Sunday, July 08, 2018

பெட்ரோல் குண்டு நாடகம்

பெட்ரோல் குண்டு நாடகம்
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவின் மாநிலச் செயலாளர் காளி குமார், மீஞ்சூர் நகரச் செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தங்களின் கார் மீது தாங்களே பெட்ரோல் குண்டுவீச ஏற்பாடு செய்து போலிசிடம் பிடிபட்டனர் (08.07.18).
இந்து மக்கள் கட்சியை விளம்பரப்படுத்தவும், தங்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்காகவும் வேண்டி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம்.
இதற்கு என் அண்ணன் மகன் ரஞ்சித்தை பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி எங்கள் கார் மீது வீச செய்தோம் என அர்ஜுன் சம்பத்தின் கூட்டாளிகள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.


1 comment:

  1. இந்துக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்என்று நினைப்வா்கள் தேவாரம் திருவாசகம் அருட்பெருஞ்சோதி அகவல் போன்ற பக்தி பாடல்களை பாட கற்றுக் கொடுக்க வேண்டும்.
    பதமாசனம் பிரணாயாமம் சுரிய நமஸ்காரம் போன்ற உடல்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.சாமி ஆடுதல் பலி இடுதல் தீ மிதித்தல் போன்ற பழக்க வழக்கங்களை நிறுத்த முயலவேண்டும். இளைஞா்கள் பிரம்சச்சரியம் கடைபிடித்து தொழில் முனைவரைக வளர ஆலோசனை வழங்க வேண்டும்.

    இந்து மக்களை சாதி அடிப்படையில் மரியாதை குறைவாக நடத்தும் நடவடிக்கைகள் உள்ள இடங்களில் அதை எதிா்த்து பிரச்சாரம் செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட சாதி மக்களுக்கு சுய கௌரவத்தை பெற்றுக் கொடுக்க முயல வேண்டும்.

    அநாதைகள் முதியவா்கள் உயா் மதிப்பெண் பெற்ற ஏழைகளுக்கு படிக்க தொழில் திறன் பெற உதவ வேண்டும். இப்படி ஆயிரம் திட்டங்கள் இருக்கும் போது இப்படிப்பட்ட வீண் வேலைகளில் ஈடுபடுவது அதா்மம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)