்காக வருந்தி அழுகிறாள்; நீங்கள் அவளை அடிக்கிறீர்களே! இது சரிதானா?” என்றார் அவர்.

    வேலைக்காரி தேம்பித் தேம்பி அழுதாள். கடைசி வரை சிசுபாபுவிற்கு விசுவாசமாக இருந்தாள் அவள்!

    எளியவர்களிடம் பரிவு என்பது உயர்ந்தோர் குணம். ஒரு ஹிந்துவுக்கு இயல்பாகவே அது உண்டு!
    நன்றி தமிழ வேதம்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)