Wednesday, November 28, 2018

ஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிறார்!

ஆஸ்திரேலிய மக்களுக்கும் நபிகள் நாயகம் தேவைப்படுகிறார்!
'தண்ணீர் அதிகம் உள்ள நீரோடைகளில் இருந்தாலும் தேவையில்லாமல் நீரை வீணாக்காதீர்கள்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள் என்ற வாசகம் பொறித்த தண்ணீர் பாட்டிலைத்தான் ஆஸ்திரேலியாவில் விநியோகிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த தண்ணீரை விநியோகிக்கும் நிறுவனம் மக்களுக்கு சேவை செய்வதோடு ஒரு நபி மொழியையும் ஞாபகப்படுத்துகிறது. அதோடு தண்ணீரின் சிக்கனத்தையும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
ஆஸ்திரேலியா போன்ற நவ நாகரிக உலகுக்கும் இன்றைய கால கட்டத்தில் அரபு தேசத்தில் பிறந்த நபிகள் நாயகத்தின் அறிவுரைகள் தேவைப்படுகிறது. உலக மக்களின் தலைவர் என்றால் அது நபிகள் நாயகம் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பதை இந்த நிகழ்வும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)


2 comments:

  1. அழகிய முன்மாதிரி

    ReplyDelete
  2. எவனோ ஒரு முட்டாள் சிரியா யேமன் ஆப்கானிஸ்தான் அளவிற்கு ஆஸ்திரேலியாவை சீரழிக்க திட்டமிட்டு வருகின்றான். எச்சரிக்கை தேவை.

    ஆபத்தான கருத்து.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)