மேலப்பாளையத்தில்
நபி வழியில் இறந்த உடலை அடக்க மறுப்பு!
இறந்த உடலை வாரிசுகள்
தொழ வைத்து அடக்கம் செய்வது நபி வழி. அதனை நடைமுறைப்படுத்த ஏகத்துவ வாதிகள் முயலும்
போது பல ஜமாத்துகள் முட்டுக் கட்டைப் போடுகின்றன. இவ்வாறு அனுமதித்தால் முல்லாக்களுக்கு
மதிப்பு இல்லாமல் போய் விடும் என்பதால் ஹஜ்ரத்மார்கள் மார்க்கம் தெரியாத நிர்வாகிகளை
தூண்டி விட்டு குழப்பம் விளைவிக்கின்றனர்.
இறந்த உடலை அடக்கும்
இடமானது சகலருக்கும் பொதுவானது. சுன்னத் ஜமாத், தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர்களின் முன்னோர்கள் தங்கள் சொத்துக்களை
தானமாக பள்ளிக்கு கொடுத்த இடங்களே இவை. இவ்வாறு சகலருக்கும் பொதுவான ஒரு இடத்தை பூட்டி
வைத்துக் கொண்டு பிரச்னை பண்ணினால் சம்பந்தப்பட்டவர்கள் பூட்டை உடைத்து உள்ளே செல்லத்தானே
செய்வார்கள்? இனியாவது வேடிக்கை
பார்க்காமல் பாபநாசம் பள்ளி நிர்வாகிகள் எடுத்த முடிவைப் போல் தமிழகமெங்கும் நிர்வாகிகள்
முடிவெடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பார்களாக!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)