மெக்கா ஹரமில் தற்கொலை செய்து கொண்ட பிரான்ஸ் பிரஜை!
புனித மெக்கா ஹரமில் நேற்று வெள்ளி இரவு 9.20 மணிக்கு பிரான்ஸ் பிரஜை ஒருவர் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை இந்த அறிவீனர்கள் உணருவதில்லை. இஸ்லாம் தற்கொலையை வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பாவம் என்கிறது.
தகவல் உதவி
சவுதி கெஜட்
09-06-2018
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் (57 : 22)
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன் எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்: புஹாரி-1364
https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/954477918066483
ReplyDeleteபல கோத்திரங்களைப்படைத்த அல்லா பல மதங்களையும் படைத்வன் ஆகின்றான்.அரேபிய கலாச்சார சமய அனுஷ்டானங்களை மட்டும் ஏற்று அல்லா படைத்த சமய அனுஷ்டானங்களை அழிக்க போா் தொடுத்து முட்டாள்தனமாக ஜிகாத்காத் என்ற வீண் போரில சாகின்றவா்கள் அனைவருக்கும்உண்மையில் இறைவன் கொலை செய்த தண்டனையை தற்கொலை செய்து கொண்டவனுக்கு அளிக்கும் தண்டனையை அளிக்க வேண்டும்.